அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Tuesday, November 29, 2016

சிறந்த 500 போட்டியாளர்களில் இருந்து, சவூதி பெண் விருது பெற்றார்...!

வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்ககும் நிறுவனங்களை நிறுவகிப்பவர்களுக்கு உலக அளவில் வழங்கபடும் விருது தான் Stevie

2016 ஆண்டிர்கான இந்த விருதை சவுதியை சார்ந்த சகோதிரி நுஹா யுசுப் பெற்று சாதனை படைத்துள்ளார்

உலக அளவில் ஆஸ்கர் விருதுக்கு இணையாக கருத படகின்ற இந்த விருதை ஒரு இஸ்லாமிய சகோதிரி பெற்றிருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது

சவுதி அரேபியாவில் சேவை நிறுவனங்களையும் தொழில் நிறுவனங்களையும் நடத்திவரும் அவர் உலக அளவில் அந்த விருதுக்காக போட்டி போட்ட உலகின் முக்கிய 50 நாடுகளை சார்ந்த 500 போட்டியாளர்களுக்கு மத்தியில் இருந்து நுஹா யுசுப் இந்த விருதுக்காக தேர்வு செய்ய பட்டார்

இது பற்றி அவர் குறிப்பிடும் போது

எனது மார்க்கமும் எனது நாடும் தந்த ஊக்கமே என்னை இந்த உயர்ந்த இடத்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. நான் மேலும் சிறப்பான முறையில் எனது சேவைகளை செய்ய முயர்ச்சிப்பேன் என்றும் அவர் கூறினார்

“நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை!- பாகம் 1


அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை!
நம்மில் ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வை எடுத்துக்கொண்டால், அவனுடைய சிறுபிராயத்தில் காலை எழுந்தது முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் பள்ளிப்படிப்பு, பின்னர் மாலையில் ஒன்றிரண்டு மணி நேரம் டியூசன் வகுப்புகள், பின்னர் ஓரிரு மணி நேரம் விளையாட்டு என்று அவனுடைய இளம்பருவத்தின் வயது கழிகின்றது. ஓரளவு மார்க்கப்பற்றுள்ள சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் காலையிலோ அல்லது பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வந்த பின்னர் மாலையிலோ அல்-குர்ஆனை (பொருளறியாமல்) ஓதுவதற்கும் இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படைகளை பயில்வதற்கும் அனுப்புகின்றனர். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதை செய்வதில்லை!
முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற ஒரு சில கல்விக்கூடங்களிலே உலகக் கல்வியுடன் சேர்த்து இஸ்லாத்தின் அடிப்படைகள் சிலவற்றையும் சேர்த்து கற்றுத் தருகின்றனர். இவ்வாறு மார்க்கத்தின் அடிப்படையை சிறுபிராயத்திலேயே கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் மிக மிக அரிதானதாகவே இருக்கின்றது. ஏன் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களிலே கூட மேலை நாட்டின் நாகரீகத்தைப் பின்பற்றி அந்நிறுவனங்களிலே படிக்கின்ற குழந்தைகளுக்கு, அக்குழந்தைகளின் பெற்றோர் தனிப்பட்ட முறையில் அக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தாலே தவிர, அந்தப் பள்ளியில் படிக்கின்ற குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவு என்பதே இல்லாமல் போகின்றது.
இதைவிட வேதனை என்னவென்றால், சில முஸ்லிம் பெயர்தாங்கிகளால் நடத்தப்படுகின்ற ‘முஸ்லிம் சிறுபாண்மையின’ பள்ளிக் கூடங்களிலே வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுவதற்கு கூட வாய்ப்புத் தராமல் பள்ளி நேரங்களை அமைத்திருக்கின்றார்கள். மதிய உணவுக்காக விடப்படுகின்ற சொற்ப இடைவெளி நேரத்தில் மதிய உணவருந்தினால் ஜூம்ஆவுக்குச் செல்ல இயலாது; ஜூம்ஆவுக்குச் சென்றால் மதிய உணவருந்த முடியாமல் பட்டினியாக இருக்க வேண்டியது தான்!
ஜூம்ஆவிற்கே இந்த நிலை என்றால் மற்ற நேரத் தொழுகைகளைப் பற்றி பேசவே தேவையில்லை!
இந்தச் சூழ்நிலையில் மார்க்க அறிவு அறவேயில்லாத அல்லது போதிய மார்க்க அறிவில்லாமல் வளர்க்கப்படுகின்ற அந்த சிறுவன் வாலிப பருமடைந்து கல்லூரிக்குச் சென்றால் அவன் சேருகின்ற கல்லூரியைப் பொறுத்து அவன் சிறுபிராயத்தில் நடைபெற்ற அதே நிகழ்வு ஏற்படுகின்றது.
சிறுபாண்மையினரால் நடத்தப்படுகின்ற ஒருசில கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்கள் தொழுவதற்காக பள்ளிவாயில்கள் போன்றவை கட்டித் தரப்பட்டிருந்தாலும் கல்வித் தரம், கல்வி நிறுவனத்தின் மதிப்பீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நம் பெரும்பாண்மையான முஸ்லிம் மாணவர்கள் விரும்புவது என்னவோ மாற்று மதத்தவர்களால் நடத்தப்படும் இஸ்லாமிய சூழல்களில்லாத கல்வி நிறுவனங்களைத் தான்! எனவே இங்கேயும் அந்த மாணவர்களால் இஸ்லாத்தைப் பற்றி பயில்வதற்கு வாய்ப்பு குறைந்து விடுகின்றது.
அவர்கள் படிப்பை முடித்தவுடன் மூஸ்லிமாக பிறந்த ஒரே காரணத்திற்காக அவர்களுக்குத் தகுந்த வேலை கிடைப்பது என்பது மிக அரிதாகவே இருக்கின்றது. அப்படியே ஒருவழியாக வேலை கிடைத்துவிட்டால் அந்த வேலையை தக்கவைத்துக் கொள்வதற்காக அரும்பாடுபட்டு உழைத்து தம் மேலதிகாரிகளை திருப்திபடுத்த வேண்டியதிருக்கின்றது.
இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து ஒருவழியாக நல்ல வேலையில் செட்டில் ஆனவுடன் திருமணம்! பிறகு சந்தோசமான குடும்ப வாழ்க்கை, குழந்தைகள்; பிறகு அக்குழந்தைகளுக்கு காய்ச்சல், தலைவலி என்று ஹாஸ்பிடல் அலைச்சல்; பிறகு அக்குழந்தைகளை பள்ளிக்கூடம் சேர்த்து நம்மைப் போலவே அக்குழந்தைகளையும் நல்லமுறையில் படிக்க வைத்து ஆளாக்க வேண்டும்!
அண்டை வீட்டார்களெல்லாம் புதிய சொகுசு வீடு கட்டி வசதியாக வாழ்வது போல் நாமும் புதிய பங்களா கட்டி நல்ல முறையில் வாழ வேண்டும். இதற்காக இரவு, பகல் பாராமல், நேரம் காலம் பார்க்காமல் பகுதி நேர ஊழியம் கூட பார்த்து பொருள் ஈட்ட வேண்டும்! அதற்கு நம் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் பரவாயில்லை! ரிடையர்ட் ஆனவுடன் அமைதியான முறையில் வாழவேண்டும்!
இவ்வாறாக ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்க்கை அலுவலகம், வீடு, மனைவி மக்களை கவனிப்பது என்று நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. அலுவலக நேரம் போக மீதமுள்ள நேரங்கள் டீ.வி, நியூஸ், இமெயில், இன்டர்நெட் பிரவுசிங் ஆகியவற்றுக்கே போதவில்லை!
குழந்தைகள் பருவ வயதையடைந்து பள்ளிப்பருவத்தின் இறுதியை அடைந்துவிட்டால் அவர்களை நல்ல பொறியியல் கல்லூரி அல்லது மருத்துவ கல்லூரி அல்லது பயன்தரும் படிப்பைத் தருகின்ற பிற நல்லக் கல்லூரிகளில் சேர்ப்பதற்காக அவர்களின் படிப்பின் மீது நமது நேரங்களைச் செலவிட்டு அவர்கள் நன்றாக படிக்கின்றார்களா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பின்னர் அவர்களை கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அதிகமாக கேபிடேசன் ஃபீஸ் கட்ட வேண்டும்; அதற்காக கடினமாக உழைத்து அதிக பொருளீட்ட வேண்டும்.
ஒருவழியாக அவர்கள் கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்று நல்ல வேலையில் அமர்ந்தவுடன் அவர்களுக்கு திருமணம் செய்வித்து அழகுபார்க்க வேண்டும். பிறகு பேரக்குழந்தைகள், அவர்களோடு கொஞ்சுவது, அகமகிழ்வது அப்பப்பா! வாழ்க்கையிலே நேரமே போதவில்லை!!
நீங்களும் இந்த சராசரி முஸ்லிமின் வட்த்திலிலுள்ளவரா! அப்படியாயின் இந்தக் கட்டுரை உங்களுக்களுக்காகத் தான். தொடர்ந்து வாசியுங்கள்!
இந்த சராசரி முஸ்லிமிடம் போய் தொழுகை, மார்க்க கல்வியைக் கற்பது பற்றிப் பேசினால் அவர்களின் உடனடி பதில் ‘நேரமில்லை’ என்பது நாம் சொல்லித் தான் தெரிய வேண்டு மென்பதில்லை!

உளூவின் போது குதிகால்களை நன்கு கழுவுவதன் அவசியம்


தினம் ஒரு நபி மொழி
           

தம் குதிகால்களைக் கழுவா(மல் உளூச் செய்துகொண்டிருந்)த ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது, “(உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகால்களுக்கு நரகம் தான்” என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 408

பூமிக்கு முளைகளாக மலைகள்

பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அதை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று இவ்வசனங்களில் (3:3, 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27, 78:7, 79:32) கூறுகிறான். 

ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதற்காக அறையப்படுவதே முளைகளாகும். 

இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும், உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன. 

வேகமாகப் பூமி சுழலும் போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும், மேலடுக்கில் உள்ள எடை குறைவாக உள்ள பொருட்களும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது. 

இந்த நிலை ஏற்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்கள் தூக்கி எறியப்படுவார்கள்; கட்டடங்கள் நொறுங்கி விடும். 

இதைத் தடுக்க வேண்டுமானால் கனமான அடுக்குகளையும், கனம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முளைகள் நாட்டப்பட வேண்டும். இதற்காகவே மலைகள் உருவாக்கப்பட்டன என்று இவ்வசனங்கள் கூறுகின்றன 

பூமியின் மேலே நாம் பார்க்கும் உயரத்தை விட அதிக அளவு ஆழத்தில் பூமிக்கு அடியிலும் மலைகள் அறையப்பட்டுள்ளன. 

ஆங்காங்கே இவ்வளவு ஆழமாக நிறுவப்பட்டுள்ள மலைகளின் காரணமாக மேல் அடுக்குகளும், கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் இணைந்து சுழல முடிகிறது. 

இந்த மாபெரும் அறிவியல் உண்மை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டிருப்பது, திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும். 

சொல்லொழுக்கம்


தினம் ஒரு நபி மொழி


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் "காலத்தின் கைசேதமே!" என்று கூற வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்தவன்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்: 4522., அத்தியாயம்: 40. )

Saturday, November 26, 2016

பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது

விண்வெளிப் பயணம் செல்ல முடியும் என்றும் விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்றும் சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று இவ்வசனத்தில் (17:37) சொல்கின்றது. 

இவ்வசனம் மிகப்பெரிய அறிவியல் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது. 

தமிழ்மொழி பெயர்ப்பாளர்கள் இவ்வசனத்திற்குத் தவறான மொழி பெயர்ப்பைச் செய்து, இவ்வசனத்தை அர்த்தமற்றதாக ஆக்கியுள்ளனர். 

"நீ பூமியில் அகந்தையுடன் நடக்காதே! ஏனெனில் நீ பூமியைப் பிளக்கவுமில்லை. மலையின் உயரத்தை அடையவுமில்லை" என்ற கருத்துப்படவே பெரும்பாலான மொழிபெயர்ப்புக்கள் அமைந்துள்ளன. 

ஆரம்பகாலம் முதல் சுரங்கம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், அணைகள், கண்மாய்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக மனிதர்கள் பூமியைப் பிளந்து கொண்டு தான் வருகின்றனர். திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்திலும் இப்பணிகள் நடந்து வந்தன. அப்படி இருக்கும் போது, நீ பூமியைப் பிளக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும் என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை. 

மேலும் பூமியைப் பிளப்பதற்கும், மலையின் உயரத்தில் இருப்பதற்கும் பெருமையடிக்கக்கூடாது என்ற செயலுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை. 

இவ்வசனத்தின் சரியான பொருள் இது தான். 

"நீ பூமியைப் பிளந்து மலையின் உயரத்தை அடையவில்லை" 

மனிதன் ஆகாயத்தில் எவ்வளவோ உயரத்திற்குச் செல்கிறான். அது மனிதனுக்கு எளிதாக இருந்தாலும் பூமியின் ஆழத்தில் அப்படிச் செல்ல முடியாது. பெரிய மலையின் உயரம் எவ்வளவோ அவ்வளவு ஆழத்திற்கு மனிதனால் பூமியைப் பிளந்து செல்ல முடியாது என்பதுதான் இவ்வசனம் கூறும் கருத்தாகும். 

நடக்க முடியாத இந்த அரிய செயலை உன்னால் செய்ய முடியும் என்றால் நீ பெருமையடிப்பதில் ஏதாவது பொருள் இருக்கும் என்று இறைவன் இடித்துரைக்கிறான். 

இதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மை என்னவென்பதைப் பார்ப்போம். 

மனிதன், பூமிக்கு மேலே 3,56,399 கி.மீ. தொலைவுடைய சந்திரனுக்கு ஆளை அனுப்பி அதன் உயரத்தை அடைந்து விட்டான். மேலும் பூமிக்கு மேலே 8 கோடி கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய் கிரகத்துக்கு இயந்திரத்தை அனுப்பி அதன் உயரத்தை மனிதன் அடைந்து விட்டான். 

பூமியின் குறுக்களவு 12,756 கி.மீ. ஆகும். அதாவது பூமியின் ஒரு முனையிலிருந்து அதன் எதிர் முனை வரையுள்ள தூரம் (விட்டம்) 12,756 கி.மீ. ஆகும். 

இதில் மனிதன் சென்றடைந்துள்ள தூரம் 3.3 கி.மீ. மட்டுமே. தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகின் மிக ஆழமான சுரங்கம் எனப்படும் டிரான்ஸ் வால் பாக்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள சுரங்கத்தின் ஆழம் இது தான். 

உண்மையில் இது கூடச் சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து அளவிட்டால் இந்தச் சுரங்கத்தின் ஆழம் 1700 மீட்டர் மட்டுமே! அதாவது 2 கி.மீ. கூட பூமியின் ஆழத்தில் மனிதன் செல்லவில்லை. 

உலகின் மிக உயரமான இமய மலையின் உயரம் 9 கி.மீ. ஆகும். இந்த 9 கி.மீ. ஆழத்திற்கு, அதாவது மலையின் உயரம் அளவுக்குப் பூமியில் மனிதன் செல்ல முடியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள். 

பூமியின் மேற்பரப்பில் சராசரியாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தையே மனிதனால் தாங்க முடியாது. கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் ஆழமுள்ள மேற்கண்ட சுரங்கத்தில் 57 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. தொழிலாளர்களுக்கு இந்த வெப்பம் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அதன் அருகிலுள்ள பகுதிகள் குளிரூட்டப்பட்டுள்ளன. 

பூமிக்கு அடியில் 700 மீட்டர் கடந்து விட்டால் காற்று, முகத்தைச் சுட்டுப் பொசுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே மலையின் உயரமான 9 கி.மீ. அளவுக்குப் பூமிக்குள் செல்வது சாத்தியமே இல்லை. 

மேலும் பூமியின் ஆழத்தில் செல்லச்செல்ல புவி ஈர்ப்பு விசையும் அதிகரிக்கின்றது. இதன் காரணமாகவும் பூமியின் ஆழத்தில் மனிதன் செல்ல முடியாது. 

இந்தப் பேருண்மைகளை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றியதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகின்றது.

குழப்பங்களும், மறுமை நாளின் அடையாளங்களும்

தினம் ஒரு நபி மொழி



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவர், (அவற்றுக்காக) எழுந்து நிற்பவரை விடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவர்,  நடப்பவரை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவர், (அவற்றை நோக்கி) ஓடுபவரைவிடவும் சிறந்தவர் ஆவார்.
அவற்றில் யார் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறாரோ அவரை அழிக்க அவை முற்படும். அப்போது யார் ஒரு புகலிடத்தைப் பெறுகிறாரோ, அவர் அதன் மூலம் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம்: 5529., அத்தியாயம்: 52. )

இறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக்குவோம்!

நாம் கேட்காமலே அருளப்பட்ட இந்த வாழ்க்கைக்காக, ஒரு உண்மையான முஃமின் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக மட்டுமில்லாமல், இறைவனும் அவனுடைய தூதரும் கற்றுத்தந்த வகையில் பயனுள்ளதாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும். சூரியோதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய இரு நிலைகளின் மூலமாக இறைவன் தன்னுடைய அடியானுக்கு, அவனின்அருட்கொடைகளை ஞாபகப்படுத்துகிறான். அதிகமனோர் நன்றி செலுத்தாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறான்.
“நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை” (40:61)
ஆரோக்கியமான உடல்நிலயை தந்து, உடல் உறுப்புக்கள் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தவுடன் இறைவனுக்கு நன்றி செலுத்தவில்லை எனில் நம்மைவிட நன்றிமறந்தவர்கள் யாராக இருக்க முடியும். இறைவனிடம் மிகப்பெரும் நன்றியுள்ள அடியாராகிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் “சிறிய மெளத்துக்குப்பிறகு மீண்டும் உயிர் கொடுத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்” என்று கூறி அன்றைய காலைப்பொழுதை இன்முகத்துடன் வரவேற்பவராக இருந்துள்ளார்கள் என்பதை ஹதீஸ்களில் காண்கிறோம்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் வாழ்நாள் முழுவதும், மழைக்காலங்களிலும் போர்க்காலங்களிலும், பஜ்ருடைய முன் சுன்னத் 2 ரக் அத்தையும் பர்ளு தொழுகையையும் தொடர்ந்து தொழுது வந்ததையும் ஹதீஸ்களில் காண முடிகிறது. இங்கே நம்முடைய நிலையை சீர்தூக்கிப்பார்க்கும் நிலையில் உள்ளோம். இரவில் தாமதமாக உறங்கி, காலையில் தாமதமாக எழும்போது, அவசர கதியில் இறைவனை புகழ்வதும் இல்லை, தொழவேண்டும் என்ற சிந்தனையும் வருவதில்லை.
தொழுகையில் அதன் நேரத்தில் தொழவேண்டும் என்ற குர்ஆன் வசனம், தாமதமாக உறங்கி தாமதமாக எழுபவன் ஷைத்தான், தொழாதவனின் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான், தொழாதவன் அன்றைய பொழுதை சோம்பலுடன் கழிக்கிறான் போன்ற ஹதீஸ்களை நன்கு அறிந்திருந்தும், தொழுகையில் பொடுபோக்காக இருப்பதை என்னவென்று சொல்வது. இறைவனிடத்திலே நன்றியுள்ள அடியானாக மாறுவதற்கு பதிலாக, இறைவனிடத்திலே சபதமிட்டு வந்த ஷைத்தான் வெற்றி அடைவதற்கு உதவி செய்வதுபோல் உள்ளது நமது செயல்பாடுகள்.
இரவில் முந்நேரம் உறங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து, இறைவனைப்புகழ்ந்து, பஜ்ர் தொழுகையை நேமமாக தொழுது, இறைவனின் அருளைப்பெற்று, அன்றைய காலைப்பொழுதை சுறுசுறுப்புடன் அடையப்பெற்றவர்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக.

முஸ்லிம் தோழியின் நடைமுறையினால் கவரபட்டு, இஸ்லாத்தில் இணைந்த ஜப்பானிய பெண் (வீடியோ)

படத்தில் நீங்கள் பார்க்கும் சகோதிரி ஜப்பானை சேர்ந்தவர்

பெயர் ரிசாமிசுனோ புத்த மதத்தை சார்ந்த அவர் அண்மையில் அவர் இஸ்லாத்தை தழுவி கொண்டார்.

காரணம் கூறும் போது,

எனது முஸ்லிம் தோழியின் நடைமுறைகளால் நான் கவர பட்டேன் அவளிடம் இஸ்லாத்தை பற்றி கேட்டறிந்தேன்.

எனக்கு அந்த சட்ட திட்டங்களும் ஏகத்துவமும் பிடித்தது 

என்னை நான் .இஸ்லாத்தில் இணைத்து கொண்டேன்

என்னை போன்ற ஜப்பானிய பெண்கள் பலர்களும் இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்வதிலும் அதை ஏற்று கொள்வதிலும் முனைப்பு காட்டி வருகின்றனர்

என்னால் முடிந்த அளவு எனது தோழிகளுக்கு இஸ்லாத்தை நான் அறிமுகம் செய்து வருகிறேன் 
இவ்வாறு அவர் கூறினார்

https://www.youtube.com/watch?v=-pYh0gO-ioE

மாதங்கள் பன்னிரண்டு (குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்று )

இவ்வசனத்தில் (9:36) வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் 12 மாதங்கள் எனக் கூறப்படுகின்றது. 

மக்கள் வருடத்தை 12 மாதங்களாகக் கணக்கிடுகிறார்கள் எனக் கூறாமல், 12 மாதங்கள்தான் இருக்க வேண்டும் என்று ஒரு கோட்பாட்டை இவ்வசனம் சொல்கிறது. 

வானம், பூமி படைக்கப்பட்டது முதல் எல்லாக் காலத்திலும் வருடத்திற்கு 12 மாதங்கள் என்று மக்கள் கணக்கிட்டுக் கொண்டிருக்கவில்லை. 

கி.பி. 1582 ஆம் ஆண்டு கிரிகோரியன் என்ற கத்தோலிக்க போப், நாட்காட்டிகளை ஒருங்கிணைப்பது வரை பல விதமான கணக்குகளில் ஆண்டுககளைக் கணித்து வந்தனர். 

ஒரு காலகட்டத்தில், 304 நாட்களைக் கொண்ட 10 மாதங்கள் ஒரு வருடமாக இருந்துள்ளது. 

இன்னொரு காலத்தில் 455 நாட்களைக் கொண்ட 15 மாதங்கள் ஒரு வருடமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

வருடம் என்பதற்கு எதை அளவுகோலாக வைப்பது என்ற தெளிவான அறிவு மனிதனுக்குத் துவக்கத்தில் இல்லாததே இதற்குக் காரணம். 

மாதம் என்றோ, வருடம் என்றோ தீர்மானிப்பதாக இருந்தால் தெளிவான ஒரு வரையறை அதற்கு வேண்டும். 

ஒருவர் நினைத்தால் 10 மாதங்களை ஒரு வருடம் என்பதும், மற்றொருவர் நினைத்தால் 15 மாதங்களை ஒரு வருடம் என்பதும், இன்னொருவர் 20 மாதங்களை ஒரு வருடம் என்பதும் எந்த வரையறையின் அடிப்படையிலும் கூறப்படுவதாக இருக்க முடியாது. 

நாம் வாழ்கின்ற பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவை வருடம் என்று கணக்கிட்டால் அது ஒரு வரையறைக்கு உட்பட்டதாக இருக்கும். 

மனிதன் 16ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த இந்த வரையறையை ஆறாம் நூற்றாண்டிலேயே திருக்குர்ஆன் கூறுகின்றது. 

வருடம் என்பது, அதாவது சூரியனைப் பூமி சுற்றும் கால அளவு என்பது 12 மாதங்கள் தான். இது சூரியனையும், பூமியையும் படைக்கும் பொழுதே என்னால் ஏற்படுத்தப்பட்ட முடிவு என்று இறைவன் கூறுவதைத் திருக்குர்ஆன் எடுத்துச் சொல்கிறது. 

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.

மரண சாசனங்கள்

தினம் ஒரு நபி மொழி


இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் தம் தாயார் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டு, 'அவர் சார்பாக நான் தருமம் (ஏதும்) செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (பலனளிக்கும்)' என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், 'என்னிடம் மிக்ராஃப் எனும் தோட்டம் ஒன்று உள்ளது. அதை நான் அவர் சார்பாக தருமம் செய்து விட்டேன் என்பதற்கு, தங்களை சாட்சியாக ஆக்குகிறேன்' என்று கூறினார்.

(ஸஹீஹுல் புகாரி: 2770. , அத்தியாயம்: 55. மரண சாசனங்கள்)

இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே!

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: –
“மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்” (அல்குர்ஆன் 67:13)
இந்த வசனத்தில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றன. நாம் என்ன நினைக்கிறோம் அல்லது நமக்கு எது நமக்குத் தேவையாக இருக்கிறது என்பதை நாம் பிறருக்குச் சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது. ஆனால் நம்மைப் படைத்த இறைவனான அல்லாஹ் மடடும் நாம் வெளிப்படையாக பேசுவதையும், நம் இதயங்களில் மறைத்து வைத்துள்ள இரகசியங்களையும் அறிவான். இந்தப் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மடடுமே உரியது.
எவரேனும் ஒருவர் மற்றவரின் இதயத்தில் உள்ள இரகசியங்களை அல்லாஹ்வைத்தவிர இறைநேசரோ, அவுலியாவோ, மற்றவர்களோ அறிந்துக் கொள்ள முடியும் என்று நம்பினால் அவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் ஆற்றலாகிய இதயங்களில் உள்ள இரகசியத்தை அறியும் தன்மை அல்லாஹ் அல்லாதவருக்கு இருப்பதாக கருதுவதாகும். இதற்கு ஒரு உதாரணம் காண்போம்: –
ஒருவர் மலேசியாவில் இருந்துக் கொண்டு தம் மனதிற்குள், தம்முடைய ஒரு தேவையை நாகூரில் அடக்கமாகியிருக்கும் சாகுல் ஹமீது அவுலியா நிறைவேற்றித் தந்தால் அந்த அவுலியாவுக்கு காணிக்கை செலுத்துவேன் என்று நேர்ச்சை செய்வதாக வைத்துக் கொள்வோம். இங்கே இவர் இரண்டு விதமான ஷிர்க்கைச் (இணை வைத்தலைச்) செய்தவராகிறார்.
  1. ஒன்று அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேணடிய நேர்ச்சை என்ற வணக்கத்தை, அல்லாஹ்வைத் தவிர மற்றவரிடத்தில் செய்வது
  2. இரண்டாவது மலேசியாவில் இருக்கும் அவருடைய மனதில் உள்ள இரகசியங்களை  அல்லது தேவைகளை அல்லாஹ்வுக்கு தெரிவதோடு மட்டுமல்லாமல் நாகூரில் இருக்கும் சாகுல் ஹமீது அவுலியாவுக்கும் தெரிகிறது என்று நம்புவது.
மேற்கண்ட இரண்டு நம்பிக்கைகளுமே இணைவைத்தல் என்னும் ஷிர்க்கின் வகையைச் சேர்ந்ததாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: –
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்” (அல்குர்ஆன் 4:116)
மேலும் நம் இதயங்களில் உள்ள இரகசியங்களை, (தேவைகளை, எணணங்களை) அறிபவன் அல்லாஹ் மட்டுமே என்று திருக்குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ் கூறுகிறான். பார்க்கவும்  – 11:5, 11:31, 29:10, 48:18, 67:13, 28:69, 28:69, 2:284, 3:29, 14:38
இணைவைத்தல் என்னும் கொடிய பாவத்தைத் தவிர மற்ற பாவங்களை தான் நாடியவருக்கு மன்னிப்பேன் என்று அல்லாஹ் கூறியிருப்பதால் நாம் மிகுந்ந எச்சரிக்கையோடு இணைலவத்தலின் சாயல் கூட நம் வாழ்வில் ஏற்படாதவாறு நாம் பார்த்துக்கொள்ள வெண்டும்.
எனவே நம் இதயங்களின் இரகசியங்களை அறியக்கூடியவனான அல்லாஹ்விடமே நம் தேவைகளைக் கூறி பிராத்திக்க அல்லாஹ் கிருபை செய்வானாகவும்.

இஸ்ரேல் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது உலக முஸ்லிம்கள் ஒருபுறம் மகிழ்ச்சி! மறுபுறம் இஸ்ரேல் நன்மக்களை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் என்று துஆ செய்யும் இஸ்லாமியர்கள்

உலகில் எந்த நாடுகள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் முதலில் கண்ணீர் சிந்துவது முஸ்லிம்கள். என்பது யாரலும் மறுக்க முடியாது.

கண்ணீர் சிந்துவதிலிருந்து, துஆ செய்வதிலிருந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிவது வரை முதல் வரிசையில் முஸ்லிம்களை காண முடியும். ஆனால் முதன் முதலாக அதற்கு மாற்றமாக ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்ரேல் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது உலக முஸ்லிம்கள் ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தும், மறுபுறம் இஸ்ரேலை சேர்ந்த நன்மக்களை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் என்று துஆ செய்வதையும் காண முடிகிறது.

பாங்கு சொல்ல தடை – பற்றி எரிகிறது இஸ்ரேல்

அண்மையில் பாலஸ்தீனில் பள்ளிவாசல்களில் ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல இஸ்ரேல் தடை விதித்தது. அந்த தடை அமலுக்கு வருவதற்கு முன் இஸ்ரேல் இறைவனின் புறத்திலிருந்து பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

திரும்பும் திசையெல்லாம் தீ பற்றி எரிவதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளின் உதவிகளை இஸ்ரேல் நாடியுள்ளது.
எங்களுக்கு நாடு இல்லை, எங்களுக்கு அடைக்கலம் கொடுங்கள் என்று 60 ஆண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீன் முஸ்லிம்களிடம் உதவி கேட்டு உள்ளே நுழைந்து பின்னர் பாலஸ்தீனையே நிர்மூலமாக்கிய இஸ்ரேல் அனைத்து துறையிலும் அசுர வளர்ச்சி அடைந்தது.

அசுர வளர்ச்சியடைந்த இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியுடன் உலகின் ராஜா என்று தன்னை தானே நினைத்து சர்வதேச சட்டங்களை மதிக்காமல், பாலஸ்தீனில் ஒவ்வொரு நாளும் இரத்த ஆற்றையே ஓட விட்டது.
பாலஸ்தீனுக்கு செல்லக்கூடிய அனைத்து பாதைகளையும் அடைத்து கல்வி, மருத்துவம், மின்சாரம் இல்லாத திறந்தவெளி சிறைச்சாலையாக ஒரு நாட்டையே ஆக்கியது.

சொல்லொனாத்துயரங்களுக்கு உள்ளான பாலஸ்தீன மக்களும், அவர்களுக்கு ஆதரவாக உலக முஸ்லிம்களும் கேட்காத துஆ இல்லை,
அதேசமயம் உலக அழிவு நாள் வருவதற்கு முன்பு யூதர்களுடன் ஓர் போர் ஏற்படும் என்றும், அந்த போரில் யூதர்கள் உயிருக்கு பயந்து ஓடி பாறைகளுக்கு பின்னால் ஒளிவார்கள் என்றும், ஓ முஸ்லிமே எனக்கு பின்னால் யூதன் ஒளிந்திருக்கிறான் அவனை கொல்லு என்று பாறைகள் பேசும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அப்படிப்பட்ட போரை எதிர்பார்த்தே உலக முஸ்லிம்கள் காத்து இருக்கிறார்கள்.

இதற்கிடையில் கடந்த வாரம் பாலஸ்தீனில் பாங்கு சொல்வதற்கு இஸ்ரேல் தடை விதித்து பாங்கு ஓசையினால் தாங்கள் தொந்தரவு அடைவதாகவும் கூறியது.

இந்நிலையில் இஸ்ரேல் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகளின் உதவிகளை இஸ்ரேல் நாடியுள்ளது.
பாலஸ்தீனை சுற்றி இஸ்ரேல் இருக்கலாம், இஸ்ரேலை சுற்றி முஸ்லிம் நாடுகளே இருக்கிறது

Thursday, November 24, 2016

பட்டுநூலில் எழுதப்பட்ட உலகின் முதல் அல்குர்ஆன்

அசர்பாய்ஜானி இஸ்லாமிய எழுத்து கலைஞரான எமது சகோதரியினால் பட்டு நூல்கள் கொண்டு எழுதப்பட்ட உலகின் முதல் அல் குரானை அவர் முழுமையாக நிறைவு செய்த அதன் பின் புகைப்படங்கள்.



அனைத்துக் காரியங்களும் அல்லாஹ் விதித்த விதியின் படியே நடக்கின்றன!


மனிதனின் பிறப்பிற்கு முன்பே எழுதப்படும் விதி!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தாயின் கருப்பைக்கென வானவர் ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்கிறான். அவர், “இறைவா! இது (ஒரு துளி) விந்து. இறைவா! இது பற்றித் தொங்கும் கரு. இறைவா! இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டம்” என்று கூறிக்கொண்டிருப்பார். அதை அல்லாஹ் படைத்(து உயிர் தந்)திட நாடும்போது, “இறைவா! இது ஆணா,பெண்ணா? நற்பேறற்றதா? நற்பேறு பெற்றதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?” என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையனைத்தும் தெரிவிக்கப்பட்டு) தாய் வயிற்றில் அது இருக்கும் போதே பதிவு செய்யப்படுகின்றன. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி); ஆதாரம்: புகாரி

மனிதனின் இறுதி முடிவு அவனின் விதியின் படியே அமையும்!
உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற்றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அவர் அதில் உயிரை ஊதுகிறார். (அதற்கு முன்பே) அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயல்பாடு, அவன் நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா ஆகிய நான்கு விஷயங்களை எழுதுமாறு அவர் பணிக்கப்படுகிறார். எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஓரிறை)வன் மீதாணையாக! உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துகொண்டே செல்வார். அவருக்கும் சொர்க்கத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார்.  (இதைப் போன்றே) உங்களில் ஒருவர் நரகவாசிகளின் (தீய)செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்துவிடுவார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி); ஆதாரம்: புகாரி

விதி முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டதால் நாம் செயலாற்றாமல் இருக்கலாமா?
நாங்கள் பிரேத நல்லடக்கம் (ஜனாஸா) ஒன்றில் கலந்துகொள்வதற்காக “பகீஉல் ஃகர்கத்” பொது மையவாடியில் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்றுகோல் இருந்தது. அப்போது அவர்கள் (தமது தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலைத் தரையில் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த கவலையிலும் யோசனையிலும்) இருக்கலானார்கள்.
பிறகு, “உங்களில் யாரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா, அல்லது நரகத்திலா என்று அல்லாஹ்வால் எழுதப்படாமல் இருப்பதில்லை; அது நற்பேறற்றதா, அல்லது நற்பேறு பெற்றதா என்று எழுதப்பட்டிராமல் இல்லை” என்று சொன்னார்கள்.
அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் நல்லறங்கள் செய்யாமல், எங்கள் (தலை) எழுத்தின் மீது (பாரத்தைப் போட்டுவிட்டு) இருந்துவிடமாட்டோமா” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் (விதியில்) நற்பேறு பெற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறு பெற்றவர்களின் செயலுக்கு மாறுவார். யார் (விதியில்) நற்பேறற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறற்றவர்களின் செயலுக்கு மாறுவார்” என்று கூறினார்கள்.
மேலும் அவர்கள், “நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும்வழி) எளிதாக்கப்பட்டுள்ளது. நல்லவருக்கு நல்லவர்களின் செயலைச் செய்ய வகை செய்யப்படும். கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகைசெய்யப்படும்” என்று கூறினார்கள்.
பிறகு “யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப் படுத்துகிறாரோ அவருக்குச் சுலபமான வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, அவருக்குச் சிரமத்தின் வழியை எளிதாக்குவோம்” (92:5-10) எனும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி); ஆதாரம்: புகாரி

மக்களின் பார்வையில்படுவதை வைத்து ஒருவரை செர்க்கவாதியா அல்லது நரகவாதியா என்பதை தீர்மானிக்க முடியாது!
ஒரு மனிதர், மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்துகொண்டே இருப்பார். (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராய் இருப்பார். ஒரு மனிதர், மக்களின் பார்வையில் நரகவாசிகளின் செயலைச் செய்து கொண்டே இருப்பார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராய் இருப்பார். அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி); ஆதாரம்: புகாரி

இப்படி செய்திருந்தால் அப்படி ஆயிருக்குமே! என்று கூறாதீர்கள்!
பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்” என்று சொல். ஏனெனில், (“இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே” என்பதைச் சுட்டும்) “லவ்” எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); ஆதாரம்: புகாரி

கடன்படுவதிலிருந்து பாதுகாப்புக் கோருதல்

தினம் ஒரு நபி மொழி


             

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையி(ன் கடைசி அத்தஹிய்யாத் அமர்வி)ல் பிரார்த்தனை செய்யும் போது,“அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்” (இறைவா! கப்ர் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன், மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், வாழ்வு மற்றும் இறப்பின் போது ஏற்படும் சோதனையிலிருந்தும், உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறுவார்கள். ஒருவர், நபி (ஸல்) அவர்களிடம், தாங்கள் கடன்படுவதிலிருந்து அதிகமாகப் பாதுகாப்புத் தேட என்ன காரணம்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், மனிதன் கடன் படும் போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 832

விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்கும்

வின்வெளியில் மேலேறிச் செல்பவனின் இதயம் சுருங்குகிறது என்று இவ்வசனம் (6:125) கூறுகிறது. 

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் கூட இந்த அனுபவத்தை உணர முடியும். 

ஆனால் இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். 

இத்தகைய காலகட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறைவாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம். 

Tuesday, November 22, 2016

தேனீக்களும், தேனும்

இவ்வசனத்தில் (16:68,69) தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது. 

இதில் நான்கு அறிவியல் உண்மைகள் கூறப்பட்டுள்ளன. 

தேனீக்கள் தேனைச் சேமிப்பதற்காக எவ்வளவு தொலைவுக்குச் சென்றாலும், எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் தமது கூட்டுக்குள் வந்து சேர்ந்து விடும் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

"நீ எளிதாகச் சென்று திரும்பு" என்று தேனீக்களுக்கு இறைவன் உள்ளுணர்வு ஏற்படுத்தியிருப்பதாக இவ்வசனத்தில் கூறுகின்றான். 

தேனீக்கள் எவ்வளவு தூரம் சென்றாலும் அவை எளிதாகத் திரும்பி விடும் என்பதையும் அதற்கேற்ப தேனீக்களுக்குள் உள்ளுணர்வை ஏற்படுத்தியிருப்பதையும் திருக்குர்ஆன் அன்றே கூறி விட்டது. 



இரண்டாவதாக, தேனீக்கள் மலர்களிலும் கனிகளிலும் உள்ள திரவத்தை உறிஞ்சி அதைக் கொண்டு வந்து கூட்டில் சேமிக்கிறது என்றும் அந்தக் கூட்டில்தான் தேன் தயாரிக்கப்படுகிறது என்றும் முற்காலத்தில் நம்பி வந்தனர். 

இது தவறு என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தேனீக்கள் அந்தத் திரவத்தைத் தமக்கு உணவாகத்தான் உட்கொள்கின்றன. தேனீக்களின் உடலுக்குள்ளே தான் அத்திரவத்தைத் தேனாக மாற்றுகின்ற பணி நடக்கின்றது என்றும், தேனாக மாற்றுவதற்கு தேன்கூட்டில் எந்தத் தொழில்நுட்பமும் இல்லை என்றும் கண்டறிந்துள்ளனர். 

இந்த உண்மையையும் திருக்குர்ஆன் இவ்வசனத்தில் சொல்கிறது. 

"மலர்களிலிருந்தும், கனிகளிலிருந்தும் நீ சாப்பிடு" என்று கூறுவதன் மூலம் அவை அத்திரவத்தை உணவாகத்தான் உட்கொள்கின்றன என்ற உண்மையை திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது. 

மூன்றாவதாக, தேனீக்கள் மலர்களிலிருந்து உணவாக உட்கொண்ட இந்தத் திரவம் தேனீக்களின் வயிறுகளில் ரசாயன மாற்றம் அடைந்து தேனாக உற்பத்தியாகின்றது. 

தேனீக்களின் கழிவு வெளியேறும் துவாரத்தைத் தவிர, தேன் வெளியேறுவதற்காக மற்றொரு துவாரமும் தேனீக்களிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் துவாரம் வழியாக வெளியேறும் தேன் தான் தேன்கூடுகளில் சேமித்து வைக்கப்படுகிறது. 

இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றார்கள். 

ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் அருளப்பட்ட திருக்குர்ஆன், தேனீக்கள் சாப்பிட்ட பிறகு அதன் வாயிலிருந்து தேன் வெளிப்படுகிறது என்று சொல்லாமல், "அதன் வயிறுகளிலிருந்து தேன் வெளிப்படுகிறது" என்று கூறுகின்றது. 

மனித குலத்துக்கு முஸ்லிம், செய்யவேண்டிய கடமை

இறைவனின் வார்த்தைகளை எடுத்துரைப்பதே ஒரு முஸ்லிம் குறிக்கோளாக இருக்கவேண்டும். இச்செயலின் மூலம் நபியை பின்தொடர்வோராக ஆகுவர்.

"தூதரே! நான் உங்களுக்குக் கொடுத்தவற்றை எல்லோருக்கும் கொண்டு சென்று சேருங்கள். நீங்கள் அவ்வாறு செய்யவில்லையெனில் என்னுடைய செய்தியை கொண்டு சேர்க்கவில்லை என்பதாகிவிடும்." (அல்குர்ஆன் 5:67)

இந்த வசனம் நபிக்கு மட்டும் கூறியதாக இருந்தாலும் நபியவர்களைப் பின் தொடர்வோரும் இதற்குக் கடமைப்பட்டோராக, உள்ளடக்கப்பட்டோராக அமைகின்றனர்.

மேற்கண்ட வசனம் அறிவுறுத்துவது, இறைவனுடைய புனிதத்தை மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும். அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமை என்கிறான்.

 ‘‘இறைத் தூதர் முஸ்லிம்களுக்கு சாட்சியாக வந்திருந்தார்கள் முஸ்லிம்கள் மனிதகுலத்துக்கு சாட்சியாகவிருக்கவேண்டும்.’’ (அல்குர்ஆன் 2:143)

இந்த உலகத்தில் முஸ்லிம்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு மக்களை இறைவன் பக்கம் அழைப்பதன் மூலமே பெறவியலும்.

ஒருவர் ஒரு பணிக்காக நியமிக்கப்பட்டால் அவர் செய்யும் வேலை பொறுத்தே அவரது எதிர்காலம் அமையும். அது போலவே இறைவன் மனித இனத்துக்கு அனுப்பிய எச்சரிக்கைகளை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

முந்தைய மக்களிடம் கொடுக்கப்பட்ட வேதத்தை கொண்டு சென்று சேர்க்காமல் நிறுத்தி விட்டனர்.

அல்லாஹ் கூறியபடி அடுத்தோருக்குக் கொண்டு சேர்க்கக் கூடியோர் அல்லாஹ்வுடன் உறவு வைத்துக் கொள்கின்றனர். கொண்டு சேர்க்காதோரும், அற்ப விலைக்கு விற்போரும் தீங்கு விளைவிக்கின்றனர்.

"எவர் ஒருவர் தான் செய்த தீயவைகளைக் கொண்டு பேரானந்தம் அடைகின்றனரோ,

தற்புகழ்ச்சியை நேசிக்கின்றனரோ,

இறைவனுடைய தண்டனைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டதாகக் கருதிக் கொள்கின்றனரோ

இவர்கள் தாங்கவியலா தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்." (அல்குர்ஆன் 3:187 – 188)

இறைவேதத்தை வைத்து தாவா செய்வது போல் சிலர் தவறான வழியில் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்களையே காயப்படுத்திக் கொள்கின்றனர். அத்தகையோருக்கு எந்த நன்மதிப்பும் கிடைக்காது.

"முஸ்லிம்கள் நிரம்ப பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுயல்வதில்லை." (அல்குர்ஆன் 5:67)

அல்லாஹ் தந்திருக்கும் செய்திகளை எடுத்துரைப்பதே மனிதருடைய பணி. மனிதனுக்கு தேவைகள் பல விருந்தாலும் பணத்தேடலுக்கே முதன்மை அளிக்கிறான். அப்பணம் மூலம் அனைத்து பிரச்சினைகளும் நிவர்த்தி செய்ய இயலுமெனக் கருதுகிறான். இந்த எண்ணத்தை இறைவேதத்தின் மீதும் வைத்து கொண்டு சேர்க்கும் பணியில் அக்கறைகாட்ட வேண்டும். (Spirit of Islam)

கடனைத் திருப்பிச் செலுத்தும் எண்ணமும், அல்லாஹ்வின் உதவியும்

தினம் ஒரு நபி மொழி

               

“எவர் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றாரோ அவர் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்து(ம் விதத்திலான அக்கடனை அடைக்கும் வழிவகைகளை அவருக்கு எளிதாக்கி உதவு)வான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2387

ஈமான் கொண்டவர்களுக்காக மலக்குகள் செய்யும் பிரார்த்தனைகள்!

அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்:
அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்:
“எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!
“எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
“இன்னும், அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! அந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு நிச்சயமாக நீ அருள் புரிந்து விட்டாய் – அதுவே மகத்தான வெற்றியாகும்” (என்றும் கூறுவர்). (அல்-குர்ஆன் 40:7-9)

மேற்கண்ட வசனங்களின் மூலம் நாம் பெறும் படிப்பினைகள்:
1) தாம் செய்த தவற்றை உணர்ந்து, இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி இறைவழியில் நடப்பவர்களுக்கு அர்ஷை சுமந்து நிற்கும் மற்றும் அதை சுற்றியிருக்கும் மலக்குகள் பிரார்த்தனை செய்வார்கள்
2) இத்தகையவர்களின் பாவங்களை மன்னிக்குமாறும், அவர்களை நரகத்திலிருந்து பாதுகாக்குமாறும் இறைவனிடம் வேண்டுவார்கள்
3) மேலும் இவர்களின் முதாதையர்களுக்காகவும், அவரின் மனைவி மக்களுக்காகவும் பிரார்த்தித்து அவர்கனைவரையும் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்யுமாறு இறைவனிடம் வேண்டுவார்கள்
4) மேலும் அவர்களைத் தீமைகளிலிருந்து பாதுகாக்குமாறும் இறைவனிடம் வேண்டுவார்கள்
அல்லாஹ் மற்றும் அவனது திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் விதித்த ஏவல் மற்றும் விலக்கல்களை முறையாகப் பேணி நடப்பதன் மூலம் இப்பேரண்டத்தின் அதிபதியாகிய கருனைமிகு அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலக்குமார்களின் பிரார்த்தனைக்கு உரியவர்களாக நாமும் ஆவதற்கு ஆசைகொள்வோமாக!

Sunday, November 20, 2016

அல்லாஹ்வின் பகைவர்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும் அவர்களுடைய காதுகள், கண்கள் மற்றும் தோல்கள்!


அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்:
“மேலும், அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள். இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். அவர்கள் தம் தோல்களை நோக்கி,
“எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்;
அதற்கு அவை: 
“எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.
“உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.
ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).
ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் – அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான பெயர்கள்…


தினம் ஒரு நபி மொழி


                 

“உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அபூதாவூத் 4300

கடல்களுக்கு இடையே திரை

இவ்வசனங்களில் (27:61, 35:12, 55:19,20) இரண்டு கடல்களுக்கு இடையே கண்களுக்குத் தெரியாத தடுப்பு உள்ளது என்றும் இதனால் அவை ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்து விடாது என்றும் கூறப்படுகின்றது. 

இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பு உள்ளதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல விதமான ஆய்வுகளுக்குப் பின் அவர்கள் கண்டுபிடித்த இந்த உண்மையை திருக்குர்ஆன் அன்றே சொல்லி இருக்கிறது. 

மத்தியத் தரைக்கடலும், கருங்கடலும் நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்தன. 12,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு பிரளயத்தின் போது இரண்டும் இணைந்தன. இரண்டு கடல்களும் சந்திக்கும் இடத்தில் இரண்டும் சமமான அடர்த்தியில் இல்லாததால் அடர்த்தி மிகுந்த கடலின் நீர் கீழேயும், அடர்த்தி குறைந்த கடலின் நீர் மேலேயும் சென்று 200 அடி அளவுக்கு ஒன்றின் மேல் ஒன்றாக நிற்கிறது. 12,000 ஆண்டுகள் ஆன பின்பும் அவை ஒன்றாகக் கலந்து விடவில்லை. 

அட்லாண்டிக் கடலும், இந்தியப் பெருங்கடலும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தாலும் திடத்திலும், நிறத்திலும் வேறுபட்டு நிற்கின்றன. ஒன்றுடன் ஒன்று கலந்துவிடவில்லை. 

அதுபோல் மத்திய தரைக்கடலும், அட்லாண்டிக் கடலும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு உள்ளன. மத்திய தரைக்கடல் அடர்த்தியுடன் வெதுவெதுப்பாக உள்ளதால் அட்லாண்டிக் கடலுடன் சேருமிடத்தில் அதன் மீது ஆயிரம் அடிகளுக்கு மேல் அழுத்திக் கொண்டு சுமார் 100 மைல்கள் வரை ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பரவி நிற்கின்றது. ஒன்றுடன் ஒன்று கலந்துவிடவில்லை. 

திருக்குர்ஆன் 25:53 வசனத்தில், நல்ல தண்ணீர் கடலுடன் கலப்பதைப் பற்றிக் குறிப்பிடும் போது, "இரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும்" ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றது. 

இரண்டு கடல்கள் சந்திக்கும் போது ஒரு திரை இருப்பதாகக் கூறிய குர்ஆன், கடலுடன் நல்ல தண்ணீர் கலக்கும் போது இரண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. 

Saturday, November 19, 2016

நபி (ஸல்) அவர்களின் உரை



தினம் ஒரு நபி மொழி


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்துவிடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப் போவது குறித்து “எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்” என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பெற்றுள்ளோம்” என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள். மேலும், “அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்” என்று கூறுவார்கள். பிறகு “ஒவ்வோர் இறை நம்பிக்கையாளருக்கும் அவரது உயிரைவிட நான் நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். (ஆகவே,) எவர் (இறக்கும்போது) ஒரு செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ அது அவருடைய குடும்பத்தாருக்குரியதாகும். எவர் (இறக்கும்போது) ஒரு கடனை அல்லது (தம்மைத் தவிர வேறு எவரும் பராமரிக்க இல்லை என்ற நிலையில்) குடும்பத்தினர்களை விட்டுச்செல்கின்றாரோ அவர்கள் தங்கள் தேவைகளுக்காக என்னை அணுகட்டும். என்மீதே (அவர்களைப் பராமரிப்பதும், அவர்களது கடனை அடைப்பதும்) பொறுப்பாகும்” என்று கூறினார்கள்.

சொர்க்கம் செல்பவர்கள் யார்?


அகிலங்களின் ஏக அதிபதியாகிய அல்லாஹ் கூறுகின்றான்:
எவர்,
  • தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்;
இன்னும் எவர்,
அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ள வில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருள்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகமும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்;
  • (ஆனால் இது பலனை அளிக்காது;)
  • அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்;
  • அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்;
  • அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம்.
உம் இறைவனால் உம் மீது நிச்சயமாக இறக்கப்பட்ட (வேதத்)தை உண்மையென அறிகிறவர் குருடராக இருப்பவரைப் போலாவாரா?
நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்கள் தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.
அவர்கள் எத்தகையோரென்றால்,
  • அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள்;
  • இன்னும் (தாம் செய்த) உடன்படிக்கையை முறித்து விடவும் மாட்டார்கள்.
மேலும், அவர்கள் எத்தகையோரென்றால்,
  • அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்;
  • இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்;
  • மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்.
இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால்,
  • தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்;
  • தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்;
  • நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்;
  • நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்.
இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது.
நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்;
  • மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.
  • “நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!”
(என்று கூறுவார்கள்). எவர்கள்,
  • அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ;
  • இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ;
  • பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ –
அத்தகையோருக்குச் சாபந்தான்;
அவர்களுக்கு மிகக்கெட்ட வீடும் இருக்கிறது.
  • அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்;
  • (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்;
எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் –
இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.
“இவருக்கு இவருடைய இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கி வைக்கப்படக் கூடாதா” என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள்,
(நபியே!) நீர் கூறும்:
  • “நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்;
  • தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்”
என்று. (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால்,
  • அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்;
  • மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன;
அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
எவர்கள்,
  • ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு;
  • இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு.
(அல்-குர்ஆன் 13:18-29.)