அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Saturday, October 13, 2018

தினம் ஒரு குர்ஆன் வசனம்


அல்லாஹ்வே இப்பூமியை உங்களுக்கு நிலையானதாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். உங்களுக்கு வடிவம் தந்தான். உங்கள் வடிவங்களை அழகுற அமைத்தான். தூய்மையானவற்றை உங்களுக்கு வழங்கினான். அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.

திருக்குர்ஆன் 40:64

Friday, October 12, 2018

தினம் ஒரு குர்ஆன் வசனம்


பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.

திருக்குர்ஆன் 28:83

Thursday, October 11, 2018

தினம் ஒரு குர்ஆன் வசனம்


இவர்களுக்கும், அவர்களுக்கும், அனைவருக்கும் உமது இறைவனாகிய நாம் நமது அருளை அதிகமாகக் கொடுப்போம். உமது இறைவனின் அருள் மறுக்கப்பட்டதாக இல்லை.

திருக்குர்ஆன் 17:20

Wednesday, October 10, 2018

தினம் ஒரு குர்ஆன் வசனம்*

"அல்லாஹ் அல்லாதவர்களையா இறைவனாகக் கருதுவேன்? அவனே அனைத்துப் பொருட்களின் இறைவன். (பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்'' என்றும் கூறுவீராக!
திருக்குர்ஆன் 6:164

Tuesday, October 9, 2018

தினம் ஒரு குர்ஆன் வசனம்

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.
திருக்குர்ஆன் 4:171

Monday, October 8, 2018

தினம் ஒரு குர்ஆன் வசனம்

அவர்கள் எழுந்து "நமது இறைவன் வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாவான். அவனையன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்'' என்று அவர்கள் கூறியபோது அவர்களது உள்ளங்களை உறுதிப்படுத்தினோம்.
திருக்குர்ஆன் 18:14

Sunday, October 7, 2018

தினம் ஒரு குர்ஆன் வசனம்

ஒன்றை நாம் நாடினால் "ஆகு' எனக் கூறுவதே நமது கூற்றாகும். உடனே அது ஆகி விடும்.
திருக்குர்ஆன் 16:40

Saturday, October 6, 2018

தினம் ஒரு குர்ஆன் வசனம்

"இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது' என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 16:116

Friday, October 5, 2018

தினம் ஒரு குர்ஆன் வசனம்

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் புகழுக்குரியவன்; தேவைகளற்றவன்.
திருக்குர்ஆன் 22:64

Thursday, October 4, 2018

தினம் ஒரு குர்ஆன் வசனம்

அளவு, நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்!
திருக்குர்ஆன் 83:1

Monday, October 1, 2018

தினம் ஒரு குர்ஆன் வசனம்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!
திருக்குர்ஆன் 33:70