அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Tuesday, October 24, 2017

இஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்!

முஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து முதல்முறையாக பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “தான் எப்போதும் கனேடியர்களின் உரிமைக்காகவே குரல் கொடுப்பேன். சுதந்திரம் மற்றும் உரிமை ஆகியவற்றின் கோட்டுபாடுகளே தமக்கு முக்கியமானவை. அதனைத்தான் மக்கள் தன்னிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்.

அந்த வகையில் தான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளதனைப் போன்று பெண்கள் எதனை அணிய வேண்டும். எதனை அணியக் கூடாது என்பதனை சொல்லும் செயலை அரசாங்கங்கள் செய்யக்கூடாது” என கூறினார். மூஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் 62ஆம் இலக்க சட்டமூலம் கியூபெக் மாகாண சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறிருக்க மேற்படி சட்டமானது பிரெஞ்ச் மொழி பேசும் கனேடிய மாகாணமான கியூபெக்கில் முஸ்லிம் பெண்களை புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் விமர்சிக்கின்றன.மேற்படி புதிய தடைச் சட்டம் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment