''நீர் முஸ்லிம் என்பதற்கு என்ன அடையாளம் ''என்று ஒருவரிடம் கேட்டால் அதற்க்கு அவரின் பதில் என்னவாயிருக்கும் ..? என் பெயர் அப்துல் ரஹ்மான் பெயரை வைத்து உனக்கு தெரியாதா ''நான் ஒரு முஸ்லிம் என்று சொல்வார்.
ஒருவரின் பெயரை வைத்து ''இவர் முஸ்லிம் என்று கணிக்க முடியுமா ? பெருமானார் [ஸல்] அவர்களின் காலத்தில் எத்தனை பேர்கள் ''முஸ்லிம் பெயர்களை தாங்கி கொண்டார்கள் '' ஆனால் அவர்கள் முஸ்லிமாக இல்லை.
ஒருவர் முஸ்லிம் என்பதற்கு ''அவர் அணிந்த தொப்பியை வைத்து கூறமுடியுமா ? நிச்சயமாக அப்படியும் சொல்லிவிட முடியாது! ஒரு முஸ்லிம் தொப்பி போடுவார் , போடாமலும் இருப்பார்.
ஒருவரின் நல்ல குணத்தை வைத்து ''இவர் நிச்சயமாக ஒரு முஸ்லிமாக தான் இருப்பார் என்று . அப்படியும் கூறமுடியாது. நாத்திகன் கூட ஒரு நல்ல குணவாதியாக இருக்கலாம்..
தர்மம் செய்வதை வைத்து ''இவர் ஒரு முஸ்லிம் என்று அடையாளம் காட்டமுடியுமா ? அதுவும் முடியாது . தருமம் எல்லா மதத்திலும் செய்கிறார்கள்.
ஒருவர் முஸ்லிம் என்பதற்கு அடையாளம் '' அவர் ஒவ்வொருநாளும் ஐந்து வேலை மஸ்ஜிதிற்கு சென்று தொழுபவர் தான் .''இவர் முஸ்லிம் என்பதற்கு இதுதான் மிகப் பெரிய அடையாளம் ! தொழுகை மார்க்கத்தின் தூணாகும் ! அமல்களில் மிக உன்னதமானதாகும் ! அதை நிறைவேற்றுபவர் மார்க்கத்தை நிலை நாட்டுகிறார் . அதை வீணடிப்பவர் மார்க்கத்தை தகர்த்தவராவார் .
''எனது கண் குளிர்ச்சி தொழுகையில் இருக்கிறது.
[சுனனுன் நஸாயீ ]
''எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று , திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்'' என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
ஸஹீஹுல் புகாரி]
யாரொருவரைத் தொடர்ந்து மஸ்ஜிதுக்குச் செல்லும் பழக்கமுள்ளவராகக் காண்கிறாரோ அவர்' ''ஒரு விசுவாசி '' என்று சாட்சி கூறும். ஏனெனில் , அல்லாஹ்வின் மீதும் , மறுமைநாளில் மீதும் நம்பிக்கை வைப்பவரே மஸ்ஜிதை நிரப்புவார் என்று அல்லாஹ் கூறியுள்ளான் .
ஆதாரம் .. திர்மிதி]
நபி ஸல்] அவர்கள் கூறியதாக ஜாபிர் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. ''ஐந்து நேரத் தொழுகையை தொழுபவர் , உங்களில் ஒருவரின் வீட்டு வாசலில் ஓடும் ஆழமான ஆற்றில் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை குளிப்பவரைப் போன்றாவார் .
நூல்.. ஸஹீஹ் முஸ்லிம் ]
இப்னு மஸ் வூது [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. ஒரு மனிதர் ஒரு பெண்ணை முத்தமிட்டு விட்டார் . அவர் நபி [ஸல்] அவர்களிடம் அதைக் கூறினார். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கிவைத்தான் ..
பகலின் இரு முனைகளாகிய காலை, மலைகளிலும் இரவின் நிலைகளிலும் நீங்கள் [தவறாது] தொழுது வாருங்கள்! நிச்சயமாக நன்மைகள் பாவங்களை போக்கிவிடும் . [இறைவனை] நினைவு கூறுவோருக்கு இது ஒரு நல்லுபதேசம் ஆகும்.
அல்குர் ஆன் .. 11..115]
''அம்மனிதர் [இந்த வசனம்] எனக்கு மட்டுமா..? என்றார். நபி [ஸல்] அவர்கள், 'எனது உம்மத்தினர் அனைவருக்கும் [பொருந்தும்] என்று கூறினார்கள்.
ஸஹீஹுல் புகாரி. முஸ்லிம்]
தொழுகையின் முக்கியத்துவம் பற்றி நிறைய பொன்மொழிகள் இருக்கின்றன.. மறுமையில் கேட்கப்படும் முதல் கேள்வி ''தொழுகையைப் பற்றித்தான் '' என்பது ஒரு ஹதீஸின் கருத்து இருக்கிறது.
ஒரு முஸ்லிமின் அடையாளம் என்பது அவர் ஒரு தொழுகையாளியாக இருக்கவேண்டும்! அவர் ஐந்து வேளை தொழுதால் , அவர் ஐந்து வேளை குளிப்பது போன்று . அவரின் உடலில் ஏதாவது ஒரு சின்ன அழுக்காவது இருக்குமா??

No comments:
Post a Comment