அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Thursday, July 25, 2019

திருக்குர்ஆன்

அல் ஃபாத்திஹா – தோற்றுவாய்
மொத்த வசனங்கள் : 7
அல்ஃபாத்திஹா என்ற அரபுச் சொல்லுக்கு தோற்றுவாய், முதன்மையானது எனப் பொருள். திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாக இது அமைந்துள்ளதால் இந்தப் பெயர் வந்தது. திருக்குர்ஆனிலேயே இந்த அத்தியாயம் குறித்துச் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது. பார்க்க 15:87  

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.
2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
3. தீர்ப்பு நாளின்1 அதிபதி.
4. (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
5. எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக!
6, 7. நீ அருள் புரிந்து (உன்னால்) கோபிக்கப்படாத, பாதைமாறிச் செல்லாதவர்களின் வழியில் (செலுத்துவாயாக.)

No comments:

Post a Comment