அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Friday, June 9, 2017

ரமலானில் தஹஜ்ஜத் மற்றும் இஃப்தார் நேரங்களில் கண்டிப்பாக துஆ கேளுங்கள்..... ..

என்னையும் உங்கள் #துஆ வில் சேர்த்து கொள்ளுங்கள்:
--------------------------------
1.இறைவா! எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக.

2.இறைவா! முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக.

3.இறைவா! ரமலான் உடைய அருட்கொடைகளையும் பரக்கத்துகளையும் எங்களுக்குநிறைவாக தந்தருள்வாயாக!

4.இறைவா எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக! மேலும் ஹலாலான ரிஸ்கை த‌ந்தருள்வாயாக!

5.இறைவா! இஸ்லாமிய சட்டத்தின்படி முழுமையான முறையில் செயல் படக் கூடியவ‌ர்க‌ளாக‌ எங்களை ஆக்கியவைப்பாயாக!

6.இறைவா! நீயே எங்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக! மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றிவைப்பாயாக! மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

7.இறைவா! லைலத்துல் கத்ர் இரவை பெறக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வயாக!

8. இறைவா! ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றக்கூடிய பாக்கியத்தை எங்களிக்குத் தந்தருள்வாஆக!

9.இறைவா! பொய் புறம், கோபம்,பொறாமை இன்னும் சண்டை சச்சரவுகளை விட்டும் எங்களை காப்பாயாக!

10.இறைவா!வறுமையின் பயம் மற்றும் கடன் சுமையை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!

11.இறைவா!எங்களின் சிறிய பெரிய பாவங்களை மன்னிப்பாயாக!

12.இறைவா! தஜ்ஜாலுடைய குழப்பங்கள், ஷைத்தான் மற்றும் மனோ இச்சைகளின் தீங்குகளை விட்டும் எங்களை காப்பாயக!

13.இறைவா! முழுமையான பர்தா முறையில் பெண்களை வாழச்செய்வாயாக!

14.இறைவா! சிறிய பெரிய எல்லா நோய்களை விட்டு எங்களை வாழச்செய்வாயாக!

15.இறைவா! இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!

16.இறைவா! நீயும் உன்னுடைய தூதரும் காட்டித்தந்த வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக!

17.இறைவா பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழ வைப்பாயாக!

18.இறைவா! நாளை மறுமை நாளில் பெருமனார் (ஸல்) அவர்களின் பொற்கரத்தால் ஹவ்ளுள் கவ்தர் தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக!

19.இறைவா! மறுமை நாளில் பெருமனார் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு அருள்வாயாக!

20.இறைவா! உன்னுடைய திருப்பொருத்தத்தை அடையக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக!

21. இறைவா! மரண வேதனை, மண்ணரை வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

22.இறைவா! இறைவா! முன்கர் நக்கீர் உடைய கேள்வி கனக்கை எங்களுக்கு லேசாக்கி வைப்பாயாக!

23. இறைவா! கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக!

24.இறைவா! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழைய செய்வாக!

25. இறைவா! கியாமத் நாளில் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

26.இறைவா! கியாமத் நாளில் இழிவுகலை விட்டும் எங்களை மூமீனான ஆண், பெண் அனைவரையும் காப்பாற்றுவாயாக!

27.இறைவா! எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுபாயாக!

28.இறைவா! கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயக!

29.இறைவா! நேரான பாதையில் எங்களை வழிநடத்துவாயாக!

30.இறைவா! உன்னுடைய அருளை கொண்டு எங்களுடைய அனைத்து பாவத்தையும் மன்னித்து எங்களை சொர்க்கத்தில் நுழைய செய்வாயாக!

யா அல்லாஹ்!
நபி மூஸாவை காக்க கடலை பிளந்தவனே!

தொட்டிலில் குழந்தையாக இருந்த ஈஸா நபியை பேச வைத்தவனே!

மீனின் வயிற்றில் இருந்த யூனுஸ் நபியை உன் சக்தியால் காப்பற்றியவனே!

கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அய்யூப் நபியை உன் கருணையினால் குணப்படுத்தியவனே!

என் இரட்சகனே!

மகத்தான உன்னுடைய பெயரால் கேட்கிறேன்!

துக்கம், கவலை, நெருக்கடி, வியாதி, இவை அனைத்தையும் விட்டு என்னை காப்பாற்றுவாயாக!

நான் துக்கத்தில் ஆழ்ந்தால் என்னை மகிழ்ச்சியுடையவனாக ஆக்குவாயாக!

எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் உன்னை அல்லாமல் மற்றவரிடம் என்னை தள்ளி விடாதே!

நிச்சயமாக நீ என்னால் தாங்க முடியாத கஷ்டத்தை கொடுக்க மாட்டாய்!

என்னை படைத்தவனே!
என் வாழ்கையை உனது கரத்தில் வைத்திருப்பவனே!

என்னுடைய நற்பாக்கியமும், துர்பாக்கியமும் உன் கையிலே இருக்கின்றன!

ஏக இறைவா! என்னுடைய உள்ளத்தை மகிழ்ச்சி உடையதாக ஆக்குவாயாக!

இவ்வுலகமே எனக்கு ஒன்று சேர்ந்து நன்மை செய்ய நாடினாலும் எனக்கென்று நீ எழுதி வைத்ததை தவிர எந்த நன்மையையும் எனக்கு கிடைக்காது என்று நான் ஈமான் கொண்டுள்ளேன்

உலகமெல்லாம் ஓன்று சேர்ந்து எனக்கு துன்பம் இழைக்க முயற்சித்தாலும் எனக்கு எதிராக நீ எழுதிய துன்பம் மட்டுமே என்னை அடையும் என்பதை நான் நம்புகிறேன்!

ஏக இறைவா! என் உள்ளத்தில்நிறைய தேவைகள் இருக்கின்றன!

உன்னையல்லால் வேறு யாரிடமும் அதை சொல்ல முடியாது. என்னுடைய ரகசியங்களும் என் ஆழ் மனதில் புதைந்து உள்ளவை களையும் நீ மட்டுமே அறிவாய்!

“குன்” ஆகுக என்று சொன்னால் அனைத்தும் ஆகிவிடும் என்று சொன்னவனே!
என்னுடைய விருப்பங்களை நோக்கி (குன்) “ஆகிவிடு” என்று சொல்வாயாக!

நீ என்னுடன் இருப்பதால் எனக்கு யாரிடமும் எந்த தேவையும் இல்லை.

எனக்கு நீ வழி காட்டு. என்னுடைய காரியங்களை நீ திட்டமிட்டு நிறைவேற்று.

நான் தவறான வழியில் செல்லும் போது என்னை நேரான வழியில் திருப்பிவிடு.

வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கு கட்டுப்பட்டவனாக வாழ்ந்து மரணிக்கின்ற பொழுதும் உனக்கு கட்டுப்பட்டவனாக மரணிக்கின்ற பாக்கியத்தை தந்தருள்வாயாக!

யா அல்லாஹ் . . . . .
எங்கள் பாவங்களை மன்னித்து
விடு

யா அல்லாஹ் . . . .
நாங்கள் செய்த தவறுகளை
மன்னித்து விடு

யா அல்லாஹ் . . .
கப்ருடைய வேதனையிலிருந்து
நரக நெருப்பிலிருந்தும்
எங்களை பாதுகாப்பாயாக..

No comments:

Post a Comment