அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Saturday, November 19, 2016

நபி (ஸல்) அவர்களின் உரை



தினம் ஒரு நபி மொழி


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்துவிடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப் போவது குறித்து “எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்” என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பெற்றுள்ளோம்” என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள். மேலும், “அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்” என்று கூறுவார்கள். பிறகு “ஒவ்வோர் இறை நம்பிக்கையாளருக்கும் அவரது உயிரைவிட நான் நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். (ஆகவே,) எவர் (இறக்கும்போது) ஒரு செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ அது அவருடைய குடும்பத்தாருக்குரியதாகும். எவர் (இறக்கும்போது) ஒரு கடனை அல்லது (தம்மைத் தவிர வேறு எவரும் பராமரிக்க இல்லை என்ற நிலையில்) குடும்பத்தினர்களை விட்டுச்செல்கின்றாரோ அவர்கள் தங்கள் தேவைகளுக்காக என்னை அணுகட்டும். என்மீதே (அவர்களைப் பராமரிப்பதும், அவர்களது கடனை அடைப்பதும்) பொறுப்பாகும்” என்று கூறினார்கள்.

No comments:

Post a Comment