பூமியில் தான் வாழ முடியும்
💁🏻♂🌍 நாம் வாழ்கின்ற பூமியைப் போலவே இன்னும் பல கோள்கள் இருப்பதையும், பூமியைப் போலவே அவை சுற்றிச் சுழல்வதையும் திருக்குர்ஆன் கூறுகிறது. விண்வெளிப் பயணம் கூட சாத்தியம் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.
💁🏻♂✔🌍 ஆனாலும் பூமியில் தான் மனிதன் வாழ முடியும்; வேறு எந்தக் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறது.
'உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன' என்றும் கூறினோம்.
📖 திருக்குர்ஆன் : 2:36
'உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன' என்று (இறைவன்) கூறினான்.
📖 திருக்குர்ஆன் 7:24
'அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்' என்றும் கூறினான்.
📖 திருக்குர்ஆன் 7:25
💁🏻♂🌍 பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் இதில் ஏற்படுத்தினோம்.
📖திருக்குர்ஆன் 7:10
அவனது கட்டளைப்படி வானமும், பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்.
📖திருக்குர்ஆன் 30:25
💁🏻♂🌍 'பூமியிலிருந்து மீண்டும் எழுப்பப்படுவீர்கள்' என்ற சொற்றொடர் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய சொற்றொடராகும். 'எல்லா மனிதர்களும் அழிக்கப்பட்ட பின் அனைவரும் பூமியிலிருந்து எழுப்பப்படுவார்கள்' என்பது ஒரு மனிதன் கூட பூமிக்கு வெளியே வாழ முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
💁🏻♂💠 இதில் தான் வாழ்வீர்கள் என்ற சொற்றொடர் 'பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதர்கள் இயற்கையாக வாழ முடியாது' என்பதை எடுத்துரைக்கிறது. சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்றெல்லாம் கூறினாலும் அது நிரூபிக்கப்படவில்லை.
💁🏻♂🌍🗣மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.
மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு வெப்பமும், குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது.
சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனைக் கரிக் கட்டையாக்கி விடும்.
சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும்.
🔰💁🏻♂உயிர் வாழ அவசியமான காற்றும் பூமியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில், அல்லது சந்திரனில் தங்குவதை வாழ்வது என்று கூறக் கூடாது. அது இயற்கைக்கு மாற்றமானது.
💁🏻♂✅ அதை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாகச் சுழல்வதால் தான் கோடை, குளிர், வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன.
வருடமெல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது.
❌✍எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற இயலும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும்.
எனவே இதுவும்📖 இறை வேதம் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.
No comments:
Post a Comment