அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Monday, October 31, 2016

உலகின் வெளித்தோற்றத்தில் மயங்கி மறுமையை அலட்சியப்படுத்தும் மனிதன்!

Image result for quran

அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள். 


(அல்குர்ஆன்: 30:7)

ஜப்பானில் அதிகரித்து வரும் இறை இல்லங்கள்

உலெகெங்கும் இஸ்லாத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது இஸ்லாத்தின் தாக்கம் ஜப்பானையும் விட்டு வைக்க வில்லை.

ஜப்பானில் இஸ்லாத்தின் வளர்ச்சி அதிகரித்து வருவதால் இறை இல்லங்களின் அவசியமும் அதிகரித்துள்ளது. ஜப்பான் முஸ்லிம்களின் தேவைக்கு ஏற்ப்ப இறை இல்லங்களை ஜப்பான் இஸ்லாமிய கலாட்சர கழகம் கட்டி வருகிறது.

ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் இஸ்லாமிய கலாட்சார கழகத்தால் கட்ட பட்டு இந்த மாதம் திறப்பு விழாவை கண்ட இறை இல்லத்தை தான் படத்தில் பார்கின்றீர்கள்.

Sunday, October 30, 2016

வீட்டிலேயே உளூச் செய்துவிட்டு பள்ளிவாசலுக்கு தொழ நடந்து செல்வதன் சிறப்பு…


      தினம் ஒரு நபி மொழி            


“தமது வீட்டில் உளூச் செய்துவிட்டு அல்லாஹ்வுக்கான கடமை(களுள் ஒன்றான தொழுகை)யை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் இல்லங்களுள் ஒன்றுக்கு நடந்து செல்பவர் எடுத்து வைக்கும் இரு காலடிகளில் ஒன்று அவருடைய பாவத்தை அழிக்கிறது; மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்துகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1184

Friday, October 28, 2016

முஹம்மது நபி உறங்கிய விதமும், நவீன அறிவியல் கண்டுபிடிப்பும்..!!

-நன்றி -ஜெ. நாகூர்மீரான்-    

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்பற்றிய சுகாதாரம் குறித்துள்ள ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன. அவை இன்றைய நவீன அறிவியலோடு ஒத்துப்போகின்றன. அவ்வாறு ஹதீஸ்கள் பலவற்றை எடுத்து சிகிச்சையின்போது கடைப்பிடிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இரவு உறங்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த முறையில் உறங்கினார்கள், அந்த முறை குறித்து இன்றைய நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் கூறுவது என்னவென்பதைக் காண்போம்.

o மல்லாக்க, குப்புற, இடது, வலது ஒருக்களித்து பல நிலைகளில் மனிதர்கள் உறங்குகின்றனர். அவ்வாறு உறங்குவது சரியல்ல. வலதுபுறமாக மட்டுமே துயில வேண்டும். அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த ஹதீஸ்களைக் காண்போம்.

'அல்பகரா இப்னு அஸீஃப்' கூறியதாக புகாரி ஷரீஃபில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்: ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படுக்கும்போது வலப்புறமாகப் படுத்து, "யா அல்லாஹ்! என் ஆன்மாவை உன்னிடம் ஒப்படைக்கிறேன். எனது முகத்தை உன்னை நோக்கியே திருப்பிக் கொள்கிறேன். உன் உதவியை நாடுகிறேன். உன்னையன்றி என்னைக் காப்பாற்ற எவருமில்லை. மேலும், உனது வேதத்தை நம்புகிறேன். நீ தந்த நபித்துவத்தையும் நம்புகிறேன்." என்பார்கள்.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாக அல்பகரா இப்னு அஸீஃப் அவர்களின் மற்றொரு ஹதீஸின் பதிவு: ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் 11 ரக்அத் தொழுவார்கள். விடியல் வந்ததும், இரண்டு ரக்அத் விரைந்து தொழுது முடித்து வலதுபுறமாகப் படுத்திருப்பார்கள், முஅத்தின் அதான்ஒலி (பாங்கு சப்தம்) தரும் வரை."

o வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுத்திருப்போருக்கு சுவாச அமைப்பில் சிறிய அளவில் கோளாறு ஏற்படும். காரணம், முதுகெலும்புடைய கனம் கீழே அழுத்தும். மனிதன் மூச்சு விடும்போது நெஞ்சு மேலிருந்து கீழ் செல்லும். மனித உடல் உறுப்பு செயல்பாட்டுக்கு பாதகமாக குப்புறப்படுத்துறங்தகுதல் அமையும்.

o குழந்தைகளை குப்புறப்படுக்க வைத்ததால் அதிகமான மரணங்கள் சம்பவிப்பதாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ஆய்வாளர் கண்டுபிடித்திருக்கிறார்.

o சமீபத்தில் எனது சகோதரி குழந்தை பெற்றார். அவரைக் காண மருத்துவமனை சென்றிருந்தேன். பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர். எனது தாயார் கூறினார், "படுத்துக்கொண்டே ஒரு பெண் குழந்தைக்குப் பால் கொடுத்தார். குழந்தை ஒரு புறமாகச் சாய்ந்து பால் அருந்தி மூச்சுத் திணறி இறந்துவிட்டது.

வேறு ஒரு பெண்ணுக்கும் அன்றைக்கு இப்படி ஒரு குழந்தை இறந்து போனது என்று கூறிக் கொண்டிருக்கும்போதே, இது மாதிரி பால் கொடுக்கக் கூடாதென எத்தனை முறை கூறியிருக்கிறோம் என்று நர்ஸ் கோபமாகக் கத்திவிட்டுச் சென்றார்.

o குப்புறப்படுத்து உறங்குதலை அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள். அவ்வாறு உறங்கிய ஒருவரை அதட்டியிருக்கிறார்கள்.

வானத்தை நோக்கியபடி மல்லாந்து படுத்தால், மூச்சு வாய் வழியாகச் செல்லும். காரணம் நமது கீழ்த்தாடை மிக நெகிழ்வாக இருக்கின்றது. சுவாசித்தல் மூக்கு வழியாக நடப்பதுதான் சுகாதாரமானது. மூக்கு வழியாக சுவாசிக்கும்போது நாசியிலிருக்கும் ரோமங்கள், வாகு, இரத்தத் தந்துகிகள் சேர்ந்து மனித சுவாசக் காற்றை சூடுபடுத்தி வடிகட்டி, சுத்தப்படுத்தி உடலுக்குள் அனுப்புகின்றன.

மாறாக வாய் வழியாக சுவாசிப்பதால் அசுத்தங்கள் அப்படியே உடலுக்குள் செல்கின்றன. மேலும், வாயிலுள்ள பசைத்தன்மை, "Pyorrhea" என்ற பாக்டீரியாவை உடலுக்குள் கொண்டு செல்கின்றது.

o இடது புறமாகப் படுப்பதும் சிறந்த முறையல்ல. மனிதருக்கு இரண்டு நுரையீரல்கள். வலதுபுற நுரையீரல் கனமுடையது. இடதுபுற நுரையீரல் கனமற்றது. இடதுபுறமாக உறங்கினால் கனமான வலதுபுற நுரையீரல் இதயம் மேல் நகர்ந்து கனத்தால் அழுத்தி அதன் செயல்பாடுகளைக் குறைக்கும். இதன் காரணமாகவே பலர் இதயத்துடிப்பு நின்று மரணிக்கின்றனர். என்று கண்டுபிடித்துள்ளனர்.

o "Sympathetic Nervous Activity" "பரிவு நரம்பு செயல்பாடு". இந்த நரம்புதான் இதயத்துடிப்பை, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது. வலது புறமாகப் படுப்பதன் மூலம் இந்த நரம்புடைய செயல்பாடு நன்றாக இருக்கிறதென்று சமீபத்திய மருத்துவ ஆராய்ய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

o கனம் முறைவாக இடது புற நுரையீரல் இருப்பதால், வலது புறமாக உறங்கும்போது அது கீழ் நகரும்போது, இதயம் சற்றே மேலிருப்பதால் இதயத்துடிப்புகள் சரியாக இயங்குகின்றன், பாதிப்படைவதில்லை.

o மேலும், உணவருந்திவிட்டு இடப்புறமாகப் படுப்போருக்கு உணவு குடலுக்குள் பயணித்து செரிமானம் அடைய 5 லிருந்து 8 மணி நேரம் ஆகும். அதே சமயம் வலதுபுறமாகப் படுப்போருக்கு செரிமானம் அடைய இரண்டரை மணி நேரத்திலிருந்து நாலரை மணி நேரமே ஆகின்றதென்று கூறப்படுகிறது.

இன்றைய நவீன விஞ்ஞானம் கூறியிருப்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்னமேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பது மனித இனத்தின்மீது அவர்கள் கொண்டுள்ள அக்கரையை நமக்கு தெளிவாக்குகிறது.

மத கோட்பாட்டுக்கு மரியாதை.. முஸ்லிம்களுக்கு வட்டியில்லா வங்கி.. ரிசர்வ் வங்கி, மத்திய அரசு திட்டம்!

டெல்லி: வட்டி வாங்குவதும் வட்டிக்குக் கொடுப்பதும் பெரிய பாவம் என்று இஸ்லாம் கூறுகிறது. இதனால் வங்கிகளில் கடன் வாங்கும் இஸ்லாமியர்கள், அதற்கான வட்டியை கட்டும்போது, மத கோட்பாடுக்கு எதிரான செயலை செய்வதாக உள்ளுக்குள் புழுங்குகிறார்கள். எனவே அவர்கள் எண்ணத்திற்கு மதிப்பு கொடுத்தும், இஸ்லாமிய போதனையை மதித்தும், இஸ்லாமியர்களுக்காக வட்டியில்லா வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தி வருகிறது.
2015-16 ஆம் ஆண்டு அறிக்கையிலேயே ரிசர்வ் வங்கி இது குறித்து தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு ஜெட்டாவை தலைமையிடமாகக் கொண்ட இஸ்லாமிய மேம்பாட்டு வங்கி இந்தியாவில் தனது முதல் கிளையை அகமதாபாத்தில் தொடங்கவிருப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையில் அம்முயற்சி கைவிடப்பட்டது.
Reserve Bank, govt exploring introduction of Muslim banking
இந்நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இஸ்லாமியர்களுக்கான வட்டியில்லா வங்கியைத் தொடங்குவது குறித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மிகத் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
மேலும், நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளின் கீழ் இந்த வட்டியில்லா வங்கிச்சேவையைச் செயல்படுத்தவும் போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிறர் குறையை நாம் மறைத்தால்…

தினம் ஒரு நபி மொழி
             

“ஓர் அடியார் மற்றோர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்தால், அவருடைய குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்காமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5050

Thursday, October 27, 2016

அல்லாஹ் மனிதர்களிடம் பார்ப்பது…

தினம் ஒரு நபி மொழி


“அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5012

Monday, October 24, 2016

தனக்கு நல்லது செய்தவரிடத்தில் நன்றி கூற…

தினம் ஒரு நபி மொழி

               

“ஒருவர் தனக்கு நல்லது செய்யப்படும் போது அதைச் செய்தவரிடத்தில் ‘ஜஸாகல்லாஹு கைரா‘ (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக) எனக் கூறினால் அவர் (நன்றி கூறி) நிறைவாகப் புகழ்ந்தவராகி விடுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உசாமா பின் ஸைத் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 3495

விமானம் பறப்பது எப்படி?

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்
சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது
ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு
A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)
B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust
C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight
D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்
Weight=Lift
Drag=Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்
டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்
விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்
விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்
சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,
அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.
(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)
விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது
எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்
உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக
விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது
விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்
இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது
காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)
விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?
அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)
இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது
ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது
மனிதனால் பறக்க முடிவும் என்பது பற்றி இறைவன் திருமறையில்…
மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.டாது)

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை.

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை.

இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.

 சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் பகிர்கிறோம்.

 அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!


பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!��

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம்.

பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.

என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.

அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.

எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.

பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” ��

என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள்.

நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள்.

இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன்.

அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் ��
கவலைப்படவில்லை.

திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன்.

எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.


அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி,

மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள்.

நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து,

அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள்.


‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.��

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்?

அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள்.

எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.

 உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி,

அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில்,


ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன்.

ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள்.

அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபா” என்றாள்.

உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா?

அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 100 ரூபா விலை சொல்றான்” என்றாள்.��

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ��ஆச்சர்யப்பட்டேன்.

பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான்,

ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 100 ரூபாயாகக் கூடிவிட்டதே! ��

இதை நினைக்கிறபோது,

நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.


இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை ��
உயர்த்துகிற அம்சங்கள்


இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?

உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation)சென்றடைகிறது.
இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா? ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். * மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான். இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.
இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ்என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.
இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்த ஆண்டு கி.பி. 1578 ஆகும்.
ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?
இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ ح حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا رواه البخاري 2038
ஸஃபிய்யா (ர லி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றாரன் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)
அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ(6)34
(முஹம்மதே!) ”உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை” என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.
(அல்குர்ஆன் 34 : 6)

மெய்யான அறிவை மறக்கச் செய்யும் உலக ஆசை!

செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்” 

(அல்-குர்ஆன் 102:1-8)

கூட்டுத் தொழுகையின் சிறப்பு…

 தினம் ஒரு நபி மொழி


“தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: திர்மிதீ 199

Sunday, October 23, 2016

ருகூவிலும், ஸஜ்தாவிலும் முதுகை வளைவின்றி வைக்க வேண்டும்…

தினம் ஒரு நபி மொழி


“ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக வைக்கவில்லையோ அவரது தொழுகை (இறைவனால்) ஏற்றுக் கொள்ளப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அல்-அன்சாரீ அல்-பத்ரீ (ரலி)
நூல்: தாரமீ 1297

நிச்சயமான *மூன்று*


*கண்மணி* *நாயகம்* *முகம்மது* *முஸ்தபா* (صلي الله عليه وسلم ) அவர்கள் கூறினார்கள்:
மூன்று காரியங்கள் குறித்து நான் *உறுதி* கூறுகின்றேன்:
1. நீங்கள் கொடுக்கும் *தர்மம்* ஒரு போதும் உங்கள் *செல்வதை* *குறைக்காது*
2. எப்போதெல்லாம் நீங்கள் ஒருவரை *மன்னித்து* விடுகின்கிறீர்களோ, அப்போதெல்லாம் உங்களது *கௌரவத்தை* *அல்லாஹ்* *அதிகப்படுத்துகின்றான்*
3. எவர் ஒருவர் *அல்லாஹ்வுக்காக* *பணிவாக* உள்ளாரோ, அவரின் தகுதியை *அல்லாஹ்* *உயர்த்துகின்றன*.

-அஹ்மத், 4:231

Saturday, October 22, 2016

ஜுமுஆவின் நன்மைகளை முழுமையாகப் பெறுபவர்


 தினம் ஒரு நபிமொழி


“மூன்று சாரார் ஜுமுஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜுமுஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜுமுஆவில் கிடைத்த அவருடைய பங்காகும். இன்னொருவர் ஜுமுஆவிற்கு வந்து (குத்பாவைச் செவியுறாமல்,) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராக இருக்கின்றார். அல்லாஹ் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான். மூன்றாமவர் ஜுமுஆவிற்கு வந்து வாய் மூடி மவுனமாக (குத்பாவை செவிதாழ்த்திக் கேட்டபடி) இருந்தார். எந்த ஒரு முஸ்லிமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. அவருக்கு, இந்த ஜுமுஆ அதை அடுத்து வரும் ஜுமுஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும். ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு” என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: அபூதாவூத் 941

நோம்பு இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு நல்லது: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அறிவிப்பு !


நோன்பு,விரதம், மற்றும் உபவாசம்   என்று பல மதத்தினராலும் அழைக்கப்படும் உண்ணாவிரதம் இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு மிகவும் நல்லது என்று இவ்வாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யோஷினோரி ஒசுமி தெரிவித்துள்ளார்.

பழுதடைந்த உயிரணுக்கள் தம்மைத்தாமே அழித்து சுத்தம் செய்துகொள்ளும் , ஆட்டோஃபஜி. என்றழைக்கப்படும் ‘ சுய துப்பரவு’ செயல்நுட்பம் குறித்த ஆய்வுகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆட்டோஃபஜி என்றால் தன்னைத்தானே உண்ணுதல் என்று பொருள். இச்செயல் மனிதன் மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாதது. இதன்மூலம்தான் நம் உடற்செல்கள் மறுசுழற்சி செய்துகொள்கின்றன.

நமது உடல் உணவை தவிர்த்து விரதம் இருக்கும் காலங்களில் ஆட்டோஃபஜி எனப்படும் இச்சுழற்சி தீவிரமடைவதால் நமது உடல் நன்கு சுத்தமடைகிறது. எனவே அவ்வப்போது விரதம் இருப்பது உடலுக்கு நல்லது என்ற நமது முன்னோர்களின் கூற்றை நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஆட்டோஃபஜி நாம் சீக்கிரமே முதுமை அடைவதிலிருந்து நம்மை காக்கிறது. உடலில் புது செல்கள் உருவாக்கப்பட்டு பழுதடைந்த செல்களும், சேதமடைந்த புரோட்டீனும் வெளியே தள்ளப்படுகின்றன. இதன் மூலம் ஆட்டோஃபஜி நமது உடல் நலத்தை நன்கு பேணி காக்கிறது.

Friday, October 21, 2016

கவிதை - நசீர்

அன்பை மெய்யாக்கி!
மனதை ஈரமாக்கி!
இரக்க குணமாக்கி!
இல்லாதோர்க்கு,,
கொடுக்கும் கரமாக்கி!
ஒற்றுமைக்கு உரமாக்கி!
உன்னை நீ தயாராக்கி!
தான் என்ற திமிர் போக்கி!
நாமென்ற  சொல் நோக்கி!
நாளெல்லாம் நடை பயின்றால்..
நபிமணி வார்த்தையிலே..
நீ வளர்ந்தாய்! அவனியிலே
சிறந்தாய்! என்றும் சிறப்பாய்..
இறையருள்  நிறைந்துமே!

*_தமிழ் பிரியன் நசீர்👆👆_*

Thursday, October 20, 2016

சவூதி அரேபியாவின் சட்டம் அல்லாஹ்வுடைய சட்டம் என்பதால் 1400 ஆண்டுகளாக சட்டத்தை அசைக்கவும் முடியவில்லை...!

உலக நாடுகளை போன்று சவூதி அரேபியாவின் சட்டமும் மனித கரங்களால் எழுதப்பட்டிருந்தால் சட்டங்களை திருத்தி எழுதியிருப்பார்கள்.

உலக நாடுகளை போன்று சவூதி அரேபியாவின் சட்டமும் மனித கரங்களால் எழுதப்பட்டிருந்தால் அதிலுள்ள ஓட்டைகளை வைத்து இளவரசர் தண்டனையிலிருந்து தப்பித்திருப்பார்.

உலக நாடுகளை போன்று சவூதி அரேபியாவின் சட்டமும் மனித கரங்களால் எழுதப்பட்டிருந்தால் சட்டம் இளவரசருக்கு வளைந்து கொடுத்திருக்கும்.

ஆனால் சவூதி அரேபியாவின் சட்டம் அல்லாஹ்வுடைய சட்டம் என்பதால் 1400 ஆண்டுகளாக சட்டத்தை அசைக்கவும் முடியவில்லை, வளைக்கவும் முடியவில்லை,

ராஜ வம்சத்தை சேர்ந்த இளவரசரால் குர்ஆனுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க இயலவில்லை.

கொலையுண்டவரின் குடும்பத்தினர் மனம் திருப்தியடைந்திருக்கும். நாட்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள்.

சவூதி அரேபியாவின் மன்னராக சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாள் ஆற்றிய உரையில்...


சவூதி அரேபியாவின் ஆட்சியும் சட்டமும் குர்ஆன், நபிவழி அடிப்படையிலேயே செயல்படும்.

என்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அநியாயமாக பாதிக்கப்பட்டால் அல்லாஹ்விடம் மறுமையில் நான் குற்றவாளியாக நிற்க வேண்டும். பொதுமக்கள் கண்ணீர் சிந்தினால் அல்லாஹ்விடம் நான் பதில் சொல்ல வேண்டும். நாட்டு மக்களை காக்க வேண்டிய பொறுப்பாளனாக நான் இருக்கிறேன்.

பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் யார் ஈடுபட்டாலும் சட்டம் தனது கடமையை செய்யும், என்னுடைய மகள் திருடினாலும் கையை வெட்டுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். என்னுடைய மகன்கள், பேரன்கள் தவறு இழைத்தாலும் தண்டனை கடுமையாக இருக்கும். இறை சட்டத்தில் எந்தவித சமரசமும் கிடையாது என்றார்.

அவர் அன்று உறுதியளித்தது போல் தன்னுடைய நாட்டின் இளவரசர் என்றும் பாராமல், தன்னுடைய பேரன் என்றும் பாராமல் அல்லாஹ்வுடைய சட்டத்தை நிலைநாட்டி உலகத்தை உற்று நோக்க வைத்து விட்டார்.

விதியைப் பற்றி சர்ச்சை செய்யாதீர்கள்…

 தினம் ஒரு நபி மொழி


நபித்தோழர்களில் சிலர் விதி தொடர்பாக தர்க்கம் செய்து கொண்டிருந்த போது அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். (அவர்களின் இச்செயலைக் கண்ட) உடனே கோபத்தால், நபி (ஸல்) அவர்களின் முகம் மாதுளை முத்துக்களைப் போன்று சிவந்து விட்டது. தமது தோழர்களிடம், “இவ்வாறு செய்யுமாறு தான் நீங்கள் உத்தரவிடப்பட்டீர்களா? அல்லது இதற்காகத் தான் நீங்கள் படைக்கப்பட்டீர்களா? குர்ஆனில் ஒன்றை மற்றொன்றுடன் மோதவிடுகின்றீர்களே. உங்களுக்கு முன்னால் வாழ்ந்த சமுதாயத்தவர்கள் விதியில் சர்ச்சை செய்த காரணத்தினால் தான் அழிந்து போனார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: இப்னுமாஜா 82

Wednesday, October 19, 2016

இரக்கமுள்ள மக்கள் அதிக வாழும் நாடுகள் பட்டியலில் 3 அரபு நாடுகள்!


அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம் மற்றும் இன்டியான பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய சர்வேயில், அதிக இரக்கமுள்ள, உறவுகளை ஆதரித்து வாழ்கின்ற, பெற்றோரின் கடமைகளை சரிவர செய்கின்ற என கருணையுள்ளம் கொண்ட ஆதரவான மக்கள் அதிகம் வாழும் நாடுகள் என்ற முதல் 10 நாடுகளும் 3 அரபு நாடுகள் இடம் பெற்றுள்ளன.

2 ஆவதாக சவூதி அரேபியாவும், 5 ஆவதாக ஐக்கிய அரபு அமீரகமும் 10 வது இடத்தில் குவைத்தும் இடம் பெற்றுள்ளன என்றாலும் கலாச்சார சீரழிவின் சிகரமான அமெரிக்கா போன்ற நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 63 நாடுகளில் சுமார் 104,000 மக்களிடம் நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த ஆன்லைன் சர்வேயை கேள்விக்குறியாக்கியுள்ளன.

ஆன்லைன் சர்வேக்கு பதில் கள ஆய்வு நடத்தப்பட்டால் முடிவுகளில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தகுதியிழக்கக்கூடும்.

முதல் 10 இடங்களுக்கான பட்டியல் இதோ:
1. ஈக்வேடார்
2. சவுதி அரேபியா
3. பெரு
4. டென்மார்க்
5. ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
6. (தென்) கொரியா
7. யுனைடெட் ஸ்டேட்ஸ் (அமெரிக்கா)
8. தைவான்
9. போஸ்டா ரிகா
10. குவைத்

பயனுள்ள சில உபதேசங்கள்


தினம் ஒரு நபி மொழி



ஒரு நாள் (பயணத்தின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அவர்களின் வாகனத்தில் ) அவர்களுக்குப் பின்னால் நான் அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், சிறுவனே! உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத் தருகிறேன். “நீ அல்லாஹ்வுடைய விஷயத்தில் (அவனுக்குப் பயந்து) பேணுதலாக நடந்துகொள். அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய விஷயத்தில் (அவனுக்குப் பயந்து) நீ பேணுதலாக நடந்துகொள். அவனது அருளை நீ காண்பாய். எதையும் கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடு. நிச்சயமாக இந்த சமுதாயம் (முழுவதும்) உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனையும் அவர்கள் உனக்கு நன்மையாக செய்துவிட முடியாது. அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனையும் அவர்கள் உனக்குத் தீங்காக செய்துவிட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன; ஏடுகள் காய்ந்துவிட்டன” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 2569

மதம் இல்லாமல் நல்லவனாக வாழ முடியாதா ??


Tuesday, October 18, 2016

பொறுப்பு!!!

தினம் ஒரு நபி மொழி

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

ஸஹீஹ் புகாரி
அத்தியாயம் : 93. நீதியும் நிர்வாகமும்

அல்லாஹ்வைத் தவிர மற்றவைகளின் மீது சத்தியம் செய்ததன் பரிகாரம்…

16/10/16


தினம் ஒரு நபி மொழி



                   

சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது மட்டுமே செய்ய வேண்டும், மற்ற எதன் மீதும் (குர்ஆன் உட்பட) சத்தியம் செய்யக் கூடாது, அப்படி மற்றவைகளின் மீது சத்தியம் செய்வதானது இணைவைப்பில் சேர்க்கும் காரியமாகும். அப்படித் தெரியாமல் அல்லாஹ்வைத் தவிர மற்றவைகளின் மீது சத்தியம் செய்து விட்டால் அதற்குப் பரிகாரமாக ‘லா இலாஹ இல்லல்லாஹ்‘ என்று கூறி விட வேண்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6650