அஸ்ஸலாமு அலைக்கும் ...
அன்புக்கினிய சகோதர சகோதரிகளே நமது உடன் பிறவா இஸ்லாமிய சகோதர சகோதரிகள் மற்றும் குழந்தைகள் சிரியா நாட்டில் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படும் காட்சிகளை நாம் பார்க்கிறோம் அவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்று சிலர் நிதி உதவி உணவு போன்றவட்டரை கொடுக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் ,ஆனால் சிலர் நம்மால் பொருளாதார உதவி செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருகின்றது அப்படிப்பட்டவர்கள் உங்களுடைய உதவியாக நீங்கள் உங்களுடைய தொழுகையில் அவர்களுக்காக நீங்கள் துஆ செய்தால் அது மிக பெரிய உதவி.
குனூத் நாஸிலாவின் நோக்கம்
குனூத்துன் நாஸிலா என்பது சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும். இதனை நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் ஏற்படும் காலகட்டங்களில் ஓதியுள்ளார்கள்.
நபியவர்கள் இந்த சோதனைக் காலப் பிரார்த்தனையை மிகவும் சுருக்கமாகத்தான் ஓதியுள்ளார்கள் என்பதை அவர்களின் நடைமுறையில் இருந்தும் அறிந்து கொள்ளலாம். பின்வரும் ஹதீஸில் நபியவர்கள் எவ்வாறு சோதனைக் கால பிரார்த்தனை செய்தார்கள் என்பது இடம் பெற்றுள்ளது.
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (8 / 104)
6393- حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ ، حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ يَحْيَى ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الْعِشَاءِ قَنَتَ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு (சோதனைக்கால) குனூத்' ஓதினார்கள். அதில்,
இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர் களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்கு வாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக!
என்று பிரார்த்தித்தார்கள்
நூல் : புகாரி (6393)
நபியவர்கள் செய்த பிராரத்தனையின் அளவை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
எனவே நாமும் இதே அளவிற்கு மிகவும் நீண்டு விடாமல் சோதனைக்கால பிரார்த்தனையைச் செய்ய வேண்டும்.
யா அல்லாஹ் ! சிரியாவில் பாதிக்கப்படும் முஸ்லிமான பலவீனமான ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பாயாக!
அவர்களுக்கு உன் உதவியை இறக்கி அவர்களைப் பலப்படுத்துவாயாக!
இறைவா சிரியாவில் அநியாயம் செய்யும் கூட்டத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக!
என்பது போன்ற பிரார்த்தனைகளை நாம் செய்யலாம்.
கைகளை உயர்த்தி பிரார்த்திக்க வேண்டும்.
இப்படிக்கு,
இஸ்லாமிக் மீடியா