தவளும் வயதில் கடமையில்லை..
ஒரு வழியாக வேலைக்கு செல்கிறோம் .. இப்போது மனம் வேலை செய்யும்போது தொழுகச் செல்வது இடைஞ்சூறாக உள்ளது..
அதனால் நிக்காஹ் செய்த பிறகு எப்படியாவது தொழுகையை பிடித்துவிட வேண்டும் என்று நிய்யத் வைக்க ஒரு வழியாக நிக்காஹ்வும் முடிகிறது..
இப்போது மனம் குழந்தைக்கு தாவுகின்றது..
நிச்சயமாக அல்லாஹ் எனைக்கு குழந்தையை கொடுத்த பிறகு நான் கண்டிப்பாக 5 நேரமும் தொழுகுவேன் என்று சபதமெடுத்து அல்லாஹ்வும் குழந்தை செல்வத்தை கொடுத்த பிறகு...
வாழ்க்கையில் 40 வயதுக்குள் செட்டில் ஆகிரம்னு கடுமையாக போராடுறேன் 40 வயதில் செட்டில் ஆனப் பிறகு 5 நேரம் மட்டுமில்லை தஹ்ஜூத்தும் தொழுகுவேன் என்று கூறிவிட்டு ஒரு வழியாக செல்வங்களும் ஈட்டி 40 வயதும் கடந்து விடுகிறது..
இப்போது மனம் ஆற்ற வேண்டிய கடமைகள் நிறையா இருக்கிறதே அதையெல்லாம் முடீத்துவிட்டால் தொழுகை பள்ளிவாசல் என்றே கடக்கலாம் என நிய்யத்தை மாற்றி வைத்து கடமைகளை ஆற்றுகிறார்..
பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து, நல்ல வேலையும் வாங்கி கொடுத்து, நிக்காஹ்வும் முடித்துவிட்டார்..
சொந்த வீடு, கார் என எல்லா வசதிகளும் கிடைத்துவிட்டது
வயதோ 55 தாண்டிவிட்டது...
அன்று இரவு படுக்க செல்கிறார் நாளை காலை பஜர் தொழுகைக்கு செல்ல வேண்டும் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு உறங்குகிறார்..
ஆனால்
அவர் பஜர்க்கும் எழுந்திரிக்கவில்லை!
ஒரு வழியாக மஃரிப் தொழுகைக்கு பள்ளிவாசல் வந்தடைகிறார்..
அவர் தொழவில்லை..
ஆனால் அவருக்கு தொழுகை வைக்கப்படுகிறது..
அவர் பள்ளிக்கு நடந்து வரவில்லை...
சந்தாக்கில் படுக்க வைத்து 4 நபர்களால் தூக்கி வரப்படுகிறார்!
முடிவில் வாழ்க்கை முழுவதும் தொழாமலே தன்னுடைய கப்ரில் அடங்கிவிட்டார்...
அவருடைய கேள்வி கணக்குக்கு அவர்தான் விடைகொடுக்க வேண்டும் !
இதை எழுதியதற்கு காரணம் நம்மில் பல பேர் இப்ப, அப்ப என்று தொழுகையை காலம் கடத்தி கொண்டிருக்கின்றனர்...
இனிமேலாவது தொழுகையை பிடிக்க நினைப்பவர்கள் அடுத்த வக்திலயே ஜமாத்துடன் போய் தொழுகையை பிடியுங்கள்..
5ல் வளையாதது 50 லும் வளையாதது...
அதனால் சிறு வயதிலேயே உங்கள் பிள்ளைகளை தொழுகச் சொல்லி ஏவுங்கள்...
இன் ஷா அல்லாஹ்....
No comments:
Post a Comment