அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Wednesday, February 28, 2018

விசித்திரமான பிரசவம் ,இஸ்லாத்தை ஏற்ற பெண் மருத்துவர்

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார்.

பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், "எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்' என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார். "ஆண் மருத்துவரா எனக்குப் பிரசவம் பார்க்கப் போகின்றார்? வேண்டாம். ஆண் மருத்துவர் வேண்டவே வேண்டாம்' என்ற கதறல் அவரிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண்ணின் இந்த விவகாரம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது ஒரு புரியாத புதிராக எனக்குப் பட்டது.

"இத்தனை ஆண்டு காலமாக எனது மனைவியை, தனது வாழ்நாளில் தன்னுடைய தகப்பனார், தன் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், ஒன்று விட்ட சகோதர, சகோதரிகள், சிறிய, பெரிய தந்தையர் போன்றோர் தவிர வேறு எந்த அந்நிய ஆடவரும் பார்த்தது கிடையாது' என்று அப்பெண்ணின் கணவர் விளக்கம் சொன்னார். மிகக் கடுமையான ஆச்சரியத்தில் நான் சிரித்தேன்.

"என் முகத்தைப் பார்க்காத ஓர் ஆடவர் உண்டா?' என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

அவ்விருவரின் கோரிக்கையை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அதனால் அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்தேன்; இணங்கினேன்.

குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற அவருக்கு ஆறுதல் அளிப்பதற்கு, அமைதியளிப்பதற்கு இரண்டாம் நாள் அவரிடம் வந்தேன்.

"பிரசவத்திற்குப் பின்னால் பெண்களுக்கு நாற்பது நாட்கள் அளவுக்கு இரத்தப்போக்கு இருக்கும். அமெரிக்க தம்பதியர்கள் இக்கால கட்டத்தில் காக்க வேண்டிய தடை, தடுப்புகளைத் தகர்த்தெறிந்து விட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர்.இதனால் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி விடுகின்றனர்.

எனவே குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு தம்பதியர் பத்தியம் காக்க வேண்டும். உடலுறவுக்கு விடை கொடுத்து விடவேண்டும். இந்த 40 நாட்களுக்கு இடையே பாதுகாப்பான உணவு சாப்பிட வேண்டும். பாரமான, பளுவான பணிகள் எதையும் செய்யாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து நடைபெற்று வரும் நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் தான் இதைத் தெரிவிக்கிறேன்'' என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்தேன்.

அந்த அரபியப் பெண் ஆசுவாசமாக, அமைதியாக, எவ்வித பரபரப்புமின்றி,"பிரசவமான பெண்ணின் இரத்தம் நிற்கின்ற வரையில் தாம்பத்தியத்திற்கு இஸ்லாம் தடை விதித்திருக்கின்றது'' என்று தெரிவித்தார்.

"அத்துடன் மட்டுமல்லாமல் இக்கால கட்டத்தில் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களையும் இத்தகைய பெண்களுக்கு இஸ்லாம் ரத்து செய்துவிடுகின்றது'' என்று அவர் தெரிவித்தது தான் தாமதம்! அவரது இந்த யதார்த்தமான பதில் என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீண்ட, நெடிய ஆய்வுக்கூட அறிஞர்களின் ஆய்வை இஸ்லாம் தன் வாழ்க்கை நெறியில் சர்வ சாதாரணமாக இழையோடச் செய்திருக்கின்றது என்று எண்ணி பிரமித்துப் போய்விட்டேன்.

இந்த நேரத்தில் குழந்தைகள் நல பெண் மருத்துவர் வருகை தந்தார். குழந்தை நலன் தொடர்பான மருத்துவ அறிவுரைகளை மணிக்கணக்காக விவரிக்க ஆரம்பித்தார்.

"குழந்தைகளை அதன் வலது பக்கமாக உறங்க வைக்க வேண்டும். இதன் மூலம் அதனுடைய இதயத் துடிப்புகள் சீராக அடிக்கின்றன, அமைகின்றன'' என்று சொன்னதும் குழந்தையின் தகப்பனார், "நல்ல காரியங்கள் அனைத்திலும் வலது பக்கம் தான் என்று நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி வலது பக்கமாகவே நாங்கள் உறங்க வைக்கின்றோம்'' என்று சொன்னதும் மீண்டும் என்னுடைய உடலில் நாடி நரம்புகளில் அதிகமான அதிர்வலைகளைப் பாய்ச்சியது.

அவ்வளவு தான். மருத்துவமனைக்கு ஒரு மாதம் விடுப்பு போட்டேன். அருகில் உள்ள நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் இஸ்லாமிய மையத்திற்குச் சென்று விடை தேடினேன். ஏற்கனவே இருந்த மார்க்கத்திலிருந்து விடுதலையானேன். என்னை நான் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டேன்.

Monday, February 26, 2018

சிரியா மக்களுக்காக உங்கள் அனைவருடைய துஆ வேண்டி இப்பதிவு

இன்று சிரியாவில் போர் என்ற பெயரில் *அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்று* குவிக்க கூடியவர்கள் *அந் நுஸைரிய்யா* என்ற வழிகெட்டஒரு ஷியா பிரிவை சார்ந்தவர்கள். எந்த அளவிற்கு வழிகெட்டவர்கள் என்றால் மற்ற *ஷியா* பிரிவினரே இவர்களை *காஃபிர்கள்* என்று கூறும் அளவிற்கு வழிகெட்டவர்கள். தற்சமயம் ஆட்சியில் இருக்கும் *பஷ்ஷார் அல் அஸத் என்ற கொடுங்கோலனால்* கடந்த சில நாட்களாக அவனுடைய படைகளால் குழுந்தைகள் என்றும் பாராமல் கொன்று குவித்து வருகின்றனர். இந்த *அநியாயக்கார ஆட்சியாளனின் மீது அல்லாஹுவின் சாபம் ஏற்படுவதற்காகவும்* பாதிக்கப்படுகின்ற அம்மக்களின் பாதுகாப்பிற்காகவும் நம்முடைய ஐந்து நேர தொழுகையிலும் துஆ செய்வோம் *இன்ஷா அல்லாஹ்* 

2:155. *ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!*

47:6. *அவர்களுக்காக அவன் அறிவித்திருந்த சொர்க்கத்தில் அவர்களை நுழையச் செய்வான்.*


Sunday, February 25, 2018

ஒப்பாரி வைத்தல் குறித்து வந்துள்ள கடுமையான கண்டனம்*

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவையாவன:) *குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர்பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது.
ஒப்பாரிவைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்.*

🗣அறிவிப்பவர் : *அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ* (ரலி), 
📚நூல் : *முஸ்லிம் 1700*

*பெரும்பாவங்கள் ஏழு*

*அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்* என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை எவை?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், *அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான்* (அந்தப் பெரும் பாவங்கள்)’ என்று (பதில்) கூறினார்கள். 

🗣அறிவிப்பவர் : *அபூ ஹுரைரா* (ரலி), 
📚நூல் : *புஹாரி 2766*


*🙋‍♂இன்ஷா அல்லாஹ்* தொடரும்

Thursday, February 8, 2018

தன்னம்பிக்கை ஊட்டும் விதி-4

✔ நோய் வந்தால் பாவங்கள் மன்னிக்கப்படும்

நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் கண்டு சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்று அவர்களை(ப் பரிவோடு) தொட்டேன். அப்போது நான், “தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று (நான் ஒருவனே அடைகிறேன்)” என்றார்கள். நான் “(இத்துன்பத்தின் காரணமாக) உங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்குமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் , “ஆம். ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை” என்றார்கள்.

🗣அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
📚நூல் : புகாரி 5667

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.

🗣அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),
📚நூல் : புகாரி 5641,5642


🙋‍♂இன்ஷா அல்லாஹ் தொடரும்

தன்னம்பிக்கை ஊட்டும் விதி-3

✅ பொறுத்துக்கொண்டால் சொர்க்கம் உண்டு



வலிப்பு நோயை சகித்துக்கொண்டதற்காக அல்லாஹ் அந்தப் பெண்மணிக்கு சொர்க்கம் தருவதாக வாக்களிக்கிறான்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப் படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமஜக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன் னார்கள். இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

🗣அறிவிப்பவர் : அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்),
📚நூல் : புகாரி 5652

👀❌ பார்வை இல்லாமல் இருப்பது இறைவனது சோதனை என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கும் அழகான கண்களோடு சொர்க்கம் உண்டு


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: *நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை(ப் பறித்து)க்கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன்
(“அவனுடைய பிரியத்திற்குரிய இரு பொருட்கள்’ என்பது) அவருடைய இரு கண்களைக்* குறிக்கும்.

🗣அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
📚நூல் : புகாரி 5653


🙋‍♂இன்ஷா அல்லாஹ் தொடரும்

தன்னம்பிக்கை ஊட்டும் விதி-2

🔴 அழகு குறைந்தவர்கள் 🔴

👉🌍 உலகில் உள்ளவர்களில் சிலர் வெள்ளை நிறத்தோடு நல்ல அழகுள்ளவர்களாக இருப்பதைப் பார்க்கலாம். அதே நேரத்தில் சிலர் கருப்பு நிறத்தவர்களாக உள்ளதை பார்க்கலாம். இவர்களில் கருப்பு நிறம் பெற்றவர்கள் தன்னுடைய நிறம் இவ்வாறு உள்ளதே! என்று மனம் வருத்தப்படுவதுண்டு. குறிப்பாக இது போன்ற குறைபாடுள்ள பெண்களை திருமணம் முடிக்க அதிகமான ஆண்கள் முன்வருவதில்லை. 

இதனால் தாங்கள் விரும்பும் மாப்பிள்ளையை திருமணம் முடிக்க ஆசைப்பட்டாலும் அது நடப்பதற்கு நிறம் தடையாகி விடுகிறது. ஏதோ வந்த மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து காலத்தை ஓட்டுகின்றனர். இது போன்றவர்களுக்கு நிறம் குறையாகிவிடுகிறது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

💠 அறிவு குறைந்தவர்கள் 💠

கூர்மையான, சிந்தித்து பார்க்கக்கூடிய, அறிவுபடைத்தவர்கள் உலகில் சாதனை படைக்கின்றனர். டாக்டராக, என்ஜினியராக, வக்கீலாக, நீதிபதியாக, விஞ்ஞானியாக பல பதவிகளைப் பெற்று உயர்ந்த அந்தஸ்தில் இருக்கின்றனர். ஆனால் படிக்கத் தெரியாத பாமர மக்கள் தங்களுக்கு கிடைத்ததை வைத்து போதுமாக்கிக் கொண்டு வாழ்பவர்களும் இருக்கின்றனர். 

ஆனால் இவர்களுக்கு தன்னால் பல முயற்சிகள் செய்தும் சாதிக்க முடியவில்லையே! திறமை இருந்தும் வெற்றி பெறமுடியவில்லையே! செல்வந்தர்களாக, ஆகமுடியவில்லையே! இதனால் மக்கள் மத்தியில் மதிப்பும் அந்தஸ்தும் குறைந்தவர்களாக இருக்கிறோம் என்ற கவலை ஏற்படுகிறது.

🔘 நோயால் பாதிக்கபட்டவர்கள் 🔘

மனிதனாகப் பிறந்துள்ள அனைவருக்கும் நோய் வராமல் இருப்பதில்லை. அவ்வப்பொழுது வந்துபோய் வரும் நோய்களால் நாம் கவலைப்படுவது கிடையாது. ஆனால் நிரந்தரமாக, கடுமையான, கொடுமையான நோய்களால்தான் மனிதர்களாகிய நாம் கவலைப்படுகிறோம். புற்று நோய் காசநோய், எய்ட்ஸ், தீரா வயிற்று வலி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னுடைய அறுபது வருட காலமும் மன வேதனைக்கு ஆளாகின்றனர். 

சில நோய்களால் சமுதாயத்தால் புறகணிக்கபடும்போது மிகவும் வருத்தப்பட்டு நொந்துபோகின்றனர். இப்படி ஏதோ ஒரு வகையில் இழப்பை சந்தித்தவர்களாகவே இருப்போம். இதற்கு வழியோதும் இல்லையா என்றால் கண்டிப்பாக உண்டு.
இந்த உலகில் நாம் இழந்ததற்கும், கஷ்டபட்டதற்கும், மனவேதனைக்கு ஆளானதிற்கும், அல்லாஹ் மறுமையில் அதற்குரிய கூலியை தருவதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

🙋‍♂இன்ஷா அல்லாஹ் தொடரும்

தன்னம்பிக்கை ஊட்டும் விதி

👨‍👩‍👧‍👦இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்திலும் பலமான உயிரினங்கள் உண்டு. பலவீனமான உயிரினங்களும் உண்டு. இதில் குறிப்பாக மனிதன் உடல் உறுப்புகள் இழந்தோ அல்லது பிறக்கும் போதே ஊனமுள்ளவனாகவோ பிறந்தால் மனவேதனைப்படுகிறான். தீராத நோய்கள் ஏற்பட்டு அதனால் மனவேதனை படுகிறான்.

🤔✔ சிந்திக்கும் அறிவு குறைவால் தன்னால் பெரிய அளவு சாதிக்க முடியவில்லையே என்று கவலைப்படுகிறான். இதுபோன்று எண்ணெற்ற விசயங்களில் ஒருவர் அறிவால், சிந்தனையால், ஆற்றலால், உடல் வலிமையால், ஆரோக்கியத்தால், சிறப்புக்குரியவராகத் திகழ்வார். அதே வேளையில் இன்னொருவர் மேலே சொன்ன அனைத்து விசயங்களிலும் ஒருபடி கீழே இருப்பார். அல்லது மிகவும் கீழ் நிலையில் இருப்பார். இந்த நிலையை சந்திக்கும்போது எல்லாம் என் தலை விதி என்று சலித்துக் கொண்டு மனமுடைந்து மூலையில் முடங்கி போய்விடுவான்.

ஆனால் இஸ்லாமிய மார்க்கம் இவ்வாறு பாதிக்கபட்டோருக்கு திருமறைக்குர்ஆன் மூலம் ஆறுதல் கூறுகிறது.
‎‏
👉📖 உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியைஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்

(அல்குர்ஆன் 57:23)

இந்த வசனம் இழந்தவர்கள் என்ற ஒருசாராரைப் பற்றியும் வழங்கப்பட்டவர்கள் என்ற இன்னொரு சாராரைப் பற்றியும் கூறுகிறது.

தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தியுள்ளான் என்று அல்லாஹ் கூறுகின்றான். இழப்பவர்களே! அதிகம் பாதிக்கப்படுபவார்கள். அவர்கள் இந்த உலகில் எவற்றையெல்லாம் இழக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

🔰 உடல் உறுப்புகள் இழந்தவர்கள் 🔰

👉🌍 உலகில் உள்ள ஆண்கள் பெண்களில் கண் இல்லாதவர்களும், வாய் பேசமுடியதவர்களும், காது கேட்காதவர்களும், கை,கால்களில் ஊனமுள்ளவர்களும் இருக்கின்றனர். இவர்களின் மனநிலையை பார்த்தோம் என்றால் நாங்கள் என்ன பாவம் செய்தோம். எதற்காக இந்த இழிநிலை? கண் இல்லாதவர் கூறுகிறார்…! 

எங்களால் இந்த உலகத்தைப் பார்க்க முடியவில்லை. என்ற கவலை! வாய் பேசமுடியதவர்களுக்கு நான் நினைக்கும் கருத்துக்களை என்னால் சொல்ல முடியவில்லை என்ற கவலை! காது கேட்காதவர்கள், நல்ல விசயங்களை என்னால் கேட்க முடியவில்லை என்ற கவலை! போலியோவால் பாதிக்கப்பட்ட கை, கால்களில் ஊனமுள்ளவர்களுக்கு சொந்தக்காலில் நின்று எங்கேயும் செல்ல முடியவில்லை, உழைக்க முடியவில்லை என்ற கவலை ஏற்படும்.

🙋‍♂இன்ஷா அல்லாஹ் தொடரும்