அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Thursday, December 1, 2016

அனைத்திலும் ஜோடி உண்டு

இவ்வசனங்களில் (13:3, 20:53, 36:36, 43:12, 51:49) உயிரினங்களில் மட்டுமின்றி தாவரங்களிலும் ஜோடிகளை அல்லாஹ் அமைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. 

தாவரங்களிலும் ஆண், பெண் உள்ளன என்பது பிற்காலக் கண்டுபிடிப்பாகும். 

தாவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாகப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. 

மேலும் ஜோடிகளைப் பற்றிக் குறிப்பிடும் சில வசனங்களில் இவர்கள் அறியாமல் இருப்பவற்றிலிருந்தும் ஜோடிகளைப் படைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான். (பார்க்க: திருக்குர்ஆன் 36:36) 

அன்றைய மனிதர்கள் அறியாமல் இருந்த பல ஜோடிகளை இன்றைக்கு மனிதன் கண்டுபிடித்திருக்கின்றான். 

மின்சாரத்தில் பாஸிட்டிவ், நெகட்டிவ் என்ற ஜோடிகள் இருக்கின்றன. அதுபோல் அணுவில் கூட ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான், எலக்ட்ரான் என்று ஜோடிகள் இருக்கின்றன. இப்படி மனிதர்கள் அறியாமல் இருக்கின்ற பல விஷயங்களிலும் ஜோடிகளாகவே அமைத்திருப்பதாக இறைவன் குறிப்பிடுவதிலிருந்து "இது முஹம்மது நபியின் சொந்தச் சொல் இல்லை; இறைவனின் வார்த்தை தான்" என்பதை அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment