அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Sunday, January 1, 2017

மீண்டும் ஒருமறை நாம் பிறக்கப்போவது இல்லை...நம் பெற்றோரை அவர்கள் மவுத்திற்கு பிறகு காணப்போவதுமில்லை, ஆகவே


1. தாய் தந்தையை சபிக்காதீர்.

2. அடுத்தவர் பெற்றோரையும்
ஏசாதீர்.

3. அவர்களை அவர்களுடைய
முதுமை காலத்தில்
பேணிக்காப்பீர்.

4. அவர்களது தவறுகளூக்காக
அவர்களை ஒதுக்கி விடாதீர்.

5. உணவிற்காக மருத்துவத்திற்காக
வேறு செலவீணங்களுக்காக
அவர்களை பிறரிடம் கையேந்தும்
நிலைக்கு விட்டு விடாதீர்.

6. அவர்களின் தேவைகளை
நேரமறிந்து பூர்த்தி செய்வீர்.

7. அவர்களை வைத்து பராமரிக்க
இயலவில்லை என தட்டிக்கழித்து
கைவிட்டு விடாதீர்.

8. நீங்கள் உண்பது ஒரு
ரொட்டியாயினும் ஒரு
பழமாயினும் அதிலும் பங்கிட்டு
அவர்களின் பசியை போக்குவீர்.

9. மரணத்தருவாயில் அவர்கள்
அருகிலிருந்து அவர்கள்
ஓரிறையை ஏற்றவர்களாயிருப்பின்
அவர்களுக்காக அல்லாஹ்விடம்
பாவமன்னிப்பு தேடுவீர்.

10.மண வாழ்க்கையிலும் , தொழில்
துறையிலும் , குழந்தை
வளர்ப்பிலும் அவர்களது
அறிவுரைகளை புறக்கணிக்காதீர்.
11. நீங்கள் அவர்களோடு
இல்லாதபட்சத்தில் உண்ணும்போதும்
பருகும்போதும் சந்தோஷத்தில்
திளைத்திருக்கும் போதும்
அவர்களை நினைக்க மறக்காதீர்கள்.

12. ஒருவேளை உங்களது காலம்
மிக குறைவானது என்பதனை
நீங்கள் உணர்ந்திருந்தால் உங்களது
பெற்றோரையும் உங்கள்
துணைகளின் பெற்றோரையும்
பேணிக்காக்க உங்களது
பிள்ளைகளை வேண்டுவீர்.

13. உங்களது பெற்றோர் உங்களிடம்
சொல்லி வைத்திருக்கும்
வஸியத்தை மறவாமல் செய்து
முடிப்பீர்.

14. அவர்களுடைய வஸியத்தில்
( மரண சாசனத்தில் ) யார் யாருக்கு
எதை கொடுக்க சொல்லி
உள்ளார்களோ அதை அவர்களிடம்
நீங்களாகவே ஓப்படைத்து
விடுங்கள்.

15. உங்களது பெற்றோர் யாரிடமும்
கடன் பாக்கி வைத்திருப்பின்
அதனை அவர்கள் கேட்பதற்கு
முன்பாகவே பூரணமாக அடைத்து
விடுங்கள்.

நமக்காக பல இன்னல்களை சகித்து
தங்கள் சுய இன்ப துன்பங்களை ஒத்தி
வைத்து நமக்காக வாழ்ந்து முடித்த
நம் பெற்றோரே நமது ஆயுட்கால
பொக்கிஷம்... அவர்களை
பாதுகாப்போம். இன்ஷா அல்லாஹ்
நம் அனைவருக்கும்
அவ்வாறானதொரு தாஹத்தையும்
சகிப்புத்தன்மையும்
பொறுமையையும் அல்லாஹ்
வழங்குவானாக
பெற்றோர் அன்றி நம் இன்பத்திற்கும்
வெற்றிகளுக்கும்
பாடுபடுபவரும் பிரார்த்தனை
செய்பவரும் யாருமில்லை... ஒரு
பிள்ளைக்கு அவனது தாயின்
துஆவே முதலில் ஏற்றுக்
கொள்ளப்படுகிறது. பெற்றோரை
பேணுங்கள், மனைவி/ கணவன்
அவர்களது பெற்றோரும்
உங்களுக்கு அமானிதங்களே...

No comments:

Post a Comment