அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Thursday, December 29, 2016

அகதிகளை பராமரிப்பதில், சவூதியின் முன்மாதிரி

அரபு வசந்தத்தைத் தொடர்ந்து யெமன், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் தோற்றம் பெற்று தொடர்ந்த வண்ணமுள்ளன. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதும், மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயங்களுக்கு உள்ளாவதும் இரத்தம் சிந்துவதும் தொடர்கதையாகியுள்ளன.

அதனால் இலட்சக்கணக்கான மக்கள் தமது பாரம்பரிய வீடு வாசல்களையும் இருப்பிடங்களையும் விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். தற்போது கூட சிரியாவின் அலொப்போவிலிருந்து பெருந்தொகையான மக்கள் வெளியேறி வருகின்றனர்.

இம்மக்கள் அயல் பிரதேசங்களிலும் அயல் நாடுகளிலும் மாத்திரமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் தஞ்சமடைகின்றனர்.

தற்போது அலொப்போவைப் போன்று ஏற்கனவே சிரியாவின் இட்லிப், கொபானி போன்ற பிரதேசங்களில் உக்கிர மோதல் இடம்பெற்ற சமயம் சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளியேறிய மக்களில் ஒரு தொகையினர் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் ஐரோப்பாவுக்குள் சென்று கொண்டிருந்தனர். இந்தக் காலப் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற பல படகுகள் மத்திய தரைக்கடலில் மூழ்கின. அதனாலும் நூற்றுக்கணக்கான மக்கள் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அவ்வாறு உயிரிழந்தவர்களில் சுமார் நான்கு வயது மதிக்கதக்க அயிலான் குர்தி என்ற பச்சிளம் பாலகனும் ஒருவராவார். இவரது தந்தையைத் தவிர அவரது தாய், சகோதரன் உள்ளிட்ட மூவரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். அத்தோடு அயிலானின் சடலம் துருக்கி நாட்டுக் கரையோரத்தில் கரையொதுங்கி இருந்தது. இது தொடர்பான புகைப்படம் ஊடகங்களில் வெளியானதும் உலகில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டதோடு உலக மனிதாபிமானத்தையும் கேள்விக்கு உள்ளாக்கியது.

இவ்வாறான சூழலில் சிரியாவின் அயல் நாடான சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் அகதிகளை மனித நேயம் கொண்டு ஏற்காததால்தான் இடம்பெயரும் மக்கள் உயிராபத்து மிக்க பயணத்தில் ஈடுபடும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் கொடுக்கின்றன. ஆனால் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தம் சகோதர மக்கள் முகம் கொடுத்துள்ள பேரவலங்களைக் கண்டும் காணாதது போன்று சொகுசாக வாழ்ந்து வருகின்றன.

குறிப்பாக சவூதி அரேபியா, தம் அயல்நாட்டு சிரிய, யெமன் சகோதர மக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்காவிட்டாலும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள இம்மக்களை மனிதாபிமானக் கண்கொண்டு நோக்கக் கூடாதா? இம்மக்களுக்காக தம் மண்ணில் ஒரு முகாமையாவது அமைத்து அவர்களை பராமரிக்கக் கூடாதா? என்றவாறெல்லாம் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனை சவூதி அரேபியாவோ ஏனைய நாடுகளோ கண்டு கொண்டதாக அச்சமயம் காட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் ஆதில் பின் அஹ்மத் அல் ஜுபைர், சிரியாவிலும் யெமனிலும் இடம்பெயரும் மக்கள் தொடர்பில் சில உண்மைகளை அண்மையில் வெளியிட்டிருந்தார். அந்த உண்மைகள் இந்த அகதிகள் விவகாரத்தில் சவூதிய அரேபியாவை காராசாரமாக விமர்சித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியவர்களை மெய்சிலிர்க்க வைத்து வெட்கித்து தலைகுனிய வைத்திருக்கும். அந்தளவுக்கு உணர்வுபூர்வமான உண்மைகள்.

அதாவது “ சிரிய போர் ஆரம்பமானது தொடக்கம் இற்றைவரையும் 24 இலட்சம் சிரிய அகதிகளும், கடந்த ஒன்றரை வருட காலப் பகுதியில் பத்து இலட்சம் யெமன் நாட்டு அகதிகளும் சவூதி அரேபியாவுக்குள் இடம்பெயர்ந்து அடைக்கலம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு பாடசாலைகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன“ என்று வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டி இருந்தார்.

இவ்வளவு பெருந்தொகை அகதிகளுக்கு சவூதி அரேபியா அடைக்கலம் கொடுத்திருக்கிறதா? ஆனால் அங்கு ஒரு அகதி முகாமைக் காணக் கிடைப்பதில்லையே. சவூதிக்கு இடம்பெயர்ந்த மக்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர்? அவர்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றனர்? இவ்வாறான கேள்விகளும் ஆச்சரியமும் எவருக்கும் எழவே செய்யும். அது நியாயமானதே.

அந்த வினாக்களுக்கும், ஆச்சரியத்திற்கும் பதிலளிக்கும் வகையில் இரண்டு புனித தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் ஏற்கனவே நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார்.

அதாவது “சவூதி அரேபிய மண்ணில் அடைக்கலம் பெறும் எந்தவொரு முஸ்லிமும் பரதேசிகளைப் போன்று கூடாரங்களிலோ அல்லது அடிப்படை வசதிகள் அற்ற முகாம்களிலோ அல்லல்படக் கூடாது. அவர்களுக்கு உடனுக்குடன் வேலைவாய்ப்பு விஸா வழங்கப்பட வேண்டும்.

அவர்கள் சுயமரியாதையோடு தொழில் செய்து கௌரவமாக தலைநிமிந்து வாழ வேண்டும். அவர்களுக்கான சுகாதார வசதிகள், அவர்களது பிள்ளைகளுக்கான பாடசாலை வசதிகள் உள்ளிட்ட சகல வசதிகளும் எதுவித குறைபாடுகளும் .இன்றி செய்து கொடுக்கப்பட வேண்டும்.“

“எமது மண்ணில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ள எவரும் அகதி என்ற கண் கொண்டு நோக்கப்படலாகாது. அவர்கள் எமது விருந்தினர். அவ்வாறே அவர்கள் நடாத்தப்பட வேண்டும்" என்று தம் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மன்னர் கட்டளை பிறப்பித்திருக்கின்றார்.

அதேற்கேற்பவே சவூதி அரேபியாவில் அடைக்கலம் பெற்றுள்ள சகல அகதிகளுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதனால்தான் ஏனைய நாடுகளைப் போன்று சவூதி அரேபியாவில் அடைக்கலம் புகுந்த எவரும் முகாம்களில் தனிமைப்படுத்தி வைத்து பராமரிக்கப்படாதுள்ளனர்.

அதேநேரம் மன்னர் சல்மான் மற்றொன்றையும் கூறி வைக்கத் தவறவில்லை. அதாவது, “சவூதி அரேபிய மண்ணில் அடைக்கலம் பெற்றுள்ளவர்கள் தம் நாட்டு பிரச்சினைகள் தீர்ந்து அவர்கள் சுயவிருப்பின் பேரில் இருப்பிடங்களுக்கு திரும்பும் வரையும் அவர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்து வாழ இடமளிக்கப்படும்“ என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்றைய நவீன யுகத்தில் யுத்தங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்கின்ற மக்கள் அகதி முகாம்களிலும் கூடாரங்களிலும் வைத்து பராமரிக்கப்படுவதுதான் வழமை.

இந்த ஒழுங்கையே உலகில் பெரும்பாலான நாடுகள் கையாளுகின்றன. ஆனால் சவூதி அரேபியா அகதிகள் பராமரிப்பு விடயத்தில் இப்பராம்பரியத்திற்கு முற்றிலும் மாற்றமான ஒழுங்கைக் கடைப்பிடித்து வருகின்றது. அது இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்னர் காட்டிக் கொடுத்த மனிதாபிமானம் மற்றும் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டது. .

அதனால்தான் வெளிவிவகார அமைச்சர் ஆதில் பின் அஹ்மத் ஜுபைர், “நாம் எமது மண்ணில் இலட்சக்கணககான அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரிக்கின்றோம். இதனை பிரபல்யம் கருதி நாம் செய்யவில்லை. மாறாக பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள எமது உடன் பிறப்புக்களுக்கு உதவி செய்யும் நோக்கிலேயே இதனைச் செய்கின்றோம். அதனால் இதனை நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை“ என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இது எவ்வளவு பெரிய பதில். எவ்வளவு பெரிய ஏற்பாடு. அகதிகளைப் பராமரிப்பது என்பது இலகுவான காரியமா? ஆனால் அவர் இவ்விடயம் தொடர்பில் மிகச் சாதாரணமாக பதிலளித்திருக்கின்றார். இது சவதி அரேபியாவின் மனித நேயத்திற்கும் காருண்யப் பண்புக்கும் நல்ல எடுத்துக்காட்டு.

ஆகவே சவூதி அரேபியா தம் மண்ணுக்கு இடம்பெயர்ந்தவர்களைப் பராமரிக்கும் ஒழுங்கு முழு உலகுக்குமே ஒரு முன்மாதிரி விளங்குகின்றது. இது மிகத் தெளிவான உண்மை.

உணவுப்பொருள்_கீழே_விழுந்தால்

தினம் ஒரு நபி மொழி



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருடைய ஒவ்வொரு அலுவலிலும் ஷைத்தான் பங்கேற்கிறான்.

மனிதன் உணவு உண்ணும்போதும் அவன் பங்கேற்கிறான்.

 (உண்ணும்போது) உங்களில் ஒருவரிடமிருந்து உணவுக் கவளம் கீழே விழுந்துவிட்டால்,

 அதில் படுவதை சுத்தப்படுத்தி விட்டு,

பிறகு அதை உண்ணட்டும்.

அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம்.

உண்டு முடித்ததும் அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும்

ஏனெனில்,

அவரது எந்த உணவில் வளம் (பரக்கத்) இருக்கும் என்பதை அவர் அறியமாட்டார்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில்

”உங்களில் ஒருவரிடமிருந்து உணவுக்கவளம் விழுந்துவிட்டால்” என்பதிலிருந்தே ஹதீஸ் ஆரம்பமாகிறது.

 ”உங்களில் ஒருவருடைய ஒவ்வொரு அலுவலிலும் ஷைத்தான் பங்கேற்கிறான்”

எனும் ஆரம்பக் குறிப்பு அவற்றில் இல்லை.

- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில்,

”கை விரல்களை உறிஞ்சிக் கொள்வது” தொடர்பாக இடம்பெற்றுள்ளது.

 அபூசுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில்

”உணவுக் கவளம் விழுந்துவிடுவது” தொடர்பான குறிப்பு இடம்பெற்றுள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் 4138

 அத்தியாயம் : 36. குடிபானங்கள்

Monday, December 26, 2016

புத்தாண்டு கொண்டாடுலாமா...???




யா அல்லாஹ் என்னுடைய நாட்டிற்கும், மார்க்கத்திற்கும் பயனுள்ள வகையில் இந்த பட்ஜெட்டை அமைத்திடுவாயாக என்ற துஆவோடு 2017 க்கான பெட்ஜெட்டில் கையெழுத்திட்டார் மன்னர் சல்மான்......!!



உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் 2017 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மன்னர் சல்மான் அவர்கள் யா அல்லாஹ் என்னுடைய நாட்டிற்கும், மார்க்கத்திற்கும் பயனுள்ள வகையில் இந்த பட்ஜெட்டை அமைத்திடுவாயாக என்று துஆவோடு கையெழுத்திட்டார்.

அந்த பட்ஜெட்டில் 890 சவூதி பில்லியன் ரியால்கள் செலவு கணக்குக்கான பட்ஜெட் வெளியிடப்பட்டது.

*மஃரிபுடைய சுன்னத்*


தினம் ஒரு நபி மொழி



*மஃரிப் தொழுகைக்கு முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள், பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள் ஆகும்.*

*'மஃரிபிற்கு முன்னர் தொழுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு மூன்றாவது முறை 'விரும்பியவர் தொழட்டும்'* என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

நூல்: புகாரீ 1183

அபூதாவூதின் 1089 அறிவிப்பில் 'மஃரிபிற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுங்கள்' என்று இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் *மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்.* (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 937

Tuesday, December 20, 2016

தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே, சுவர்க்கம் செல்லமுடியும்

மேலுள்ள புகைப்படத்தில், ஐரோப்பிய கல்லூரிகளில் இளம் மாணவர்கள் இறைவனை தொழும் அழகைப் பாருங்கள். இடம் இல்லை என்றாலும் படிக்கும் டெஸ்குகளை விரிப்பாக ஆக்கி தங்களின் கடமையை நிறைவேற்றுகின்றனர்.

இந்த தொழுகையில் நாம் கவனமாக இருந்தால் உலகின் எந்த பிரச்னைகளையும் சுலபமாக தீர்க்கும் வழியை இறைவன் நமக்கு காட்டுவான். தொழுகையில் கவனத்தை செலுத்தி தீய செயல்களிலிருந்து தவிர்ந்து கொள்வோம்.

தொழுகையை வேண்டுமென்றே யாராவது புறக்கணித்தால் அவன் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் வெளியேறியவனாகக் கருதப்படுவான்.

ஓர் அடியானுக்கும் நிராகரிப்பிற்கும் இடையில் பிரித்துக் காட்டுவது தொழுகையை விடுவதாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

''நமக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் இடையில் பிரித்து காட்டுவது தொழுகைதான். எனவே எவன் தொழுகையை விட்டு விடுகிறானோ, அவன் காஃபிராகி விட்டான்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: புரைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ, நஸயீ)

தொழுகையைத் தவிர வேறு எந்த செயலையும் விடுவது இறை நிராகரிப்பாகும் என நபித்தோழர்களில் யாரும் கருதவில்லை என அப்துல்லாஹ் பின் ஷகீக் அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதீ)

தொழுகையை விடுவது நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகும்.

சுவனவாசிகள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள் உங்களை ஸகர் என்ற நரகத்தில் நுழையவைத்தது எது? (என்று) அதற்கவர்கள், தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 74:40-43)

இவர்களுக்குப் பின்னர் (வழிகெட்ட) தீய பின் தோன்றல்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள், தொழுகையை(த் தொழாது) வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் சந்திப்பார்கள். (அல்குர்ஆன் 19:59)

தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும்.

இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள், இவர்கள் எத்தகையோரென்றால் ஃபிர்தௌஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரமாக கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:9-11)

தொழுகையை வேண்டுமென்றே விடக்கூடியவன், தொழுவதற்குறிய உடல் ஆரோக்கியம் இருந்தும் தொழாமலிருந்தவன், தொழுகையை தொழுகையாளியை ஏளனமாக கருதியவன், தொழுகையாளியை கிண்டலும் கேலியும் செய்பவன் முஸ்லிம்களின் சகோதரன் அல்ல. இது போன்ற மனிதர்களுடன் குடியிருக்க நேரிட்டால் அவர்களுக்கு தொழுகையை விடுவதினால் ஏற்படும் விளைவுகளை இறை வசனங்களையும் நபிமொழிகளையும் எடுத்துக்கூறி தொடர்ந்து அவர்களுக்கு உபதேசித்து கொண்டே இருக்க வேண்டும்.

அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம். (அல்குர்ஆன் 9:11)

பஜ்ருடைய சுன்னத்

தினம் ஒரு நபி மொழி


முன் பின் சுன்னத்துக்களில் பஜ்ருடைய முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்திற்கு நபி (ஸல்) அவர்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் *உபரியான தொழுகையில் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைப் போல் வேறு எதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.*

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரீ 1163

அல்லாஹ்விடத்தில உங்கள் 'துஆ' ஏன் ஏற்கப்படவில்லை? இதோ 10 காரணங்கள்


இப்ராஹிம் இப்னு அத்ஹம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இஸ்லாத்திற்காக வாழ்ந்து பல மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்து தன் உயிரை விட்டவர். ஒரு முறை அவர்கள் வீதிலையே நடந்து சொல்லும்போது மக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு நீங்கள் சொன்னது போல் அல்லாஹ்வை வணங்கி வாழ்கிறோம் ஆனால் அல்லாஹ் ஏன் எங்கள் ''துஆ''க்களை ஏற்று கொள்ளவில்லை என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 10 காரணங்களை முன் வைத்தார்கள்.

1) நீங்கள் அல்லாஹ் தான் உங்கள் இறைவன் என அறிந்து வைத்து இருக்கிறிர்கள் ஆனால் அதற்கான எந்த உரிமையும் அவனிடத்தில் நீங்கள் கொடுக்கவில்லை.

2) அவனுடைய வேதம் திருக்குர்ஆன் என ஏற்றுக் கொண்டீர்கள் ஆனால் நீங்கள் அதன் படி அமல்கள் செய்யவில்லை.

3) அல்லாஹ் கொடுத்த உணவை உண்டீர்கள் ஆனால் அதற்காக அவனிடத்தில் எந்த நன்றியையும் நீங்கள் செலுத்தவில்லை.

4) அல்லாஹ்வின் தூதர், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என ஏற்று கொண்டிர்கள் ஆனால் அவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றி வாழவில்லை.

5) ஷைத்தான் உங்கள் எதிரி என ஒப்புகொண்டிர்கள். ஆனால் உங்களின் பல செயல்களில் ஷைத்தானை சேர்த்து கொள்கிறீர்கள்.

6) மரணம் உறுதியானது என நம்புகிறீர்கள் ஆனால் அதற்கான எந்த முன் எர்ப்பாட்டையும் நீங்கள் செய்யவில்லை.

7) சொர்க்கம் உள்ளது உண்மை என ஏற்று கொண்டீர்கள் ஆனால் அதில் உள்ளே நுழைவதற்கு எந்த நல்ல அமலையும் நீங்கள் செய்யவில்லை.

8) நரகம் உண்மை என ஏற்று கொண்டீர்கள் ஆனால் அதில் இருந்து பாதுக்காப்பு பெற எந்த முயற்சியையும் நீங்கள் எடுக்கவில்லை.

9) பிறரின் குறைகளை அலசி ஆராய்கிறீர்கள் ஆனால் உங்கள் குறைகளை மறைத்து கைவிட்டு விடுகிறீர்கள்.

10) மரணித்தவரை கொண்டு போய் அடக்கம் செய்கிறீர்கள் ஆனால் அதில் இருந்து எந்த படிப்பினையும் விழிப்புணர்வும் நீங்கள் பெறவில்லை.

இந்த 10 காரணங்களுக்காக அல்லாஹ் உங்களின் பிரார்த்தனையை செவிமடுக்கவில்லை என கூறினார்கள்.

சொர்க்கம்

தினம் ஒரு நபி மொழி



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "என் நல்லடியார்களுக்
காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்" என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துள்ளது சொற்பமே! - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Monday, December 19, 2016

நான்... நான்... நான்...

நான் சம்பாதித்தேன், 

நான் காப்பாற்றினேன், 

நான் தான் வீடு கட்டினேன், 

நான் தான் உதவி செய்தேன், 

நான் உதவி செய்யலனா அவர் என்ன ஆகுறது,

நான் பெரியவன்,

நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன், நான் நான் நான் நான் என்று மாறுதட்டி கொள்ளும் மனிதர்களே...

நான்தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா?

நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா?

நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா?

நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா??

நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா ?

நான் தான் காய்களை பழமாக மாற்றுகிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா ?

நான் தான் கடலில் மீன் பிடிக்கிறவனுடைய வலையில் மீனை சிக்க வைக்கிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா?

இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு. 

சுன்னத் தொழுகையின் பலன்கள்

தினம் ஒரு நபி மொழி



*“யார் ஒவ்வொரு நாளும் (கடமையான தொழுகைகள் தவிர கூடுதலாகப்) பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது”* என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)

நூல்: நஸாயீ 1804

சிரிய மக்களுக்காக, மக்காவில் உருக்கமான பிரார்த்தனை

ஆதிக்க சக்திகளால் அழிக்கபட்டு வரும் சிரயாவின் ஹலப் நகர மக்களுக்காக உலக முஸ்லிம்கள் மனம் உருகி இறைவனிடம் மன்றாட வேண்டும் என்று சவுதி அரேபியாவின் தலைமை மார்க்க அறிஞர் அறிவித்திருந்தார்

அதனை தொடர்ந்து சவுதி அரேபியாவின் இறை இல்லங்களில் தொழுகையில் குனுத் எனபடுகின்ற பிரார்த்தனை சிரயா மக்களுக்காக நடை பெற்று வருகிறது 

கிருபையுள்ள ரஹ்மானே யா அல்லாஹ்!!

பாதிக்கபட்டுள்ள எங்கள் சிரிய சகோதரர்களுக்கு உதவி செய்வாயாக!!

அவர்களை வேட்டையாடும் ஈரான், ரஷியா, பஷார். போன்ற ஷைத்தான்கள் மீது உனது சாபத்தை இறக்குவாயாக!!!

பாதிக்க பட்டவர்களின் புகலிடமான உன்னிடம் கெஞ்சி மன்றாடி கேட்கிறோம் 

எங்கள் இறைவனை ஹலப் மக்களின் முற்றுகையை தகர்ப்பாயக!!!

அவர்களுக்கு வெற்றி விரைவு படுத்துவாயக!!

உனது மார்கத்திற்கு எதிராக செயலாற்றும் ஷைத்தான்களை நீ ஒழிப்பாயக 
எங்கள் சகோதரர்களின் சோதனைகளை நீக்கி அவர்களுக்கு மகிழ்ட்சியை வழங்குவாயாக !!!!

நாமும் பிரார்த்திப்போம்

நோயாளியின் தொழுகை


தினம் ஒரு நபி மொழி



சிலர் உடல் நலக் குறைவால் குறிப்பிட்ட முறையில் தொழ முடியாமல் போகலாம். அவர்களுக்கு இஸ்லாம் சில சலுகைகளைத் தந்துள்ளது. நின்று தொழ முடியாதவர் அமர்ந்தும், அமர்ந்து தொழ முடியாதவர் படுத்தும் தொழலாம்.

*எனக்கு மூல நோய் இருந்தது. 'எவ்வாறு தொழுவது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நீ நின்று தொழு! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு'* என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல்: புகாரீ 1117

Friday, December 16, 2016

தீண்டாமையைக் தடுக்கும் இஸ்லாம்

ஹஜ் கடமையின் போது ஒன்பதாம் நாள் மக்கள் அனைவரும் "அரஃபாத்" எனும் திடலில் தங்குவார்கள். ஆனால் உயர்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட குரைஷி குலத்தினர் மற்ற மக்களோடு தங்காமல் "முஸ்தலிஃபா" எனும் இடத்தில் தங்குவார்கள். "முஸ்தஃலிபா" என்பது புனித ஆலயத்தின் எல்லைக்கு உள்ளேயும், "அரஃபாத்" என்பது புனித ஆலயத்தின் எல்லைக்கு வெளியேயும் அமைந்துள்ளது. 

உயர்ந்த குலத்தவரான தாங்கள் மட்டும் புனித எல்லையில் தங்கி விட்டு மற்றவர்களை அங்கே தங்குவதைத் தடுத்து வந்தனர். "அரஃபாத்" என்பது ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டவர்களுக்கான இடமாக அவர்களால் கருதப்பட்டது. 

இஸ்லாம் இந்தத் தீண்டாமையை ஒழித்துக் கட்டியது. உயர்ந்த குலத்தைச் சேர்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், உயர்ந்த குலத்தைச் சேர்ந்த முஸ்லிம்களையும் மற்ற மக்களுடன் போய் "அரஃபா" திடலில் தங்குமாறு இவ்வசனத்தின் (2:199) மூலம் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 

ஒதுக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த இடத்தில் உலக மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டி சாதி, குலம், மொழி, இனம் காரணமாகக் கற்பிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகளை இஸ்லாம் குழி தோண்டிப் புதைத்தது. 

இது பற்றி புகாரி (4520) முஸ்லிம் ஆகிய நூல்களில் ஹதீஸ்கள் உள்ளன.

ஜும்ஆ தொழுகையின் சிறப்பு


தினம் ஒரு நபி மொழி



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடைபெறும்) பள்ளி வாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் நின்று கொண்டு, முதன்முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால், வானவர்கள் அந்த (பெயர் பதிவு) ஏடுகளைச் சுருட்டிவைத்துவிட்டு வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகின்றனர். (ஜுமுஆவுக்காக) நேரத்தோடு வருபவரது நிலையானது,ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும், அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவர்கள் ஆவர்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் : 7. ஜும்ஆ

Wednesday, December 14, 2016

மீலாது விழா ” ஹராம்” இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரானது! - சவுதி அரேபியா!


மீலாது விழா ” ஹராம்” கிராண்ட் முஃப்தி ஷேய்க் அப்துல் அஜிஸ் அல்- ஷேய்க்! அவர்களின் எச்சரிக்கை அறிக்கை கீழே....

சவுதி அரேபிய தலைநகர் ரியாதில் உள்ள இமாம் துருக்கி பின் அப்துல்லாஹ் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா
(பிரசங்கத்தில்) கிராண்ட் முஃப்தி ஷேய்க் அப்துல் அஜிஸ் அல்-ஷேய்க் உரையில் “மீலாது விழா” வை இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக கொண்டாடுகிறார்கள் என்று குறிப்பிட்டு மீலாது விழா கொண்டாடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

நபிகளார் ஸல். அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே முழுமை பெற்ற இஸ்லாமிய மார்க்கத்தில் மீலாது விழா என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதை குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார்.

‘நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ என்று
கூறுவீராக!(3:31) என்ற அல்லாஹ்வின் வசனத்தைக் கூறி விளக்கம் அளித்தார்.

நபிகளார் ஸல், அவர்கள் செய்யாத, சொல்லாத, அங்கீகரிக்காத, செயலை மார்க்கத்தின் பெயரால் செய்யாமல் தடுத்துக் கொள்வது முஸ்லிமின் பண்பு.

அதிலும் அல்லாஹ்வின் தூதர் ஸல். அவர்களுக்கே மீலாது விழா (பிறந்த நாள் விழா) கொண்டாடலாமா?

என்பதை மார்க்கம் அனுமதிக்காத இச்செயலை செய்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

லண்டன் பஸ் ஒன்றில். எழுதப்பட்டுள்ள நபி(ஸல்) பொன் மொழி!

லண்டன் பஸ் ஒன்றில் எழுதப்பட்டுள்ள 
நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியொன்று…
“மனிதர்களே! அமைதியை ஏற்படுத்துங்கள் மற்றும் மக்களுக்கு உணவளியுங்கள்!!”

வெட்கம்

தினம் ஒரு நபி மொழி


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஆபாசமும் வெட்கமின்மையும்
எதில் தோன்றினாலும் அது
அதனை கறை படிந்ததாக,
பொலிவிழந்ததாக ஆக்கிவிடும்.
நாணம் எதில் சேர்ந்தாலும் அது
அதனை இன்னும்
அழகானதாக செம்மையானதாக
ஆக்கி விடும்."
அறிவிப்பாளர்:
அனஸ் (ரலி) அவர்கள்
( நூல்: திர்மிதி )

Monday, December 12, 2016

மறுமை

வானம், பூமி, சூரியன், விண்கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான். 

யுகமுடிவு நாள், இறுதி நாள், ஸூர் ஊதப்படும் நாள் போன்ற பல்வேறு சொற்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. 

பின்னர் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படும். நல்லவர்களுக்குப் பேரின்பம் கிடைக்கும். கெட்டவர்களுக்குத் துன்புறுத்தும் பலவிதமான தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாழ்விற்கு அழிவே இராது. 

மறுமை, மறு உலகம், அவ்வுலகம், தீர்ப்பு நாள், ஒன்று திரட்டப்படும் நாள், யாராலும் உதவ முடியாத நாள், திரும்பச் செல்லும் நாள், கூலி வழங்கும் நாள், விசாரிக்கப்படும் நாள், பயன் தரும் நாள், உயிர்ப்பிக்கப்படும் நாள், இறைவனைச் சந்திக்கும் நாள், கைசேதப்படும் நாள், இறைவன் முன் நிற்கும் நாள், தப்பிக்க இயலாத நாள், எழுப்பப்படும் நாள் இன்னும் பல பெயர்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. 

சந்தேகம் இல்லாத நாள், மகத்தான நாள், அந்நாள், அந்நேரம், வாக்களிக்கப்பட்ட நாள், எந்தச் சந்தேகமும் இல்லாத நாள் போன்ற சொற்கள் அழிக்கப்படும் நாளுக்கும், உயிர்ப்பிக்கப்படும் நாளுக்கும் பொதுவானவை. 

அழிக்கப்படும் நாள், மீண்டும் உயிர்ப்பிக்கும் நாள் ஆகிய இரு நாட்களும் எப்போது ஏற்படும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளிட்ட எந்த மனிதரும், ஏன் வானவர்களும் கூட அறிய மாட்டார்கள். அந்த நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகும். (பார்க்க திருக்குர்ஆன் 7:187, 20:15, 33:63, 79:42) 

இவ்வுலகில் மனிதன் நல்லவனாக வாழ இத்தகைய ஒரு நாளை நம்புவது பெரிதும் உதவும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். 

முஸ்லிம் பெண் அணிந்துள்ள புர்காவை பொது இடத்தில் இழுத்தால் அமெரிக்க கிறித்தவர்களின் ரியாக்ஷன்


முஸ்லிம் பெண் அணிந்துள்ள புர்காவை பொது இடத்தில் இழுத்தால் அமெரிக்க கிறித்தவர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று தொலைக்காட்சி நிறுவனம் சோதனை நடத்தியது.

ஒவ்வொரு அமெரிக்கரும் இதை தட்டி கேட்டனர். புர்காவை இழுத்தவனை அடிக்க பாய்ந்தனர்

தீவிரவாதிகள் வேறு முஸ்லிம் சமுதாயம் வேறு என்று அமெரிக்க மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.

எல்லா புகழும் அல்லாஹுக்கே !!!




ரக்அத்தை அடைவது...


தினம் ஒரு நபி மொழி



இமாம் ருகூவில் இருக்கும் போது ஒருவர் தொழுகையில் இணைந்தால் அந்த ரக்அத்தைத் திரும்பத் தொழத் தேவையில்லை. அவர் அந்த ரக்அத்தை அடைந்தவராகக் கருதப்படுவார்.

*'தொழுகையில் இமாம் முதுகை உயர்த்துவதற்கு முன்னதாக யார் ருகூவை அடைந்து கொள்வாரோ அவர் அந்த ரக்அத்தை அடைந்து கொண்டார்'* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: இப்னு ஹுஸைமா 3/45

Thursday, December 8, 2016

மனிதருக்கு ஸஜ்தா செய்யலாமா ?

முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என இவ்வசனங்களில் (2:34, 7:11, 15:29-31, 17:61, 18:50, 20:116, 38:72) கூறப்பட்டுள்ளது. 

இவ்வசனங்களைச் சான்றாகக் கொண்டு பெரியார்களுக்கும், மகான்களுக்கும் ஸஜ்தா (சிரம் பணிதல்) செய்யலாம் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறாகும். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் இத்தகைய வழக்கம் அறவே இருந்ததில்லை. இது குறித்துத் தெளிவாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும். 

முதலில் ஸஜ்தா என்ற சொல்லின் பொருள் என்ன என்று பார்ப்போம். 

ஸலாத் - தொழுகை, ஸவ்ம் - நோன்பு, ஸகாத் போன்ற சொற்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே அரபுகளால் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆயினும், இப்போது நாம் பயன்படுத்துகின்ற பொருளில் இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. 

தொழுகையைக் குறிப்பிட "ஸலாத்" என்னும் வார்த்தையை இப்போது பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த வார்த்தையின் நேரடிப் பொருள் பிரார்த்தனையாகும். இப்பொருளில் தான் அரபுகள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர். 

குறிப்பிட்ட சில காரியங்கள் அடங்கிய குறிப்பிட்ட வணக்கத்திற்கு "ஸலாத்" என்ற வார்த்தையை இஸ்லாம் பயன்படுத்தியது. 

"ஸவ்ம்" என்ற வார்த்தை நோன்பைக் குறிப்பிடுவதற்கு இன்று பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் "கட்டுப்படுத்திக் கொள்ளுதல்" என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது. 

இஸ்லாம் புதிய வார்த்தைகளைக் கண்டுபிடித்து வணக்கங்களுக்குப் பெயர் சூட்டவில்லை. மாறாக நடைமுறையில் இருந்த வார்த்தைகளில் பொருத்தமானதைத் தேர்வு செய்து வணக்கங்களுக்குப் பெயர் சூட்டியது. 

இது போலவே ஸஜ்தா என்ற சொல்லும் அரபு மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வந்தது. 

நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங்கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரு கால்களின் விரல்கள் ஆகியவை தரையில் படும் வகையில் பணிவது "ஸஜ்தா" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்விளக்கம் அளிப்பதற்கு முன்னால் இவ்வார்த்தைக்கு இவ்வாறு பொருள் இல்லை. "நன்றாகப் பணியுதல்" என்பதே இவ்வார்த்தையின் பொருளாக இருந்தது. பணிவைக் காட்டும் எல்லாக் காரியங்களும் "ஸஜ்தா" எனக் குறிப்பிடப்பட்டன. 

அகராதியில் மட்டுமின்றி திருக்குர்ஆனிலும் "நன்றாகப் பணியுதல்" என்ற பொருளில் இவ்வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

நீங்கள் இவ்வூரில் ஸஜ்தாச் செய்தவர்களாக வாசல் வழியாக நுழையுங்கள்! 

(திருக்குர்ஆன்: 2:58, 4:154, 7:161) 

அகராதியில் உள்ள பணிவு என்ற பொருளைத்தான் இவ்வசனங்களில் உள்ள ஸஜ்தா என்ற சொல்லுக்குக் கொடுக்க முடியும். இஸ்லாமிய வழக்கில் உள்ள "ஸஜ்தா"வுக்குரிய பொருளை இங்கே கொள்ள முடியாது. ஏனெனில் இந்த ஸஜ்தாவைச் செய்து கொண்டு வாசல் வழியாக நுழைய இயலாது. 

மனிதர்கள் மட்டுமின்றி சூரியன், சந்திரன், நட்சத்திரம், மரம், ஊர்வன, மலை உள்ளிட்ட அனைத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்கின்றன என்று திருக்குர்ஆன் 22:18 வசனம் கூறுகிறது. 

இவற்றுக்கு முகமோ, மூக்கோ, கைகளோ, மூட்டுக் கால்களோ கிடையாது. குனிந்து மரியாதை செய்வதற்கான முதுகும் கிடையாது. மலைகளோ, மரங்களோ இருக்கின்ற இடத்தை விட்டு நகர்வது கூட இல்லை. ஆனாலும், இவை தனக்கு ஸஜ்தாச் செய்கின்றன என்று அல்லாஹ் கூறுகிறான். 

சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவை ஓய்வின்றி இறைவன் வகுத்தளித்த திட்டப்படி சுற்றிச் சுழன்று வருகின்றன. இது தான் அவற்றுக்கான ஸஜ்தாவாகும். மரங்கள் பூத்துக் காய்த்துக் குலுங்குவது அவற்றுக்குரிய ஸஜ்தா ஆகும். 

இப்பூமியைத் தடம் புரளாமல் தடுத்து நிறுத்தும் பணியை அல்லாஹ்வின் கட்டளைப்படி மலைகள் செய்து வருகின்றன. இது அவற்றுக்குரிய ஸஜ்தாவாகும். 

மொத்தத்தில் படைக்கப்பட்ட அனைத்தும் இறைவனது உயர்வையும், தங்களது தாழ்வையும் ஒப்புக் கொண்டு பணிந்து வருகின்றன. பணிந்து நடப்பது தான் இங்கே ஸஜ்தா எனப்படுகிறது. 

திருக்குர்ஆன் 12:4, 13:15, 16:48,49 ஆகிய வசனங்களிலும் பணியுதல் என்ற பொருளிலேயே ஸஜ்தா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைத் தெளிவாக அறியலாம். 

வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச் செய்ததாகக் கூறும் மேற்கண்ட வசனங்களையும் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். இதை வலுப்படுத்தும் இன்னும் பல காரணங்களும் உள்ளன. 

வானவர்கள் மனிதனைப் போன்றவர்கள் அல்லர். அவர்களுக்கு என திட்டவட்டமான உருவம் ஏதும் இல்லை. சில நேரங்களில் நபிகள் நாயகத்திடம் "ஜிப்ரீல்" என்னும் வானவர் மனித வடிவத்தில் வந்துள்ளார். அதுவே அவரது வடிவம் என்று கூற முடியாது. ஏனெனில், வானத்தையும், பூமியையும் வியாபித்த வடிவத்திலும் அவர் நபிகள் நாயகத்துக்குக் காட்சி தந்துள்ளார். 

வானவர்களுக்குச் சிறகுகளும் உள்ளன. (பார்க்க திருக்குர்ஆன் 35:1) 

எனவே, வானவர்களை நம்மைப் போன்றவர்களாகக் கருத முடியாது. அவர்களால் பணிவை எவ்வாறு வெளிப்படுத்த முடியுமோ அவ்வாறு பணிவை வெளிப்படுத்தினார்கள் என்று தான் கருத முடியும். 

நாம் இப்போது செய்வது போலவே அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டால் கூட அதை நாம் பின்பற்ற முடியாது. காரணம் ஸஜ்தாச் செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதால் தான் வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச் செய்தனர். 

"பெரியவர்களுக்குச் ஸஜ்தாச் செய்யுங்கள்" என்று அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ நமக்குக் கட்டளையிடவில்லை. மாறாகத் தடை விதித்துள்ளனர். 

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது அத்தாட்சிகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்! 

(திருக்குர்ஆன் 41:37) 

படைக்கப்பட்டவற்றுக்கு ஸஜ்தாச் செய்யக் கூடாது. படைத்தவனுக்குத்தான் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்பதே நமக்கு இடப்பட்ட கட்டளை. 

முஆத் (ரலி), ஸல்மான் (ரலி) போன்ற நபித் தோழர்கள் தமக்கு ஸஜ்தாச் செய்ய முன் வந்த போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்து விட்டனர். மனிதனுக்கு மனிதன் ஸஜ்தாச் செய்யக் கூடாது என்று பிரகடனப்படுத்தி விட்டனர். 

நூல்கள்: திர்மிதி 1079, இப்னுமாஜா 1843, அஹ்மத் 12153, 18591, 20983, 23331 

இவ்வாறு நமக்குத் தெளிவான தடை இருக்கும் போது வானவர்களுக்கு இடப்பட்ட கட்டளையை நாம் செயல்படுத்த முடியாது. பெரியவர்களிடம் பணிவாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ளலாம். ஆனால் அவர்களின் கால்களில் விழுவதையும், அவர்களுக்கு ஸஜ்தாச் செய்வதையும் இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.

நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது

தினம் ஒரு நபி மொழி



அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான்.அவனுக்கு அநீதி இழைக்கவும் மாட்டான்,அவனை கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின
்றாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான
்.எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரின் மறுமை நாளின் துன்பத்தை அல்லாஹ் நீக்குகிறான். எவர் ஒருவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவரின் குறைகளை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான். (அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) புகாரி 2442)

சவூதி அரேபியாவில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் .!!!



ரோட்டை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் ஏக்கத்துடன் நகை கடை கண்ணாடி வழியாக நெக்லஸ் ஒன்றை பார்த்து கொண்டிருந்தார் அந்த வழியாக வந்த சிறு வயது அரபியர்

அவரிடம் நீங்கள் இந்த நகையை பார்த்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார்

என்னிடம் பணம் இல்லை நான் இந்த நகையை வாங்க ஆசை படுகிறேன் என்னுடைய மூத்த மகளுக்கு எனக்கு மகன் கிடையாது என கூறியுள்ளார்

உடனே அந்த அரேபிய இளைஞர் நகையை அன்பளிப்பாக வாங்கி கொடுத்து விட்டு கையில் பணமும் கொடுத்து விட்டு சென்றுள்ளார் ..!!!

(அரபிய டிவிகளில் ஒளிபரப்பாகிறது கடைக்காரரே டிவிக்களை அழைத்து பேட்டி கொடுத்துள்ளார் உதவியர் தன் பெயரை சொல்லாமல் தன் முகத்தை மீடியாக்களுக்கு காட்டாமல் சென்று விட்டார் )

சோதனை

தினம் ஒரு நபி மொழி



ஓர் இறை நம்பிக்கையான ஆண் மற்றும் பெண்ணிற்கு , அவரது உயிர் அவரது குழந்தை
,அவரது சொத்து என அனைத்திலும் சோதனை இருந்து கொண்டே இருக்கும் , இறுதியாக அவர்  குற்றம் ஏதுமின்றி அல்லாஹ்வை சந்திப்பார் “ என நபி ஸல் கூறினார்கள்.
நூல் : திர்மிதீ ( 2399 )

Wednesday, December 7, 2016

🕋🕌🙏🏻துஆ செய்யுங்கள் 🙏🏻🕌🕋

💐💐அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 💐💐

🕋🕌🙏🏻துஆ செய்யுங்கள் 🙏🏻🕌🕋

📝📝📝📝📝📝📝📝
எனது சகோதர ,சகோதரிகள் NEET மற்றும் MCI போன்ற மருத்துவ தேர்வு எழுத இருக்கிறார்கள் அவர்கள் தேர்வில் வெற்றி பெற இறைவனிடத்தில் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
 உ.நூருல் அமீன் ,

Assalamu alaikum varah...

🕌🕋🙏🏻Please pray for us🙏🏻🕋🕌

We ask Allaah to make us succeed in this world and cause us to be among those who are victorious and saved in the Hereafter, for He is the All-Hearing Who answers prayer.

Ma shaa allah .. we need your prayer  as my brothers ,sisters and friends need to success in NEET &
MCI EXAM ..📝📝📝



Monday, December 5, 2016

வரலாற்றில் ஓர் நிகழ்வு ... இஸ்லாத்தை இழிவு படுத்தி பேசிய கவர்னரை எதிர்த்து, 30 - 40 இலட்சம் மக்கள் ஒன்றுகூடிய ஜும்மாதொழுகை


.
வெள்ளிக்கிழமை அன்று (02.12.2016) வரலாறு காணாத அளவு 30 - 40 இலட்சம் இந்தோனேசிய முஸ்லிம்கள் தலைநகர் ஜகார்த்தாவில் ஜூம்மா தொழுகைக்காக ஓன்று கூடினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்
.
இஸ்லாத்தை இழிவு படுத்தி  பேசிய கவர்னரை எதிர்த்து, 30,40 இலட்சம மக்கள் பொது இடத்தில் தொழுகை நடத்தி, அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதற்காக வெகு தொலைவிலிருந்து சிலர் நடந்தே வந்திருந்தது குறிப்பிடத் தக்கது.
.
வன்முறையில் ஈடுபடாமல், ஜனநாயக ரீதியில் அமைதியாக எதிர்ப்புத் தெரிவித்த இந்தோனேசிய மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.



அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது நற்செயல் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து செய்யப்படும் நிலையான நற்செயலே

தினம் ஒரு நபி மொழி



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல் படுங்கள்.
நிதானமாகச் செயல்படுங்கள்.வரம்பு மீறிவிடாதீகள்.
அறிந்துகொள்ளுங்கள்: உங்களில் யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒரு போதும் நுழைவிக்காது.
மாறாக,அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புக முடியும்.
நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி:6464.

அறுக்கப்பட்டதை உணவு

இவ்வசனங்களில் (2:173, 5:3, 5:4, 6:118, 6:119, 6:121, 6:145, 11:69, 16:5, 16:14, 16:115, 22:28, 22:36, 23:21, 35:12, 36:72, 40:79, 51:27) உயிரினங்களை மனிதன் அறுத்து உண்ணலாம் என்று அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி ஜீவகாருண்யத்திற்கு எதிரானதாக சிலரால் கருதப்படுகிறது. ஆழமாகச் சிந்திக்கும் பொழுது இது மனித குலத்துக்கு நன்மை செய்கின்ற ஒரு அனுமதி என்பதை விளங்கிக் கொள்ளலாம். 

உயிரினங்களை உணவுக்காகக் கொல்லக் கூடாது என்போர் அது உயிர்வதை என்றே காரணம் கூறுகின்றனர். உயிர்வதை தான் காரணம் என்றால் பல விஷயங்களை அவர்கள் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளனர். 

1. உயிர்வதை என்று சொல்வோர் கால்நடைகளை விவசாயப் பணிகளிலும், பாரம் இழுக்கும் பணிகளிலும் பயன்படுத்துகின்றனர். இது உயிர்வதையா? இல்லையா? 

2. உயிர்வதை என்று சொல்வோர் கன்றுகளுக்காக தாய்ப்பசுவிடம் சுரக்கும் பாலை ஏமாற்றி அருந்துகின்றனர். இது உயிர்வதையா? இல்லையா? 

3. இன்றைய அறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! தாவரங்களையும், காய் கனிகளையும் உண்பது உயிர்வதை இல்லையா? 

4. மனிதன் அருந்துகின்ற தண்ணீரிலும் கோடிக்கணக்கான உயிர்கள் இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த உயிர்களுடன் தண்ணீரை அருந்துவது உயிர்வதை இல்லையா? 

5. கொசு, தேள், பாம்பு போன்ற எத்தனையோ உயிர்களை மனிதன் தனது சுய நலத்திற்காகக் கொல்வது உயிர்வதைதானே?

உயிரினங்களை உட்கொள்ளக் கூடாது என்பதற்கு உயிர்வதை தான் காரணம் என்றால் மேற்கண்டவற்றிலும் உயிர்வதை இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும். 

அசைவம் சாப்பிடக் கூடாது என்பதற்கு உயிர்வதை தான் காரணம் என்றால் தாமாகச் செத்த பிராணிகளையும், மீன்களையும் தவிர்ப்பது ஏன்? 

மீன்களைத் தவிர எந்த உணவும் கிடைக்காத துருவப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் இக்கொள்கையைக் கடைப்பிடித்தால் உலகில் வாழ முடியுமா? 

இவ்வாறு மாமிசத்தைத் தவிர்ப்பவர்கள் கண் பார்வை கூர்மையடைவதற்காக மீன் எண்ணெய்யை உட்கொள்கின்றனர். இவர்களின் மனசாட்சி இதை ஏற்றுக் கொள்கிறது. 

சைவம், அசைவம் ஆகிய இரு உணவுகளையும் ஜீரணிக்கும் வகையில் மனிதனின் குடல் அமைந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது. 

இது போன்ற கேள்விகளைச் சிந்தித்தால் தனது நன்மைக்காக மனிதன் அல்லாத பிற உயிரினங்களை வதைப்பதையும், கொல்வதையும் மனிதனின் உள்மனது ஏற்றுக் கொள்கிறது என்று அறிந்து கொள்ளலாம். 

போலித்தனமாகவும், முன்னோர் கூறியதில் கொண்ட குருட்டு நம்பிக்கையின் காரணமாகவும் உயிர்வதை என்று காரணம் காட்டி அசைவ உணவுகளைத் தவிர்த்து வருகின்றனர். 

இஸ்லாம் கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும் போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

உயிரினங்களை உணவாகக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெரித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளிலோ பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர். 

ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல்வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத்தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. 

குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்றுவதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள். 

அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம். 

1. முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன. 

2. அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையைத் தொடும்படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன. 

3. உணர்வு திரும்பியதும். முழுவதுமாகக் குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன. 

4. அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன. 

5. மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன. 

6. பரிசோதனையின் போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் E.E.G மற்றும் E.C.G பதிவு செய்யப்பட்டன. அதாவது E.E.G மூளையின் நிலையையும், E.C.G இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின. 

இப்போது மேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம். 

1. இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு E.E.G யில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும்போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது. 

2. மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை E.E.G. பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப்படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது. 

3. மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் E.E.G பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலி அல்லது வதைக்கும் ஆளாகவில்லை என்பதை இது காட்டியது. 

4. மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத்துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது. 

மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்ட பிராணிகள் வேதனைக்கு உள்ளாகின்றன் என்பதும் இந்தச் சோதனையில் தெரிய வந்தன. 

1. இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலைகுலைந்து உணர்வற்ற நிலைக்குப் போகின்றன. 

2. அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை E.E.G பதிவு காட்டியது. 

3. அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடலில் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை. 

மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது. 

எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது. 

அப்படியானால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுப்பதைச் சாப்பிட வேண்டும்; அவ்வாறு கூறாவிட்டால் சாப்பிடக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம் என்ன? என்ற சந்தேகம் ஏற்படலாம். 

பொதுவாக எந்த உயிரினத்தையும் எந்த ஒரு மனிதனாலும் உருவாக்க முடியாது. உலகமே ஒன்று திரண்டாலும் ஒரு எறும்பைக் கூட படைக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது அல்லாஹ் படைத்த உயிரைக் கொல்வதற்கு மனிதனுக்கு உரிமையில்லை. 

ஆனால் எந்த அல்லாஹ் இந்த உயிரினங்களைப் படைத்தானோ அவனே அதை அறுத்து உண்ண நமக்கு அனுமதி அளித்து விட்டால் அப்போது நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படத் தேவை இல்லை. ஆனால் இந்த அனுமதியைப் பயன்படுத்துவதாக இருந்தால் ஒவ்வொரு உயினத்தை அறுக்கும் போதும் அனுமதி பெற்றாக வேண்டும். 

அந்த அனுமதி தான் பிஸ்மில்லாஹ் என்று கூறுவதாகும். இதன் பொருள் அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன் என்பதாகும். 

இதன் கருத்து என்னவென்றால் இறைவா நீ படைத்த ஒரு உயிரைக் கொன்று ஒழிக்க வேண்டும் என்பதற்காக நான் இதை அறுக்கவில்லை. நான் அந்த அளவுக்குக் கொடூரமானவனல்லன். இந்த உயிரைப் படைத்த நீயே இதை எனக்கு அனுமதித்ததால்தான் இதை அறுக்கிறேன். இல்லாவிட்டால் நான் உயிரைக் கொல்பவன் அல்லன் என்பது இதன் கருத்தாகும். 

இந்த உறுதிமொழி தான் அறுப்பதற்கான அனுமதியாகும். அல்லாஹ்வின் பெயரால் தான் இதை அறுக்கிறேன் எனக் கூறாவிட்டால் உயிரினங்களின் உண்மை எஜமானனிடம் அனுமதி பெறாத காரணத்தால் அதை அறுப்பதும், உண்பதும் குற்றமாகி விடும். 

ஒருவனுக்குச் சொந்தமான ஆட்டை நாம் திருடிச் சாப்பிட்டால் அது குற்றம் என்பதை நாம் அறிவோம். அந்த மனிதன் அந்த இறைச்சிக்குத் தான் உரிமையாளன். உயிருக்கு உரிமையாளனாகிய அல்லாஹ்விடமும் அனுமதி பெற வேண்டியது இதனால் அவசியமாகிறது. 

பொதுவாக கத்தியை எடுத்து இரத்தத்தைப் பார்த்துப் பழகியவன் யாரையும் மிரட்டி உருட்டி காரியம் சாதிப்பவனாக ரவுடியாக தலைஎடுத்து விடுகிறான். அன்றாடம் ஆடுகளை அறுக்கும் ஒரு முஸ்லிம் இப்படி கத்தியைக் காட்டி மிரட்டும் ரவுடியாக அலைவதில்லை. 

இதற்குக் காரணம் பிஸ்மில்லாஹ் தான். 

அல்லாஹ்வின் அனுமதி இருப்பதால்தான் நான் ஆட்டை அறுக்கிறேன் என்று தினமும் சொல்லியும், நினைத்தும் வருவதால் மனிதனை அறுக்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்ற கருத்து அவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. 

இது போன்ற காரணங்களால் தான் பிஸ்மில்லாஹ் சொல்லி அறுக்க வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. இது நாம் சிந்திக்கும் போது தெரிய வரும் காரணங்களாகும். இது அல்லாத இன்னும் பல காரணங்களும் இருக்கலாம்.