அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Tuesday, February 28, 2017

அழகிய வினாக்கள்; அற்புதமான பதில்கள்

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.

📝 *01) நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?*

👉         நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.

📝 *02) மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?*

👉         தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

📝 *03) நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?*

👉         ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

📝 *04) நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.*

👉         ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.

📝 *05) நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?*

👉         நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்

📝 *06) நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?*

👉         அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்

📝 *07) அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?*

👉         அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்

📝 *08) ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?*

👉         எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்

📝 *09) துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?*

👉         ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

📝 *10) முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?*

👉         நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்

📝 *11) கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?*

👉         குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்

📝 *12) பாவங்கள் குறைய வழி என்ன ?*

👉         அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்

📝 *13) கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?*

👉         அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்

📝 *14) அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?*

👉         பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்

📝 *15)  உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?*

👉         விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்

📝 *16) அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?*

👉         அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்

📝 *17) அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?*

👉         (F) பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்

📝 *18) நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?*

👉         அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்

📝 *19) பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?*

👉         கண்ணீர், பலவீனம், நோய்

📝 *20) நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?*

👉         இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது

📝 *21) அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?*

👉         மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது

📝 *22) எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?*

👉         கெட்ட குணம் – கஞ்சத்தனம்

📝 *23) எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?*

👉         நற்குணம் – பொறுமை – பணிவு

📝 *24) அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?*

👉         மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்

தாடி இல்லாதவன் ஆண் இனத்தை சார்ந்தவன் அல்ல

#தாடி

☘.ஆண் சிங்கத்திற்க்கு தான் பிடரி மயிர் இருக்கும்
☘.ஆண் மயிலுக்கு தான் தோகை இருக்கும்.
☘.ஆண் யானைக்கு தான் தந்தம் இருக்கும்.
☘. சேவலுக்கு தான் கொன்டை இருக்கும்.
☘.இதே போன்று ஒரு ஆண் மகனுக்கு தான் தாடி இருக்கும்...

தாடி இல்லாதவன் ஆண் இனத்தை சார்ந்தவன் அல்ல.............

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 حدثنا محمد بن منهال حدثنا يزيد بن زريع حدثنا عمر بن محمد بن زيد عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال خالفوا المشركين وفروا اللحى وأحفوا الشوارب وكان ابن عمر إذا حج أو اعتمر قبض على لحيته فما فضل أخذه

இணை வைப்பாளர்களுக்கு மாறுசெய்யுங்கள்: தாடிகளைவளரவிடுங்கள். மீசையை ஒட்டநறுக்குங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 5892

அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:

 حدثني أبو بكر بن إسحق أخبرنا ابن أبي مريم أخبرنا محمد بن جعفر أخبرني العلاء بن عبد الرحمن بن يعقوب مولى الحرقة عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم جزوا الشوارب وأرخوا اللحى خالفوا المجوس

மீசையை ஒட்டக் கத்தரியுங்கள்.தாடியை வளர விடுங்கள். மஜூசி(நெருப்புவணங்கிகளுக்கு)களுக்கு மாறுசெய்யுங்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 435

#மருத்துவ பயன்....

தாடி வைப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்.
மருத்துவ ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதானது ஒரு மனிதனை தொண்டை, பல்ஈறு சம்பந்தமான நோய்களிலிருந்து தடுக்கின்றது. மேலும், தாடியானது முகத்தின் சருமத்திற்கு கெடுதி விளைவிக்கக்கூடிய இரசாயன வகைகளிலிருந்தும், மாசுள்ள வளிமண்டலத்திலிருந்தும் கெடுதி ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படும். தாடி சருமத்தை மூடி காணப்படுவதால் sebaceous சுரப்பிகளின் மூலம் பக்டீரியா தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கப்படுவதால் முகப்பருக்கள், புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
தாடி முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நாடியையும் அபாயங்களிலிருந்து காப்பாற்றும். அத்துடன் தாடி வைப்பதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.
மாற்று மத அமெரிக்க மருத்துவர் Charles Holmes என்பவரின் கருத்து.
இந்த மருத்துவர் கூறுகின்றார் “எனக்குப் புரியவில்லை ஏன் மக்கள் தாடி வைப்பதில் அதிருப்தி அடைகின்றனர். மக்கள் தலையில் முடி வளர்த்திருக்கும் போது முகத்தில் முடி வளர்ப்பதில் என்ன தவறு இருக்கின்றது? தலை முடி கொட்டும் போது வெட்கத்திற்குள்ளாகும் மனிதன் தாடியை முழுவதுமாக மழிப்பது என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகின்றது.
நீண்ட தாடியானது மனிதனின் கழுத்துப் பகுதியை குளிர்த் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது. நாம் அறிந்த வகையில் தாடி வளர்ப்பதானது மத அனுஷ்டானம் மட்டும் இன்றி மனிதனுக்கு நிறைய நன்மை பயக்கக்கூடியதாகவுள்ளது. முன்னைய காலத்து மருத்துவர்கள், தத்துவஞானிகள் கூட தாடி வளர்த்திருக்கிறார்கள். உதாரணமாக சார்ள்ஸ் டார்வின், லுயிஸ் பெஸ்டர், ஆபிரகாம் லிங்கன் இன்னும் பலர். ஆனால் மக்கள் சமீப காலமாகத் தான் மக்கள் தாடி வைப்பதிலிருந்து விலகி நடக்கின்றனர்.
குறிப்பாக நம் முஸ்லிம் சமுதாயமே இந்த சுன்னத்தை விட்டு விட்டது.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நபியின் சுன்னத்தான தாடியை வைக்க கூடிய பாக்கியத்தை தருவானாக.............

அல்கவ்ஸர்

தினம் ஒரு நபி மொழி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (
அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்“ என்பேன். அதற்கு இறைவன் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்“ என்று சொல்வான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 6585 அத்தியாயம் : 81.

புனிதப் போரில் கொல்லப்பட்டவர்களைக் குளிப்பாட்டக் கூடாது

தினம் ஒரு நபி மொழி



அல்லாஹ்வின் பாதையில் நியாயத்துக்காகப் போரிடும் போது எதிரி நாட்டுப் படையினரால் கொல்லப்படுபவரைக் குளிப்பாட்டாமல் இரத்தச் சுவடுடன் அடக்கம் செய்ய வேண்டும்.

*உஹதுப் போரில் கொல்லபட்டவர்களைக் குறித்து'இவர்களை இவர்களின் இரத்தக் கறையுடனே அடக்கம் செய்யுங்கள்!'என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களைக் குளிப்பாட்டவில்லை.*

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 1346, 1343, 1348, 1353, 4080

நன்மையை ஏவித் தீமையைத் தடுத்துக் கொண்டே இருங்கள்,

தினம் ஒரு நபி மொழி

என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, அவசியம் நீங்கள் நன்மையை ஏவித் தீமையைத் தடுத்துக் கொண்டே இருங்கள், இல்லையென்றால் விரைவில் அல்லாஹுதஆலா உங்கள் மீது தனது வேதனையை இறக்கிவிடுவான். பிறகு நீங்கள் துஆச் செய்தால் அல்லாஹுதஆலா உங்களது துஆவை ஏற்றுக்கொள்ளமாட
்டான்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைபத்துப்னு யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
திர்மிதி-2169

அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான்

தினம் ஒரு நபி மொழி



இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான்.
அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான்.
(மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன.
எந்த அளவிற்கென்றால் மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 6000
அத்தியாயம் : 78.
நற்பண்புகள்

Thursday, February 23, 2017

என் தலை எழுத்து..!

யாருக்கு எது நடந்தாலும் 'இறைவன் உனக்கு எழுதி வைத்த தலைஎழுத்து என்று சொல்லுவார்கள்' அப்படியிருக்கும் போது அதன் படிதான் மனிதனும் நடக்கின்றான்.குடிக்காரன் குடிக்கிறான் கெட்டவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள், இதுவும் இறைவன் எழுதிய எழுத்து என்றால், ஏன் தண்டனை தர வேண்டும் இறைவன். இது என் தோழியின் கேள்வி.

அவர்கள் விளங்கும் விதத்தில் நாமும் சில கேள்விகளைக் கேட்போம்.
இறைவன் விதித்தப்படிதான் எல்லாமும் நடக்கின்றது என்று கூறினால் அதே இறைவன் தான் தூதர்களை அனுப்பி, வேதங்களை வழங்கி 'தூதர் காட்டிய வழியிலும், வேதத்தின் வழியிலும் வாழுங்கள்' என்கிறான். இதுவும் இறைவனின் விதிதான். விபச்சாரம் செய்து விட்டு 'இது விதி' என்று சொல்லுபவர்கள், தவறான காரியங்களில் ஈடுபட்டு விட்டு 'இது விதி' என்று கூறுபவர்கள் இறைவன் விதித்த "நல்வழியில் செல்லுங்கள்' என்ற விதியை ஏன் புறக்கணிக்கிறார்கள். அதுவும் விதிதானே.. விபச்சாரம் செய்வதற்கோ, திருடுவதற்கோ, கொலை செய்வதற்கோ, மோசடிப் போன்ற அநேக ஈனச்செயல் செய்வதற்கோ அதில் ஈடுபடுபவர்கள் புறத்திலிருந்து ஒரு முயற்சி இருக்கத்தான் செய்கின்றது. அவர்களின் சுய முயற்சி இல்லாமல் இதுவெல்லாம் நடப்பதில்லை. இதே முயற்சியை அவர்கள் நல்லக்காரியங்களில் செய்து விட்டு 'விதிப்படிதான் நடக்கின்றது' என்று சொல்லிப் பார்க்கட்டும் அப்போது விதியின் அர்த்தம் புரியும். விதிவாதம் பேசுபவர்கள் தங்கள் வீட்டில் ஒரு திருட்டுப் போனால் விதிப்படி போய்விட்டது என்று பேசாமல் இருப்பதில்லை. அதை கண்டுப்பிடிக்க முயல்கிறார்கள், காவல் நிலையம் செல்கின்றார்கள். சொந்த பந்தஙகள் சொத்துப் போன்றவற்றை அபகரித்துக் கொள்ளும் போது விதியென்று மெளனமாக இருக்காமல் நீதிமன்றம் செல்கின்றார்கள். வீட்டில் இருக்கம் கன்னிப் பெண்களுக்கு 'விதிப்படி கல்யாணம் நடக்கும்' என்றில்லாமல் நல்லக் கணவனைத் தேடி அலைகின்றார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் அவர்கள் சிந்தித்தால் விதி என்னவென்பது அவர்களுக்கு விளங்கும்.

இஸ்லாம் விதியை நம்ப சொல்கின்றது. அதன் அர்த்தம் என்ன?
எந்த ஒரு காரியம் நம் கட்டுப்பாட்டையெல்லாம் மீறி நடக்கின்றதோ அது இஸ்லாமியப் பார்வையில் விதி. மரணம் நம் கட்டுப்பாட்டையெல்லாம் கடந்து நடப்பதாகும் அது விதி. இழப்பு (உதாரணம் சுனாமி) நம் பாதுகாப்பு அரண்களை மீறி நடந்ததாகும் அது விதி. விபத்துக்களில் உயிரிழப்பது, கடும் நோய்களால் அவதிப்பட்டு மடிவது, குழந்தைப்பேறுக்காக அனைத்து முயற்சிகளையும் செய்த பிறகும் குழந்தைப் பாக்கியம் இல்லாமல் போவது, பருவ மழைத் தவறி விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுவது போன்ற உதாரணங்களை இங்கு சொல்லலாம். ஈராக், பாலஸ்தீனம், சோமாலி, ஆப்ரிக்காவின் அநேக நாடுகளாக இருந்தால் இதே உதாரணங்கள் அங்கு வேறு விதமாக வெளிப்படும். நம் கட்டுப்பாட்டுக்குள் ஒரு தவறு நடந்தால் அதற்கு நாம் தான் பொறுப்பு. (உதாரணம் தற்கொலை) இதற்கு இறைவன் தண்டனை அளிப்பான். வட்டி - சூது - திருட்டு - அபகரிப்பு போன்ற பாவங்கள் நம் கட்டுப்பாட்டுக்குள் இருந்து நடப்பதாகும். அதாவது அதற்கு நாமே முயற்சிக்கிறோம் என்பதால் அதற்கு தண்டனையுண்டு. ஏனெனில் இவ்வாறு நடந்துக் கொள்ளக் கூடாது என்று இறைவன் தான் விதித்துள்ளான்.

இவற்றைப் புரிந்துக் கொண்டால் விதி என்றால் என்னவென்று விளங்கும்.
சிலர் எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது என்று காரணம் காட்டி வணக்க வழிபாடுகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். "நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நல்லவர்களாக ஆவோம்" என்று நமது விதியில் இருந்தால் நமது முயற்சி இல்லாமலேயே ஈடுபட்டு விடுவோம். நாம் நல்லவர்களாக மாட்டோம் என்று நமது விதியில் எழுதப்பட்டிருந்தால் நாம் முயற்சி செய்வதால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை எனவும் அவர்கள் நினைக்கின்றனர். விதியை நம்பச் சொல்கின்ற இறைவன் தான் முயற்சிகள் மேற் கொள்ளுமாறும் நமக்குக் கட்டளையிடுகிறான் என்பதை மறந்து விடுகின்றனர்.  மேலும் அவர் உண்மையிலேயே விதியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே வணக்க வழிபாடுகள் செய்யாமல் இருக்கிறார் என்றால் எல்லா விஷயத்திலும் அவர் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பதில் மட்டும் 'விதி' இருப்பதாக இஸ்லாம் கூறவில்லை. இவ்வுலகில் ஒருவனுக்கு ஏற்படும் செல்வம், வறுமை போன்றவையும் பட்டம் பதவிகள் போன்றவையும் விதியின் அடிப்படையிலேயே கிடைக்கின்றன என்று தான் இஸ்லாம் கூறுகின்றது. இறைவணக்கத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு விதியின் மீது பழியைப் போடுபவர் இந்த விஷயத்திலும் அப்படி நடந்து கொள்ள வேண்டுமல்லவா? தனக்கு எவ்வளவு செல்வம் கிடைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதோ, அதன்படி செல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி அவர் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்க மாட்டார். மாறாக, செல்வத்தைத் தேடி அலைவார். இந்த அக்கறையை வணக்க வழிபாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் நினைக் காத்து முரண்பாடாகவும் உள்ளது. எனவே, விதியைப் பற்றி சர்ச்சைகளைத் தவிர்த்து விட்டு மனிதர்களால் அறிந்து கொள்ள இயலாத ஒன்றிரண்டு விஷயங்களை அல்லாஹ் வைத்திருக் கிறான் என்று முடிவு செய்து, விதியை நம்பியதால் கிடைக்கும் பயன்களை மனதில் நிறுத்தி, விதியை நம்புவது தான் நல்லது.

விதியை விளக்ககும் இறைவசனம்.
"உங்களுக்குத் தவறிவிட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ் வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். " (திருக்குர்ஆன் 57:23) 

உளவு பார்த்தபோது ,இஸ்லாத்தின் மகத்துவம் அறிந்த அமெரிக்கா

அமெரிக்காவின் 03.03 மில்லியன் சனத்தொகை கொண்ட முஸ்லிம் சமூகத்தையும் அதன் நடவடிக்கைகளையும் கண்காணிக்க, 2001 முதல் 2016 வரை சுமார் பதினைந்து வருடங்கள்,

பதினைந்தாயிரம் உளவாளிகள் மூலம், நாடு முழுவதும் உள்ள பள்ளிவாயில்கள், குர்ஆனிய வகுப்புகள், வழிபாட்டு மற்றும் சமூக நிகழ்ச்சிகளின் ரகசிய ஒலிப்பதிவுகள்,

மற்றும் கண்காணிப்புகள், உலக அளவில் உள்ள 7485 முஸ்லிம் பிரபலங்களின் மின்னஞ்சல்கள் என தேடித்துருவி உளவுபார்த்து,

எஃ.பி.ஐ. இன் பணிப்பாளர் 'ஜேம்ஸ் பி கொமி'யும் அதன் முன்னாள் அதிகாரி 'கேசி ஹன்னா'வும் சமர்ப்பித்த ஆய்வறிக்கையின் சாராம்சம் இது!

o   உலக மதங்களில் மிகப்பெரிய மதம் இஸ்லாம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், அது எந்த அளவு சர்வதேச அளவில் எல்லாரையும் ஈர்க்கத்தக்க மதம் என்ற எதார்த்தத்தை உணர்ந்து கொண்டோம்.

o   இஸ்லாமிய உலகம் எத்துணை அதி அற்புதமான செயல்திறன் மிக்க பகுதிகளைக் கொண்டி ருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டோம்.

o   முஸ்லிம்களின் பல இல்லங்களுக்குள் நாங்கள் ஊடுருவி ஆய்வு செய்தபோது, உணர்வுப்பூர்வமான அறபு எழுத்துக்களையும், திரைச்சீலைகளை யும் கண்டோம்.

o  இஸ்லாமிய இல்லங்களில் அலங்கரித்துக் கொண்டிருந்த நூலகங்களில் - நூல்களில் விரவிக் கிடந்த இறைத்தூதர் முஹம்மதின் நேரடி வார்த்தைகளான ஹதீஸ் (நபிமொழி)களால் பெரிதும் கவரப்பட்டோம்.

o  பல வகையான அரேபிய இந்தோனேசிய மற்றும் ஆப்பிரிக்க உணவுகளை ருசித்து உண்டோம். அத்தகைய உணவுகளை எங்கள் வாழ்நாளில் நாங்கள் சுவைத்ததே இல்லை. அவர்கள் அருந்தும் தேநீர் கூட தேனாமிர்தமாக இருந்தது. அதையும் அவர்கள் ரசித்து, ருசித்து அருந்தினார்கள்.

o  மேற்கத்திய பெண்கள் பெற்றுவரும் சொத்துரிமையை விட அதிகமான சொத்துரிமையை, முஸ்லிம் பெண்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்ற உண்மையையும் புரிந்து கொண்டோம்.

o  ஏன் முஸ்லிம்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை என்பது முதல், முஸ்லிம்களின் விடுமுறை நாள்கள் எவை, முஸ்லிம் பெண்கள் ஏன் தலையை மூடியவாறு உடையணிகிறார்கள் என்பது வரையிலான பல்வேறு வினாக்களுக்கு விடைகள் பெற்றோம்.

o  சில முஸ்லிம் குடிமக்களை அவர்களது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி பல நாள்களாக, பல வாரங்களாக, ஏன், சிலநேரம் பல மாதங்களாக தடுப்புக் காவலில் வைத்திருந்த போது, அவர்களிடமிருந்து இஸ்லாமின் உன்னதத் தன்மையை உணர்ந்தோம்.

o   பல்லாயிரக்கணக்கான அமெரிக்க முஸ்லிம்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த போது, அவர்களது கடன் திட்டங்கள், கணக்குகள் அனைத்திலும் வட்டி தவிர்ந்து கொள்ளப்பட்டிருந்தமையைக் கண்டு, எப்படி இப்படி என்று ஆச்சரியப்பட்டோம்.

o   சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐம்பெரும் தூண்களாகக் கருதப்படும் இஸ்லாமின் ஐந்து கடமைகளே முஸ்லிம்களின் ஆன்மிக வாழ்வை வழிநடத்துகின்றன என்ற கருத்தில் நம்பிக்கை யற்று இருந்தோம். ஆனால், அது உண்மை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டோம்.

o  இறுதியாக, 'என்னே, இனிமையான மக்கள்; என்னே, இனிய மார்க்கம்' என்று அதிசயித்து, 'இத்தருணத்தில் இஸ்லாமையும் அதன் உயரிய கலாச்சாரத்தையும் எங்களுக்குக் கற்றுத் தந்தமைக்காக அமெரிக்க வாழ் முஸ்லிம்களுக்கு எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறோம்' என அறிக்கை முடிவுற்றிருந்தது.
(இலங்கை அல்ஹஸனாத் -ஜன 2017 இதழ் - இரண்டு பக்கக் கட்டுரையின் சுருக்கம்)

o   சுப்ஹானல்லாஹ்! என்னே, ஆச்சரியம்...!

காற்று வாங்கப் போனேன்; ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்ற பாடலுக்கொப்ப, 'உளவு பார்க்கச்

சென்றோம்; முழு நிலவு பார்த்து நின்றோம்' என்ற உன்னத நிலை பாருங்கள்...!

அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...!

''அந்த அல்லாஹ், எங்கு சென்றுவிட்டான்..''

ஒரு நாள், அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனா நகரை விட்டு வெளியூருக்குப் பறப்பட்டார்கள். அவர்களுடன் நண்பர்களும் கூட இருந்தனர். வழியில் உணவு வேளை வந்தது. அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், நண்பர்களும் பசியாற அமர்ந்தனர்.

அச்சமயம், அங்கு ஆடுகளை ஓட்டிக்கொண்டு ஒரு இடையன் வந்தான். அவன் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தான். அவன் பசியால் நலிவுற்றிருப்பதை உணர்ந்த அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அவனையும் சாப்பிட அழைத்தார்கள்.

‘மன்னிக்க வேண்டும்! நான் நோன்பு நோற்றிருக்கிறேன். தங்களின் அன்பு அழைப்பை ஏற்று உணவருந்த முடியாத நிலையில் இருக்கிறேன்’ என்று அவன் தெரிவித்தான். கோடை வெயில் தகித்துக் கொண்டிருந்தது. பாலைவனத்தில் வீசும் ‘லூ’ எனும் அனல்காற்றுகடுமையாக வீசிக் கொண்டிருந்தது.

‘இந்த கடுமையான கோடைக் காலத்தில் - தன்னந்தனியே இருக்கையில் நோன்பு நோற்க வேண்டிய அவசியம் என்ன?’ என்று அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வினவினார்கள்.

‘நான் மறுமைக்காக நன்மைகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். ‘அத்துன்யா மஸ்ரஅதுல் ஆஃகிறதி’ - இந்த உலகம் மறுமைக்கான பயிரை – அதாவது நன்மைகளை விளைவித்துக் கொள்ளும் நிலமாகும்’ என்று அந்த ஆட்டிடையன் சொன்னான்.

அந்த சொல்லை அவன் நினைவு படுத்தியதையும், அதை அவன் கடைபிடிப்பதையும் கண்ட அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு மிகவும் வியப்படைந்தார்கள்.

மறுமைக்காக நன்மை சேகரிப்பவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான், ‘குலூ வஷ்ரபூ ஹனீஅம் பிமா அஸ்லஃப்தும் ஃபில் அய்யாமில் ஃகாலியா’ - அதாவது சென்ற நாட்களில் நீங்கள் சேகரித்து வைத்தவை (நன்மை) களின் காரணமாக (இப்போது) தாராளமாக இவைகளைப் புசியுங்கள், அருந்துங்கள்’ என்று.

அந்த சுவர்க்கக் கனிகளைச் சுவைத்து என்றென்றும் இன்புற்றிருக்கவே அந்த இடையன் விரும்பினான். இந்த உலகிலுள்ள அற்ப சுகத்திற்காக மறுமையின் பேரின்பத்தை இழக்க அவன் மனம் விரும்பவில்லை. அவன் உள்ளத்தை அறிந்து கொண்ட அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு உள்ளூர அவனுக்காக துஆச்செய்தார்கள். மேலும் அவனைச் சோதிக்கவும் விரும்பினார்கள்.

‘சகோதரனே! எனக்கு ஒரு ஆடு தேவை. என்ன விலை என்று சொல் பணம் தருகிறேன். ஆட்டை அறுத்துச் சமைத்து உனக்கும் தருகிறேன். நோன்பு திறக்க உனக்கு மிகவும் உதவியாக இருக்கும்’ என்றார்கள் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு.

‘மன்னிக்கவும், இந்த ஆடுகள் எனக்குச் சொந்தமானவை அல்ல. என் முதலாளியுடைவை. நான் அவரது அடிமை. எனக்கு இடப்பட்டுள்ள கடமையை மட்டுமே நான் செய்ய முடியும். வேண்டுமானால் என் முதலாளியிடம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்!’ என்றான் அந்த இடையன்.

அதற்கு இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘பரவாயில்லை. நீ ஆட்டை விற்றுப் பணம் பெற்றுக்கொள். உன் முதலாளி கேட்டால் ஆடு காணாமல் போய்விட்டது என்று சொல்லி விடு! உன் முதலாளிக்கு உண்மை எப்படித் தெரியப் போகிறது?’ என்றார்கள்.

‘மன்னிக்க வேண்டும்! பொய்யா சொல்லச் சொல்கிறீர்கள்! ஒர் உண்மை முஸ்லீமுக்கு அது அடுக்குமா? பாவத்தைச் சுமந்து நரகத்தில் வேதனைப்பட நான் தயாராக இல்லை. என் முதலாளி பார்க்காவிட்டாலும் அந்த எல்லாம் வல்ல அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனை நான் ஏமாற்ற முடியுமா?’ என்று கேட்டான் இடையன்.

அவனது பதில் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனதை நெகிழச் செய்தது. ‘ஃபஅய்னல்லாஹ், ஃபஅய்னல்லாஹ், (அந்த அல்லாஹ் எங்கு சென்றுவிட்டான்?, அந்த அல்லாஹ் எங்கு சென்றுவிட்டான்?) என்று அந்த இடையனின் நாவு உச்சரித்துக் கொண்டிருந்ததையும் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்.

இந்த சம்பவம் நமக்கும் ஒரு பாடமாக அமையட்டும். மறுமைக்கான விளைநிலமாக இவ்வுலகை பயன்படுத்தி இறையோனின் அளைப் பெறுவோம்.

Thursday, February 16, 2017

பெற்றோர்களுக்கு உதவி செய்யும் பிள்ளைகள்

தினம் ஒரு நபி மொழி 





நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்  :


“பெற்றோர்களுக்கு உதவி செய்யும் பிள்ளைகளுக்கு (எனது) வாழ்த்து உண்டாகட்டும் அவருடைய வயதை அல்லா அதிகப் படுத்துவானாக. ஆமீன்”
நூல்- புஹாரி


” பெற்றோரின் பிரியத்தில் தான் அல்லாஹ்வின் பிரியமும் இருக்கிறது. பெற்றோரின் கோபத்தில் தான் அல்லாஹ்வின் கோபமும் இருக்கிறது. ”
அறிவிப்பாளர் :அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஆஸ் (ரலி)
நூல்- திர்மிதி


“பெற்றோரை (மனம் நோகச் செய்து) அழுது கண்ணீர் வடிக்கச் செய்வது பெரும் பாவம் ஆகும் – தண்டனைக் குரியதாகும்.”
நூல்- புஹாரி

குர்ஆனில் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் அடுத்தபடியாக முன்னுரிமை கொடுக்கபடுவது பெற்றோர்கள்தான்.
அத்தகைய பெற்றோரின் பொருத்தம் இல்லாமல் சுவனத்தின் வாசல் திறக்கபடாது .
மற்றொரு சந்தர்ப்பத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் மனிதர் ஒருவர் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் மீது தாய் – தந்தையருக்குரிய உரிமைகள் என்ன? எனக்கேட்டார். அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘தாய் தந்தையரே உம்முடைய சுவனம் ஆவார்கள். அவர்களே உம்முடைய நரகமும் ஆவார்கள்’ என்று கூறியதாக அபூ 

உமாமா (ரலி) அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் : இப்னு மாஜா)

இந்த இரண்டு நபி மொழிகளும் பெற்றோரின் சிறப்பையும் மகத்துவத்தையும் எடுத்துக் காட்டக்கூடியதாக உள்ளன. அதனால் அவர்கள் உண்மையான மன மகிழ்ச்சி மிக்கவர்களாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அது ஒவ்வொரு பிள்ளையினதும் பொறுப்பு என்பதை இந்நபி மொழிகள் தெளிவுபடுத்திக்
கொண்டிருக்கின்றன.
மேலும் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் மனிதரொருவர் ஒருமுறை வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! என் அழகிய நட்புக்கு மனிதர்களில் அதிக தகுதியுடையவர் யார்?’ எனக் கேட்டார். அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘உன் தாய்’ என்று கூறினார்கள். அதன் பின்னர் ‘யார்?’ என அம்மனிதர் கேட்டார். அப்போதும் முஹம் மத் (ஸல்) அவர்கள் ‘உன் தாய்’ என்றார்கள்.
அதனைத் தொடர்ந்து அம்மனிதர் மீண்டும் 3வது தடவையாகவும் ‘யார்?’ எனக் கேட்டார். அதற்கும் முஹம்மத் (ஸல்) அவர்கள்‘உன் தாயே!’ என்றார்கள். எனினும் அம்மனிதர் நான்காவது தடவையாக ‘யார்?’ என வினவினார். அப்போது ‘உனது தந்தை’ என்றார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

பிடரி நரம்பினும் அருகிலுள்ளவன்

"நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலராக எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்." (அல்குர்ஆன்-18:102)

மாமறை அல்குர்ஆன் இவ்வாறு தெளிவாக அறிவித்த பின்பும், மக்கள் 'தர்கா' மாயைகளில் விழுவார் களேயானால் அவர்களைவிட கைசேதத்துக்குரியவர்கள் யார் இருக்க முடியும்?அல்லாஹ் அல்லாத எதனிடமும் அவரிடமும் நமது தேவைகளைக் கேட்பதும் பாதுகாப்புத் தேடுவதும் இறைக்கு இணை வைத்தல் என்னும் மாபெரும் கொடிய பாவமாகும். அதாவது 'ஷிர்க்' ஆகும். இது விஷயத்தில் நாம் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

பச்சைத் தலைப்பாகைகளுடன் பவனி வரும் போலி வேடதாரிகளை 'இறை நேசர்கள்' என்றும், 'நடமாடும் வலீ' என்றும் கருதி, நமது பொன்னான நேரத்தையும் - பொருளையும் செலவழித்து, நமது பகுத்தறிவையும் - இறை நம்பிக்கையையும் இறையச்சத்தையும் ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டு அவர்கள் பின்னாலேயே செல்வோமேயானால் நம்மைவிட நஷ்டமடைந்தவர்கள் எவரும் இலர்.

அல்லாஹ், அருள் மறையிலே அழகாக நமக்கு எச்சரிக்கின்றான்.

"நாங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகிறோம் என்று வாயளவில் கூறுபவர்களும் மனிதர்களில் உள்ளனர் (உண்மையில்) அவர்கள் விசுவாசிகள் அல்லர்". (அல்குர் ஆன் 2:8) மேலும்,

உயிருடன் நடமாடும் "மஜ்தூப்களை" (பைத்தியக்கார நிலையிலுள்ளவர்களை) "வலீ" என்று கற்பனை செய்து கொண்டு, அவர்களின் பிறந்த நாளின் போது அவர்களின் உடம்பில் சந்தனதைப் பூசுகின்ற கோலத்தையும் கேள்விப்படுகின்றேன்! அவர்கள் இறந்துவிட்டால் அடக்கம் பண்ணுவதற்கென்று தர்காக்கள் கட்டி வைத்திருப்பதையும் அறிகின்றேன். அம்மட்டோ? பிணி முதலான மன நோய்களுக்குள்ளானோர், அந்தத் தர்காவே சரணென - 40 நாட்கள் - 3 மாதங்கள் - 6 மாதங்கள் - ஓராண்டு என நேர்ச்சைக்காக தங்கியும் வருகின்றனர். இவ்வளவும் உயிருடன் வாழ்கின்ற ஒருவரின் பெயரால் கட்டிவைக்கப்பட்ட தர்காவில்?

கூத்துக்கள் கொஞ்சமா? நஞ்சமா? காகிதக் கூண்டுகளை இழுத்து "கும்மாளம்" போடும் நயவஞ்சக நரிக் கூட்டங்களான வேடதாரிகளை, அப்பாவி பாமர மக்கள், "உயர்ந்தோர் எனவும், "சாலச் சிறந்தோர்" எனவும் நம்பி, "மாலை - துண்டு" மரியாதை செய்வதையும் கண்ணுற முடிகின்றது! சிறு நீர் கழித்துவிட்டுத் துப்புரவு செய்யாத இந்த இறை நேச பக்தர்(?)களின் கால்களில் விழும் அப்பாவிகள் எண்ணற்றோர்!

பசுத்தோல் போர்த்திய புலிகளாய் பவனி வரும் இவர்கள், தங்கள் வயிறுகளை எப்படியெலாம் நிரப்புகின்றார்கள் தெரியுமா? ஏமாந்த அப்பாவி மக்கள் "தர்கா" உண்டியலில் போடும் காணிக்கைகளை-தாங்களே அங்கு "அடக்க" மாகியிருக்கும் "பாவாவின் நேரடி வாரிசுகள்" என பாமரர்களை நம்பவைத்து பங்கு ேபாட்டுக்கொள்கின்றனர்!

முகமூடிக் கொள்ளைக்காரர்களைவிட பயங்கரவாதிகளான இவர்களின் அட்டகாசங்களை இறை நம்பிக்கைக் கொண்டவர்கள் உணர்ந்து தெளிந்து - வல்ல நாயனான அல்லாஹ்வை மட்டுமே தங்களுக்குப் பாதுகாவலனாக ஏற்று ஈடேற்றம் பெற்று வாழ்வாங்கு வாழுங்கள்! எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே நம் அனைவரையும் நன்கு உணர்ந்தவன்!

நாம் செய்யக்கூடியவைகளை அறிந்து கொள்பவனாகவும் பார்ப்பவனாகவும் செவியுறுபவனாகவும் இருப்பவன் அல்லாஹ் ஒருவனே!

அல்லாஹ்வுக்கும் நமக்கும் தடுப்பும் இல்லை! திரையும் இல்லை!

ஆதலால் அல்லாஹ்வுக்கும் நமக்கும் இடைத்தரகர்கள் தேவையில்லை! பிடரி நரம்பினும் அருகிலுள்ள அல்லாஹ்விடமே நமது தேவைகளை எடுத்துரைத்து உதவி பெறுவோமாக!

இஸ்லாத்தைப் பற்றி, அறிந்துகொள்ள நிரம்பிவழிந்த மக்கள் கூட்டம் (படங்கள்)

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் "அப்படி என்ன தான் இஸ்லாம் சொல்கிறது" என்பதை அறிந்து கொள்வதற்காக சிகாகோ நகரில் உள்ள மஸ்ஜித் அல் ஹுதாவிற்கு வருகை தந்து இஸ்லாம் குறித்து கேள்வி எழுப்பினர். கேள்வி கேட்ட அனைவர்களுக்கும் இஸ்லாம் குறித்து விளக்கப்பட்டது.

வந்திருந்த அமெரிக்கர்கள் அனைவர்களும் ஆங்கில மொழிபெயர்ப்பு குரானை கேட்டு வாங்கி பெற்று சென்றனர். அனைவர்களுக்கும் குரான் இலவசமாக வழங்கப்பட்டது.

சிகாகோவில் மட்டுமல்ல, இஸ்லாம் குறித்த தேடல் அமேரிக்கா முழுவதும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள அணைத்து மசூதிகளிலும் தினம் தினம் ஆயிரக்கணக்கான அமெரிக்க மக்கள் வந்து இஸ்லாம் குறித்து கேட்டறிந்து செல்கின்றனர்....

இன்ஷா அல்லாஹ்...அமெரிக்கா இஸ்லாமிய தேசமாக மாறும் நாள், நாம் கணித்திருப்பதை விட மிக வேகமாகவே நெருங்கி கொண்டு இருக்கிறது.