அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்:
அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்:
“எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!
“எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
“இன்னும், அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! அந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு நிச்சயமாக நீ அருள் புரிந்து விட்டாய் – அதுவே மகத்தான வெற்றியாகும்” (என்றும் கூறுவர்). (அல்-குர்ஆன் 40:7-9)
மேற்கண்ட வசனங்களின் மூலம் நாம் பெறும் படிப்பினைகள்:
1) தாம் செய்த தவற்றை உணர்ந்து, இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி இறைவழியில் நடப்பவர்களுக்கு அர்ஷை சுமந்து நிற்கும் மற்றும் அதை சுற்றியிருக்கும் மலக்குகள் பிரார்த்தனை செய்வார்கள்
2) இத்தகையவர்களின் பாவங்களை மன்னிக்குமாறும், அவர்களை நரகத்திலிருந்து பாதுகாக்குமாறும் இறைவனிடம் வேண்டுவார்கள்
3) மேலும் இவர்களின் முதாதையர்களுக்காகவும், அவரின் மனைவி மக்களுக்காகவும் பிரார்த்தித்து அவர்கனைவரையும் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்யுமாறு இறைவனிடம் வேண்டுவார்கள்
4) மேலும் அவர்களைத் தீமைகளிலிருந்து பாதுகாக்குமாறும் இறைவனிடம் வேண்டுவார்கள்
அல்லாஹ் மற்றும் அவனது திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் விதித்த ஏவல் மற்றும் விலக்கல்களை முறையாகப் பேணி நடப்பதன் மூலம் இப்பேரண்டத்தின் அதிபதியாகிய கருனைமிகு அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலக்குமார்களின் பிரார்த்தனைக்கு உரியவர்களாக நாமும் ஆவதற்கு ஆசைகொள்வோமாக!
No comments:
Post a Comment