அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..., இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் தெரிந்து கொள்ள இணைவீர் இஸ்லாமிக் மீடியா

Monday, March 5, 2018

வறுமை சிறப்பிற்குரியது


வறுமை, கஷ்டம் ஏற்பட்டால் அதனை சோதனை என்று விளங்காமல். இறைவன் நம்மை தண்டித்து விட்டான் என்று என்ணும் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலர் இறைவன் நம் துஆவை யெல்லாம் ஏற்கமாட்டான். இது முஸீபத்து என்று எண்ணி கவலைப் படுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்த வரை, வறுமை என்பது சிறப்பிற்குரியது.

3241- حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ ، حَدَّثَنَا سَلْمُ بْنُ زَرِيرٍ ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ



اطَّلَعْتُ فِي الْجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الْفُقَرَاءَ وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاء

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நான் சுவர்க்கத்தை எட்டிப் பார்த்தேன் அதில் மிக அதிகமானவர்களாக ஏழைகளைக் கண்டேன். நரகத்தை எட்டிப் பார்த்தேன். அதில் மிக அதிகமானவர்களாகப் பெண்களைப் பார்த்தேன்”

அறி : இம்ரான் பின்  ஹுஸைன் (ரலி),

நூல் : புகாரி 3241


Friday, March 2, 2018

ஜஸ்டின் ட்ருடோ -அல்லாஹ் அவருக்கு அருள் செய்யவேண்டும்

"உலகமே சிரியா மக்களின் அவல நிலையை கண்டும் இந்த அகதிகளை அரவணைக்க முடியாது என்கிறார்கள்.

வாழ இயலாமல்,உயிருக்கு பயந்து ஒருவழியாக படகில் தப்பித்து வந்தால் அண்டை நாடுகளும்,உலக பணக்கார நாடுகளும் சிரியா மக்களை வராதே என்கிறார்கள்.

ஆனால்,ஒரே ஒரு பிரதமர் அழைக்கிறார் என்றால் அது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அவர்கள் மட்டும் தான்.நாம் அனைவரும் அவருக்காக துஆ செய்யவேண்டும்.

எவ்வளவு மக்கள் வேண்டுமானாலும் என் நாட்டிற்கு வாருங்கள்.நான் உங்களை மனதார வரவேற்கிறேன் என கூறியதோடு மட்டுமல்லாமல் விமானங்களை அனுப்பி அனுப்பி அழைத்து வருகிறார்.

ஒவ்வொரு நாளும் 200,300 பேர் என சிரியா மக்களை அழைத்ததோடு மட்டுமல்லாமல் ஏர்போர்டிற்கு நேரடியாக சென்று அவர்களை சந்தித்து கட்டியணைத்து,முத்தமிட்டு வரவேற்பு தருகிறார்.

இனி நீங்கள் என் நாட்டு மக்கள்.என் குடிமக்கள் என கூறி கண்ணீர் விடுகிறார்.சமீபத்தில் கூட இவர் இந்தியாவிற்கு வந்து சென்றார். இவரை(மோடி) போன்ற தீவிரவாதிகளுக்கு இவர் சிம்ம சொப்பனமாக திகழ்வதால்தான் மோடி அவரை சந்திக்கவில்லை.

ஜஸ்டின் ட்ருடோ எனும் பிரதமர் மட்டும் தான் 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை அரவணைப்பேன் என்கிறார்.அங்கே அடிபட்டு சாகவேண்டாம்.அங்கு(சிரியா)யாரும் இனி உங்களை பார்த்துக்கொள்வது போல் தெரியவில்லை என தனது நாட்டை நோக்கி வரசொல்கிறார்.

ஜஸ்டினால் சிரியா ஆட்சியாளர் மீது போர் தொடுக்க இயலாது.அது மிக தொலைவு மட்டுமின்றி சர்வதேச சட்டங்களும் அதற்கு தடையாக உள்ளன.

சிரியா மக்களுக்கு உதவ ஜஸ்டினை போல ஒரு அறிவிப்பை சவுதி போன்ற பணத்தில் மிதக்கும் எந்த ஒரு ஆட்சியாளர்களும் செய்யவில்லை.கனடா பிரதமரான இவர் மட்டும்தான் அறிவித்துள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் இவர் செய்த இந்த செயலுக்காக அல்லாஹ் அவருக்கு அருள் செய்யவேண்டும்.அந்நாட்டிற்கு பரகத் செய்யவேண்டும் என துஆ செய்வோம்!"