அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Saturday, May 20, 2017

பெற்றோர்களை நோவினை* செய்வது பெரும்பாவமாகும்

தினம் ஒரு நபி மொழி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' *பெற்றெடுத்த தாய்மார்களுக்கு துன்பம் தருவதை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமானதாக* (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்''
அறிவிப்பவர்:*முகீரா பின் ஸுஹஃபா (ரலி)
நூல்:* புகாரி (2408)

'' தனக்கு அமுதூட்டியவர்களான (பெற்றோர்களை) சீரழிப்பதே ஒருவன் (நரகம்) செல்வதற்கு போதுமான பாவமாகும்''* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:*அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல்*: அஹ்மத் ( 6208)

நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், *''அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)''*என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்*: அனஸ் (ரலி)
நூல்*: புகாரி (2653)

No comments:

Post a Comment