அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Monday, April 24, 2017

உலக ஆதாயம் தேடி வழி தவறாதீர்!!!




"பிரார்த்தனையில் எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக! என்று கோருவோரும் மனிதர்களில் உண்டு, ஆனால், இ(த்தகைய)வருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை." (அல்குர்ஆன் 2:200)

"எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரங்களையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயல்களுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் பூரணமாக அவர்களுக்குக் கொடுத்திடுவோம், அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். (எனினும்) மறுமையிலோ, இத்தகையோருக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறோன்றுமில்லை, அவர்கள் செய்த யாவும் இங்கு அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே." (அல்குர்ஆன் 11: 15,16)
 
"எவன் மறுமையின் பயிரை விரும்புகிறானோ, அவனுடைய பயிரை(விளைச்சலை) நாம் அவனுக்காக அதிகப்படுத்துகிறோம். எவன் இம்மையின் பயிரை (மட்டும்) விரும்புகிறானோ, நாம் அவனுக்கு அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம். எனினும், அவனுக்கு மறுமையில் யாதொரு பங்குமில்லை." (அல்குர்அன் 42:20)

மேற்கண்ட வசனங்களை நன்றாக ஊன்றிக் கவனித்துப் பார்த்தால், ஒன்று நன்றாக விளங்குகிறது. இவ்வுலகத்தில் நல்ல வசதியுடனும், சகல சவுகரியங்களுடனும் வாழ வேண்டும் என்று கேட்பவருக்கு அவர் கேட்பவை இங்கேயே கொடுக்கப்பட்டு விடும் என்று தெளிவாக விளங்குகிறது. இவ்வுலக நன்மையை மட்டும் கேட்பவருக்கு, (தான் நாடியவருக்கு) "கொடுத்து விடுவேன்" என்று அல்லாஹ் திரும்பத் திரும்பக் கூறுவதால், இதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. 

வேறு எங்கெங்கோ, அலையோ அலை என்று அலைய வேண்டியதில்லை. நாகூர், அஜ்மீர், ஏர்வாடி என்று ஓட வேண்டியதில்லை. அல்லாஹ்விடமே, வேறு ஏஜன்சி (தரகர்) இன்றியே பெற்றுக் கொள்ளலாம். மேலும் மெளலிதுகள், ராத்திபுகள் என்று கத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
மேற்கண்ட அனாச்சாரங்கள் யாவும், இவ்வுலக நன்மையை வேண்டியே செய்யப்படுகின்றன. ஏதாவது ஒரு தீராத நோய் வந்துவிட்டால், நமது பாத்திஹா மெளலானாக்கள், ஏர்வாடியில் சென்று படு! என்று கூறுவதைத்தான் பார்க்கிறோம். விபரம் அறிந்தவர்கள் கூட, "அல்லாஹ்வே இவ்வுலக நன்மையை (மட்டும்) நாடுபவருக்கு, கொடுக்கிறேன் என்று அல்குர்ஆனில் கூறுகிறான்; எனவே, அல்லாஹ்விடமே கேள்" என்று கூறுவதை நாம் கொடுக்க முடிவதில்லை.

இந்த சூழ்நிலையில், இவ்வுலக நன்மையை நாடி அலையும் தர்ஹா கூட்டங்களையும், பாத்திஹா, மெளலிது, புர்தா, கூட்டங்களையும் பார்த்தவுடன், ஸஹாபாக்கள் ஞாபகம் வருகிறது. அவர்களை "ரலியல்லாஹு அன்ஹும்" – (அல்லாஹ் அவர்களைப் பொருத்திக் கொள்வானாக!) என்று துஆ செய்கிறோம். காரணம் என்ன? மந்திரத்தில் மாங்காயா? என்று மருக வேண்டியதில்லை. இஸ்லாத்தை முழுமையாகச் செயலில் காண்பித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,அவர்களிடையே இருந்தபோதுகூட, மேலே சொல்லப்பட்ட திருவசனங்களுக்கும் பயந்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இவ்வுலக நன்மைக்காக மட்டும் துவாச் செய்யச் சொல்ல மிகவும் அஞ்சினார்கள். பின்வரும் நிகழ்ச்சியைக் கவனிக்கும் பொழுது இது நன்றாக நிரூபணம் ஆகிறது.

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அதாஃபின் அபிரபாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், "நான் உங்களுக்கு ஒரு சுவர்க்கலோக பெண்மணியைக் காண்பிக்கவா?" – என்றார்கள். அவர் "ஆம்" என்றார். இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு கருநிற பெண்ணைக் காண்பித்து, " இப்பெண், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நான் காக்காய் வலிப்பு நோயால் அவதிப்படுகிறேன், அப்பொழுது என் உடைகள் களைந்து உடல் வெளியில் தெரிந்து விடுகிறது என் நோய் குணமாக அல்லாஹ்விடம் துவாச் செய்யுங்கள் என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீ இந்த நோயை பொறுமையாக கசித்துக் கொண்டால், உனக்கு சுவர்க்கம் கிடைக்கும். அல்லது நீவிரும்பினால், உனது நோயைப் போக்கத் துவா செய்கிறேன்", என்று கூறினார்கள். அதற்கு அப்பெண்பொறுமையுடன் தாங்கிக் கொள்கிறேன். ஆனால், அந் நோய் தாக்கும் பொழுது, எனது உடல், ஆடை விலகி, வெளியில் தெரியாமல் இருக்க துவாச் செய்யுங்கள், என்று கூறினார். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறே துவாச் செய்தார்கள். (அறிவிப்பவர் : அதாஃஇப்னு அபிராஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : புகாரி, முஸ்லிம்)

ஆகவே, அப்பெண்மணி, மறுமையில் கிடைக்கப் போகும் அளவிலாப் பலன்களை நினைத்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தன் நோய் குணமாகத் துவாச் செய்யச் சொல்லவில்லை. கஷ்டத்துடன் தாங்கிக் கொண்டார். அல்லாஹுவும் தன் திருமறையில் "மறுமையில் வாழ்க்கைதான் மிக்க மேலானாதும் நிலையாதும் ஆகும்" என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 87: 17) என்பதில் அப்பெண் மனநிறைவு அடைந்தது கவனிக்கத்தக்கது.

ஆனால், இன்றோ ஒன்றையுமே செய்ய முடியாத, கபுருகளிடம் போய், நோய் தீர, உலக ஆதாயங்களுக்காக, நிற்பதைப் பார்க்கிறோம்.
இந்தச் சம்பவத்திலிருந்து, நாம் பெறும் படிப்பினை, உலகில் வறுமை, நோய், மற்றும் கஷ்டம் தீர, அல்லாஹ் அனுமதித்த வழிகளிலேயே முயற்சிகள் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட முறையான முயற்சிகளில் நமக்கு இவ்வுலகில் நமது விருப்பங்கள் நிறைவேறாவிட்டாலும், மறுமையில் அவற்றிற்கு பெரும் பேறுகள் கிட்டும் என்று அல்லாஹ் மீது உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டும்.

அல்லாஹ் அல்லாதவர்களிடம் முறையிடுவது கொண்டு, நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முயலுவது கூடாது. பொறுமையைக் கொள்ள வேண்டும் என்பதை மேற்படி குர்ஆன் வசனங்களும், ஹதீதும் நமக்கு வலியுறுத்துகின்றன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த கழிப்பறை ஒழுக்கங்கள் பல உள்ளன.


1. கழிவரையில் நுழையும்போது முதலில் இடது காலை வைத்து நுழைய வேண்டும். கழிவரையில் இரு பாதங்கள் வைக்குமிடத்தில் முதலில் வலது காலை வைத்து உட்கார வேண்டும். எழுந்திருக்கும்போது இடது காலை எடுத்து வைத்து வர வேண்டும். (இப்னு மாஜா)

2. முடிந்தவரை குனிந்து ஆடைகளைத் திறக்க வேண்டும். (நூல்: அபூதாவூ)

3. இறைவசனம் அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருநாமம் கண்ணுக்குத் தென்படுகிற அளவு எழுதப்பட்டுள்ள மோதிரம் போன்ற வஸ்துக்களை கழிவரையில் நுழையும் முன்பு களைந்து விட்டுச் செல்ல வேண்டும். (நூல்: மிஷ்காத்)

4.. கழிவறையில் கிப்லாவை முன்னோக்கவும் கூடாது. பின்னோக்கவும் கூடாது. (நூல்: மிஷ்காத்)

5. மலஜலம் கழிக்கும்போது அந்தரங்க உறுப்பை வலது கையால் தொடாமல் இருக்க வேண்டும். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

6. மலஜலத் துளிகள் உடலில் படாது பார்த்துக் கொள்ள வேண்டும். கப்ருடைய (மண்ணறையுடைய) வேதனை பெரும்பாலும் சிறுநீர்த்துளிகளில் கவனக்குறைவாக இருப்பதினால் ஏற்படுகிறது. (நூல்: திர்மிதீ)

7. கழிவறை இல்லாத இடங்களில் காடு, கரைகளுக்குச் செல்லும்போது பிறர் பார்வை படாது பார்த்துக் கொள்ள வேண்டும். (நூல்: திர்மிதீ)

8. சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யுங்கள். கப்ருடைய வேதனைகளில் பெரும்பாலானவை இதில் அலட்சியம் செய்வதாலேயே ஏற்படுகிறது. (நால்கள்: இப்னு மாஜா, தார குத்னி, ஹாக்கிம்)

9. சிறுநீர் கழிப்பதற்காகச் செல்லும்போது சிறுநீர்த்துளிகள் தெறிக்காத, நீர்களை உறிஞ்சி விடும்படியான மண்பகுதியைத் தேடிச் செல்ல வேண்டும். (நூல்: திர்மிதீ)

10. சிறுநீர், மலம் கழிக்கும்போது பேசக்கூடாது. அதனால் அல்லாஹ் கோபப்படுகிறான். (நூல்: புகாரி)

11. பொது இடங்களில், நடைபாதைகளில், நிழல் தரும் மரத்தடியில் அசுத்தம் செய்யக் கூடாது. (நூல்: புகாரி)

12. வலது கரத்தைக் கொண்டு பிறவி உறுப்பைத் தொடக்கூடாது. (நூல்: புகாரி)

13. தகுந்த காரணமின்றி நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக் கூடாது. (நூல்: அபூதாவூது)

14. பொந்தில், தேங்கி நிற்கும் தண்ணீரில், குடிநீரில் சிறுநீர் கழிக்கலாகாது. (நூல்: அபூதாவூது)

15. ஆற்றோரங்களில் சிறுநீர் கழிக்காதீர்கள். அதுபோல் சாலையின் உயர்ந்த பகுதிகளிலும், நிழல் நிறைந்த இடங்களிலும் சிறுநீர் கழிக்காதீர்கள். (நூல்: அபூதாவூது)

16. கழிவறைக்குச் செல்லும்போது தலைப்பாகை அணிவதும், காலணி அணிவதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை. தலையில் அணியும் சிறு தலைப்பாகை அளவிலான கனம் (பாரம்) எவ்வகையில் மலஜல வெளியேற்றத்திற்குத் துணை புரிகிறது என்பது ஆராய்ச்சிக்கு உரியது.

காலணி அணிவது குறித்து இன்றைக்கு மருத்துவர்கள் ‘கழிப்பறைக்கு செல்லும்போது காலணி அணிவது உகந்தது என்றும், பெரும்பாலான கிருமிகள் கால்களின் வழியே மலஜலத் துவாரம் மூலம் உடலில் ஊடுருவுகின்றன’ என்றும் குறிப்பிடுகிறார்கள்.

கழிவரையில் நுழைகின்றபோது  
بِسْمِ الله ) اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِـكَ مِـنَ الْخُـبْثِ وَالْخَبائِث )
''யா அல்லாஹ்! ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.'' (நூல்: புகாரி, முஸ்லிம்)

Saturday, April 22, 2017

*கட்டாயக் கல்யாணம்*

தினம்  ஒரு நபி  மொழி 


முஸ்லிம் பெண் ஒரு முஸ்லிமான ஆணை மணமுடிக்க விரும்பினால் அவளது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது பெற்றோரின் கடமையாகும். பணம், பதவி, குலம், அந்தஸ்து போன்ற எந்தக் காரணத்தையும் கூறி பெண்களின் விருப்பத்தை நிராகரிப்பது மறுமையில் கடுமையான குற்றமாகும்.
*பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.*
திருக்குர்ஆன் 2:232
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புவோர் இப்படித் தான் நடக்க வேண்டும் என்று கடுமையான வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான். பெண்களின் இந்த உரிமையைப் பறிப்பவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்வால் விசாரிக்கப்படுவார்கள் என்பதற்காகவே இவ்வாறு கூறுகிறான்.
பெண்கள் தமது விருப்பத்தைத் தெரிவிப்பதைக் கூட பாவச் செயலாகக் கருதும் நிலை சமுதாயத்தில் நிலவுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண்கள் இது போன்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
*நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து அல்லாஹ்வின் தூதரே என்னை மணமுடித்துக் கொள்கிறீர்களா? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை மணமுடிக்க விரும்பாததால் மற்றொருவருக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்.*
நூல்: புகாரி 2311, 5029, 5120
வெட்கமில்லாமல் இப்படிக் கேட்கலாமா? என்று அவரை நபிகள் நாயகம் (ஸல்) கண்டிக்கவில்லை. விபச்சாரம் செய்வதற்குத் தான் வெட்கப்பட வேண்டுமே தவிர திருமணம் செய்யுமாறு கேட்க எந்த வெட்கமும் தேவையில்லை.
*உம்மு சுலைம் (ரலி) அவர்கள் முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவரை அபூதல்ஹா மணந்து கொள்ள விரும்பினார். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றவள். நீரும் இஸ்லாத்தை எற்றுக் கொண்டால் உம்மை மணந்து கொள்கிறேன் என்றார்கள். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.*
நூல்: நஸயீ 3288
பெண்கள் தமது வாழ்க்கைத் துணைவரைத் தேர்வு செய்யும் உரிமை பெற்றுள்ளார்கள் என்பதற்கு இவை சான்றுகள்.
ஆனாலும் அவர்கள் பொறுப்பாளர்கள் வழியாகத் தான் திருமணத்தை நடத்திட வேண்டும். பொறுப்பாளர்கள் அவர்களின் உரிமையை மறுக்கக் கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.

Friday, April 21, 2017

ஜகாதுல் பித்ர்

ஜகாதுல் பித்ர் விபரம்:

பித்றா கடமையாவதற்கு நிபந்தனைகள்:
பெருநாளின் பகலிலும் அடுத்து வரும் இரவிலும் தனக்கும், தனது செலவின் கீழ் இருப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டிய உணவு, உடை, குடியிருக்கும் இடம் போன்றவைகளையும், வேலைக்காரர்களுக்குரிய செலவு, கடன் இவைகளையும் கொடுத்து மீதமிருந்தால் பித்றா கொடுப்பது கடமையாகும். தாமதாமாகக் கொடுக்க வேண்டிய கடன் பித்றாவை தடை செய்யாது.
அளவு:
ஊரில் பெரும்பாலும் உணவாகப் பயன்படுத்தப்படும் பொருளிலிருந்து ஒவ்வொருவருக்கும் 4 முத்து வீதம் நமது நாட்டு அளவு படி 3 லிட்டர்கள் அல்லது 2 கிலோ 400 கிராம் கொடுப்பது கடமையாகும்.
ஷாபிஈ மத்ஹபில் உணவுப் பொருட்களைத்தான் கொடுக்க வேண்டும். அதன் விலையை கொடுத்தால் பித்றா நிறைவேறாது.தான் வசிக்கும் ஊரிலுள்ள ஏழைகளுக்கு பித்றா கொடுப்பது கடமை. வேற்றூரிலுள்ள ஏழைகளுக்கும் பித்றா கொடுக்கலாம்.
கொடுக்கும் நேரம்:
பெருநாள் தொழுகைக்கு முன்பு பித்றா கொடுப்பது சுன்னத்தாகும். பின் கொடுப்பது மக்ரூஹ் ஆகும். எனினும், சொந்தக்காரர்களையும், பக்கத்து வீட்டாரையும் எதிர்பார்த்து சூரியன் மறைவதற்குள்ளாக கொடுப்பது சுன்னத்தாகும்.
பெருநாள் அன்று சூரியன் மறையும் வரை பிற்படுத்துவது ஹறாமாகும். பித்றாவை ரமலான் முதல் பிறையிலிருந்தும் கொடுக்கலாம்.

நோன்பு மிகச் சிறந்த இயற்கை மருத்துவம்

ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பது (ஹைலு, நிபாஸை விட்டும் துப்புரவான பகுத்தறிவுள்ள பருவமெய்திய சக்தியுள்ள) ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமையாகும்.
------------------------------------
#நோன்பின் பர்ளுகள்:
1. நோன்பு நோற்கும் இரவில் நோன்பின் பெயரைக் குறிப்பிட்டு நிய்யத் வைக்க வேண்டும்.
நிய்யத்: 'நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி பர்ளி ரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹித் தஆலா – இந்த வருஷத்து ரமலான் மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன்' என்று நிய்யத் செய்து கொள்ள வேண்டும்.
2. நோன்புடைய ஞாபகம் இருப்பததுடனே வேணும் என்றே எந்த பொருளும் உள்ளே சேராமல் பகல் முழுவதும் தடுத்துக் கொள்ள வேண்டும்.
-------------------------------
#நோன்பின் சுன்னத்துகள்:
1. ஸஹர் செய்வது (ஸஹருடைய நேரமாகிறது இரவுக்கு மேல் ஆரம்பமாகி சுப்ஹு வக்து வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னால் முடிகிறது)
2. பஜ்ரு உதயமாவதை பயப்படாமல் இருக்கும் காலமெல்லாம் ஸஹரை பிற்படுத்துவது.
3. சூரியன் மறைந்தது உறுதியாகிவிட்டால் உடனடியாக நோன்பு திறப்பதின் மீது விரைந்து கொள்வது.
4. மூன்று பேரீத்தம்பழம் அல்லது மூன்று திராட்சை பழம் அல்லது மூன்று மிடர் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது.
5. நோன்பு திறந்தவுடன் 'அல்லாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வ அலைக்க தவக்கல்து வஅலா ரிஜ்கிக அப்தர்து, பஃதக்ப்பல் மின்னீ'- இறைவா! உனக்காக நோன்பு வைத்தேன். உன்னையே நம்பிக்கை வைத்தேன். உன்னுடைய ரிஸ்கின் மீதே நோன்பு திறந்தேன். எனது நோன்பை நீ ஏற்றுக் கொள்வாயாக! என்று துஆ
ஓதுவது.
6. மற்றவர்களுக்கும் நோன்பு திறக்க கொடுப்பது.
7. ஹைலு நிபாஸ், ஜனாபத் போன்றவற்றை விட்டும் சுத்தமாவதற்காக பஜ்ருக்கு முன்னால் குளிப்'பது.
8. பகல் நேரத்தில் ஆகாரத்தின் மீது ஆசை கொள்வதை விட்டும், வாசனைப் பொருட்களை நுகர்வதை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வது.
9. ரமலான் பிந்திய பத்தில் அதிகமாக ஸதகா கொடுப்பதும், தன் குடும்பத்தின் மீது விசாலமாக செலவு செய்வதும், சொந்தக்காரர்கள் அக்கம்பக்கத்தவர்கள் மீது உபகாரம் செய்வதும் சுன்னத்தாகும்.
10. குர்ஆனை அதிகமாக
ஓதுவது.
11. அதிகமாக இபாதத்து செய்வது.
12. ரமலான் மாதம் பிந்திய பத்தில் இஃதிகாப் இருப்பது கண்டிப்பான சுன்னத்தாகும்.
------------------------------
#நோன்பின் மக்ரூஹ்கள்:
1. ஹைலு, ஜனாபத் குளிப்பை பஜ்ரு உதயமாகும்வரை பிற்படுத்துவது.
2. ஆகாரப் பொருள்களை ருசி பார்ப்பது.
3. பகல் முழுவதும் வாய் மூடி இருப்பது.
4. பகல் முழுவதும் வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது.
.5.உளு செய்யும்போது வாய், மூக்குக்கு தண்ணீரை அளவு கடந்து செலுத்துவது.
6. லுஹருக்குப் பின்னால் பல் துலக்குவது.
--------------------------------
#நோன்பை முறிக்கும் காரியங்கள்:
1. தான் நோன்பு என்று தெரிந்து கொண்டு உடல் உறவு கொள்வது.
2. வேண்டுமென்றே விந்தை வெளிப்படுத்துவது.
3. வேண்டுமென்றே வாந்தி எடுப்பது.
4. காரல் போன்றவை வாயின் எல்லைக்கு வந்தபின் விழுங்குவது.
5. நோன்பு என்ற உணர்வுடன் ஏதேனும் ஒரு வஸ்துவை உள்ளே செலுத்துவது.(வாயில் ஊறும் உமிழ்நீரை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதால் நோன்பு முறியாது)
6. நோன்பு வைத்துக் கொண்டு நீரில் முங்கி குளிப்பதால் வாய், மூக்கு போன்ற ஓட்டைகளில் தண்ணீர் செல்லுபடி ஆகுவது.
7. ஹைலு, நிபாஸ், மதமாற்றம், பைத்தியம், பகல் முழுவதும் மயக்கம் போன்றவைகள் ஏற்படுவது.
-------------------------------
#நோன்பின் பலனை கெடுக்கும் காரியங்கள்:

1. பொய் சொல்வது
2. புறம் பேசுவது.
3. கோள் சொல்வது
4. இட்டுக் கட்டுவது.
5. பொய் சாட்சி சொல்வது.
6. பிறரை ஏசுவது.
----------------------------------
#நோன்பை விடுவதற்கு அனுமதியுள்ளவர்கள்:
1. தங்கடமான வியாதியஸ்தர்கள்.
2. நீண்ட பிரயாணம் செய்யக் கூடியவர்கள்
3. தாகத்தால், பசியால் நாசத்தை பயந்தவர்கள்.
இந்த மூன்று நபர்களும் நோன்பை விடுவது கூடும். ஆனால் இவர்கள் ஒவ்வொரு இரவும் நோன்பை நிய்யத்து செய்து கொள்ள வேண்டும். மத்தியில் கஷ்டம் ஏற்பட்டால் நோன்பை திறந்து விடலாம்.
ஆனால் இவர்கள் திரும்ப களா செய்ய இயலாது என்றிருந்தால் ஒரு நோன்புக்கு ஒரு முத்து வீதம் அதாவது முக்கால் லிட்டர் அரிசி வீதம் பிதியா கொடுக்க வேண்டும். இவர்கள் நோன்பை களா செய்ய வேண்டாம்.
கர்ப்பிணியான பெண்கள் நோன்பு வைத்தால் வயிற்றி;ல் உள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்படுவதை பயந்தாலும், குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண் நோன்பு வைத்தால் பால் சுரக்காது என பயந்தாலும் நோன்பை விடலாம். ஆனால் இவர்கள் விட்ட நோன்பை களா செய்வதுடன் ஒரு நோன்புக்கு ஒரு முத்து வீதம் பிதியாவும் கொடுக்க வேண்டும்.

மன்னிப்பு உங்கள் பார்வையில்_எப்படி ?


எந்த மாதிரியான தவருக்கு மன்னிப்பே கிடையாது ???
மனிதன் தவறு செய்யகூடியவனே ஒருவன் செய்த தவருக்கு மன்னிப்பு கேட்ட பிறகும் நீங்கள் அவருக்கு வழங்கும் மன்னிப்பு எந்த நிலையில் இருக்கும்??
மன்னிப்பா?
பழி வாங்கும் உணர்வா?
எவரேனும் பிறர் செய்த தீங்கைப் பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்" (42:43)

Saturday, April 15, 2017

முஸாஃபஹா கைகுலுக்குதல்

தினம் ஒரு நபி மொழி

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கை குலுக்குவதும் நபிவழியாகும்.

*'ஏமன் வாசிகள் வந்துள்ளனர். முஸாஃபஹா மூலம் முதன் முதலில் நமக்கு முகமன் கூறியவர்கள் அவர்களே'* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அபூதாவூத் 4537

*ஏமன் மக்களின் முஸாஃபஹா செய்யும் வழக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதன் மூலம் அங்கீகாரம் செய்கின்றனர். கஃபு பின் மாலிக் (ரலி) அவர்கள் உள்ளிட்ட மூன்று தோழர்கள் தபூக் போரில் பங்கெடுக்கத் தவறியதால் அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில நாட்கள் சமூகப் புறக்கணிப்பு செய்திருந்தனர். பின்னர் அம்மூவரும் மன்னிக்கப்பட்டதாக அல்லாஹ் ஒரு வசனத்தை அருளிய பின் கஃபு பின் மாலிக் (ரலி) அவர்கள் பள்ளிக்குச் சென்றனர். அது பற்றி அவர்கள் குறிப்பிடும் போது நான் பள்ளிவாசலில் நுழைந்தேன். அங்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தனர். தல்ஹா (ரலி) அவர்கள் உடனே என்னை நோக்கி வந்து என்னிடம் முஸாஃபஹா செய்து நல்வாழ்த்து தெரிவித்தார்* என்று குறிப்பிடுகிறார்கள்.

நூல் : புகாரி 4418

Tuesday, April 11, 2017

உறவைப் பேணுபவர்


தினம் ஒரு நபி மொழி

ا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பதிலுக்கு பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல் : புகாரீ 5991

Monday, April 10, 2017

தற்பெருமை

தினம் ஒரு நபி மொழி

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ”யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், ”தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் .147

அநீதியிழைக்கப்பட்டவரின்

தினம் ஒரு நபி மொழி

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை“ என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி .2448

www.Islamicmeidachina.ml

ஆடை

தினம் ஒரு நபி மொழி

5783. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ தன்னுடைய ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்

5787. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகத்தில் (புகுவார்). என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்

www.IslamicmediaChina.ml

சோதனையானால் நன்மையே!


தினம் ஒரு நபி மொழி


யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவருக்கு நோயையும் அதுபோன்ற துன்பத்தையும் ஏற்படுத்துவான் என்பதை கீழ்க்கண்ட ஹதிஸிலிருந்து விளங்கலாம்.

سَمِعْتُ سَعِيدَ بْنَ يَسَارٍ أَبَا الْحُبَابِ يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُصِبْ مِنْهُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), புகாரி 5645

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ فَمَسِسْتُهُ وَهُوَ يُوعَكُ وَعْكًا شَدِيدًا فَقُلْتُ إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا وَذَلِكَ أَنَّ لَكَ أَجْرَيْنِ قَالَ أَجَلْ وَمَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى إِلَّا حَاتَّتْ
عَنْهُ خَطَايَاهُ كَمَا تَحَاتُّ وَرَقُ الشَّجَرِ

நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கண்டிருந்த போது அவர்களிடம் நான் சென்று அவர்களை(ப் பரிவோடு) தொட்டேன். அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நான், தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே! (இந்தத் துன்பத்தின் காரணமாக) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் உண்டுதானே! எனக் கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள், ஆம். ஒரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் (அதற்கு ஈடாக), மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவருடைய தவறுகள் அவரை விட்டு உதிராமல் இருப்பதில்லை என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல் புகாரி (5661)