அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Tuesday, April 17, 2018

சின்னஞ்சிறு அமல்களில் பெரும் நன்மைகள்

அஸ்ஸலாமு அலைக்கும்...


அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!


எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!

இறைவனை நம்பிக்கை கொண்டு விட்டால் மாத்திரம் போதாது. நற்செயல்களை போட்டி போட்டு செய்வதன் மூலமும் தான் சுவனத்திற்குள் இலகுவாக நுழைய முடியும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அந்த அடிப்படையில் பல்வேறு சின்னஞ்சிறு அமல்களில்  பெரும் நன்மைகளை இஸ்லாம் வைத்துள்ளது. உதாரணமாக,

*நல்ல வார்த்தைகளைப் பேசுதல்*

தேவையற்ற பேச்சுக்களைப் பேசாமல் நல்ல வார்த்தைகளைப் பேசுவதால் அதிக நன்மையை அடைய முடியும்.

நல்ல வார்த்தை பேசுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி),


நூல் : புகாரி 6023


*மற்றவருக்காகப் பிரார்த்தனை செய்தல்*

மற்றவருக்காக நாம் துஆச் செய்தால் அதற்காக அதிக நன்மைகள் கிடைக்கின்றன. எத்தனையோ பேர் நம்மிடம் துஆச் செய்யும்படி சொல்லியிருப்பார்கள். அதை நாம் அலட்சியப்படுத்தாமல் நம்முடைய வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.

ஒரு மனிதன் தன்னுடைய சகோதரனுக்காக மறைவில் துஆச் செய்தால், “உனக்கும் அவ்வாறே ஏற்படட்டும்” என்று வானவர்கள் அவருக்காக வேண்டுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபுத்தர்தா (ரலி),


நூல் : அபூதாவூத் 1534


இன்ஷா அல்லாஹ் தொடரும்...


No comments:

Post a Comment