டெல்லி: வட்டி வாங்குவதும் வட்டிக்குக் கொடுப்பதும் பெரிய பாவம் என்று இஸ்லாம் கூறுகிறது. இதனால் வங்கிகளில் கடன் வாங்கும் இஸ்லாமியர்கள், அதற்கான வட்டியை கட்டும்போது, மத கோட்பாடுக்கு எதிரான செயலை செய்வதாக உள்ளுக்குள் புழுங்குகிறார்கள். எனவே அவர்கள் எண்ணத்திற்கு மதிப்பு கொடுத்தும், இஸ்லாமிய போதனையை மதித்தும், இஸ்லாமியர்களுக்காக வட்டியில்லா வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தி வருகிறது.
2015-16 ஆம் ஆண்டு அறிக்கையிலேயே ரிசர்வ் வங்கி இது குறித்து தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு ஜெட்டாவை தலைமையிடமாகக் கொண்ட இஸ்லாமிய மேம்பாட்டு வங்கி இந்தியாவில் தனது முதல் கிளையை அகமதாபாத்தில் தொடங்கவிருப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையில் அம்முயற்சி கைவிடப்பட்டது.
இந்நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இஸ்லாமியர்களுக்கான வட்டியில்லா வங்கியைத் தொடங்குவது குறித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மிகத் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
மேலும், நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளின் கீழ் இந்த வட்டியில்லா வங்கிச்சேவையைச் செயல்படுத்தவும் போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment