✅ பொறுத்துக்கொண்டால் சொர்க்கம் உண்டு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKkACahzdwzO11_C9ZPNCWQ_KVtHHkJJEl_1CmEOv-7wGaO1xVgii2j6XRB5WXUnMIYsV0D5hEGgLaZiSNsf2wwAskguktEnUm0kBAK-l8SaAVtek9eKw9dmTFPqKbrPNhG0YfFosCsAQ/s200/Untitled.jpg)
வலிப்பு நோயை சகித்துக்கொண்டதற்காக அல்லாஹ் அந்தப் பெண்மணிக்கு சொர்க்கம் தருவதாக வாக்களிக்கிறான்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப் படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமஜக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன் னார்கள். இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
🗣அறிவிப்பவர் : அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்),
📚நூல் : புகாரி 5652
👀❌ பார்வை இல்லாமல் இருப்பது இறைவனது சோதனை என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கும் அழகான கண்களோடு சொர்க்கம் உண்டு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: *நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை(ப் பறித்து)க்கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன்
(“அவனுடைய பிரியத்திற்குரிய இரு பொருட்கள்’ என்பது) அவருடைய இரு கண்களைக்* குறிக்கும்.
🗣அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
📚நூல் : புகாரி 5653
🙋♂இன்ஷா அல்லாஹ் தொடரும்
No comments:
Post a Comment